‘இசி- தேசிய ரீதியிலான மோசடிக்காரர்’

SPR“பிஎன் -னிடம் இப்போது புதிய தந்திரங்கள் ஏதுமில்லை. பணம் மோசடி ஆகிய இரண்டை மட்டுமே அது  இப்போது சார்ந்துள்ளது”

‘வாக்காளர் பட்டியலில் உள்ள சிவப்பு, பச்சை நிற அடையாளக் கார்டுகள் பற்றி விசாரணை நடத்துங்கள்”

ஸ்டார்ர்: வாக்காளர் பட்டியல் “தில்லுமுல்லு’ செய்யப்பட்டுள்ளது என்பதில் சந்தேகமே இல்லை. என்றாலும்
உலகில் ‘மிகவும் தூய்மையான’ வாக்காளர் பட்டியல் அது என்று தேர்தல் ஆணைய (இசி) தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் துணிச்சலாகச் சொல்கிறார்.

அத்தகைய அப்பட்டமான அறிக்கை வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதற்குச் சமமாகும். அதன்
தோற்றத்தை எந்த வகையிலும் மாற்றப் போவதில்லை.

உண்மையில் அவரும் அவரது துணைத் தலைவரும் தேர்தல் ஆணையத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.   அதனைப் பொது மக்கள் கிண்டல் செய்யும் அளவுக்கு செய்து விட்டனர்.

பொது மக்கள் அவர்களுடைய அறிக்கைகளை பொருட்படுத்துவதே இல்லை. இசி மீது மக்கள் முற்றாக
நம்பிக்கை இழந்து விட்டனர்.

அடையாளம் இல்லாதவன்_40c3: சபா நிலைமை நமது நாட்டின் பாதுகாப்பு முக்கியம் என்பதை
உணர்த்தியுள்ளது. அரசியல் பிணைப்புக்கள் எவ்வாறு இருந்தாலும் சட்ட விரோத வாக்காளர்கள் பற்றி
அவசியம் விசாரிக்கப்பட வேண்டும்.

தகுதி இல்லாத சட்ட விரோத வாக்காளர்கள் இருப்பதாக மெய்பிக்கப்பட்ட பின்னர் தவறுகளைச் சரி செய்ய
மறுக்கும் நடவடிக்கை தேசத் துரோகமாகக் கருதப்பட வேண்டும்.

நமது பாதுகாப்பு குறித்து நாம் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. சுலு ஊடுருவல் அதனை நமக்குத்
தெளிவுபடுத்தி விட்டது.

அடையாளம் இல்லாதவன்#97893788: பட்டியலில் பெயர் இருந்தாலும் வாக்குச் சாவடிகளில் அத்தகைய
அடையாளக் கார்டுகளை வைத்திருப்பவர்கள் அனுமதிக்கப்படவே கூடாது.

அரசியல் கட்சிகள் மை கார்டுகளை நன்றாகச் சோதிக்க வேண்டும். அடையாளக் கார்டுகள் காலாவதியாகும்
தேதியைக் கொண்டவர்களும் வாக்களிக்க அனுமதிக்கப்படக் கூடாது.

அடையாளம் இல்லாதவன்#19098644: பிஎன் -னிடம் இப்போது புதிய தந்திரங்கள் ஏதுமில்லை. பணம் மோசடி   ஆகிய இரண்டை மட்டுமே அது இப்போது சார்ந்துள்ளது.

மக்கள் தங்கள் உரிமைகளையும் அரசாங்கத்தையும் மீண்டும் பெற வேண்டுமானால் தேர்தல் நாளன்று
அனைவரும் வாக்களித்து பிஎன் -னை முழுமையாக நிராகரிக்க வேண்டும்.

புதிய அரசாங்கம் மட்டுமே அம்னோ ஆட்சி ஏற்படுத்திய குளறுபடிகளைச் சரி செய்ய முடியும்.

தே தாரேக்: இசி- தேசிய ரீதியிலான மோசடிக்காரர். வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்த அது
வேண்டுமென்றே அப்பட்டமாக மறுக்கிறது. அந்தப் பட்டியலை துப்புரவு செய்ய அதற்கு மூன்று ஆண்டுகள்
அவகாசம் இருந்தது. ஆனால் எதுவும் செய்யவில்லை.

இசி ஒர் அம்னோ தொகுதி என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. 13வது பொதுத் தேர்தல்களை எதிர்க்கட்சிகள்  ஏற்றுக் கொள்ள மறுத்தால் நான் வியப்படைய மாட்டேன்.

தாய்கோதாய்: இசி முழுக்க முழுக்க வெட்கக்கேடு. பிஎன் மோசடியின் சின்னம். அதற்குக் கொடுக்கும் சம்பளம்  ‘ஹராமாகும்’ பிஎன் அதிகாரத்தில் தொடர அது மோசடிகளைத் தொடருகின்றது.

ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையத்துடன் ஒப்பிடுகையில் அது கீழ் நிலையில் உள்ள கிரிமினல்.

குரல் இல்லாதவன்: உண்மையில் அந்த வாக்காளர்கள் பிரஜைகளாகி இருந்தால் அவர்களது அடையாளக்
கார்டு எண்கள் மாற்றப்பட்டிருக்கும்.

அடையாளம் இல்லாதவன்#61972288: அது வினோதமாக இல்லையா ? ஒவ்வொருவரும் அக்டோபர் 7,8,9
ஆகிய பிறந்த தேதிகளைக் கொண்டுள்ளனர்.

 

TAGS: