மலேசிய வாக்காளர்களை எதிர்கொள்ள நஜிப் மிகவும் அஞ்சுகிறார்

najib“பிரதமர்  பொதுத் தேர்தல் ஒன்றில் அதிகாரத்தைப் பெற்றதில்லை. அதனால் அதனை எதிர்கொள்ள மிகவும்  அஞ்சுகிறார். அது தான் உண்மை. அதில் கதை விடுவதற்கு ஒன்றுமில்லை”

‘நாடாளுமன்றத்தைக் கலைக்க பிஎன் பயப்படவில்லை’

கதை வேண்டாம்: வழக்கமாக ஆளும் கட்சி தனக்கு சாதகமான தேதியை (எடுத்துக்காட்டுக்கு பொருளாதாரம்
நன்றாக இருக்கும் போது) தேர்வு செய்து தேர்தலை நடத்தும்.

நாடாளுமன்றத்தின் தவணைக்காலம் முடியும் வரை ஆளும் கட்சி/கூட்டணி காத்திருக்கும் என்றால் அது
வாக்காளர்களைச் சந்திக்கவே அஞ்சுகின்றது என அர்த்தம்.

ஏரிஸ்46: நஸ்ரி முட்டாள் அல்ல. பொதுத் தேர்தலை நடத்த தமது எஜமானருக்குத் துணிச்சல் இல்லை என்பது   அவருக்கு நன்கு தெரியும். எதிர்க்கட்சிகள் மீது பழி போடுவதைத் தவிர அவருக்கு வேறு வழி இல்லை. கடந்த  ஐந்து ஆண்டுகளாக அம்னோ அதனைத் தான் செய்து வருகின்றது.

அல்தான்துயா ஷாரிபு விவகாரம், சைபுல் புஹாரி அஸ்லான் விஷயம், ரோஸ்மா மான்சோரின் பிர்க்கின்
கைப்பைகள், வைர மோதிரங்கள், ஷாரிஸாட் அப்துல் ஜலில் சம்பந்தப்பட்ட என்எப்சி ஊழல்,
பாலசுப்ரமணியம், ஜெய்கிஷன் போன்றவர்கள் வெளியிட்டுள்ள தகவல்கள் போன்றவை நஜிப்பை சூழ்ந்துள்ள
போதிலும் அவர் அதிகாரத்தைப் பெறாமல் ஆட்சி புரிவதற்கு அவருடைய தவறு மட்டும் காரணமல்ல.

அதிகாரத்தைப் பெற தாம் தயாராக இருப்பதாக அவர் எண்ணும் ஒவ்வொரு வேளையிலும் முன்னாள் பிரதமர்
டாக்டர் மகாதீர் முகமட், பெர்க்காசா தலைவர்கள் அதனை மட்டுப்படுத்தி விடுவது தான் முக்கியமான
தடைக்கல் ஆகும்.

நஜிப் அவர்களை துணிச்சலாக கட்டுப்படுத்த வேண்டும். மலேசியர்களுடைய அறிவாற்றலை அவமானப்படுத்தக்  கூடாது.

கேஎஸ்டி: பிரதமர் ஒரு பொதுத் தேர்தல் ஒன்றில் அதிகாரத்தைப் பெற்றதில்லை. அதனால் அதனை
எதிர்கொள்ள மிகவும் அஞ்சுகிறார். அது தான் உண்மை. அதில் கதை விடுவதற்கு ஒன்றுமில்லை. பொதுத்
தேர்தலில் அதிகாரத்தைப் பெறாத பிரதமர் என அவர் வரலாற்றில் இடம் பெறவும் கூடும்.

தோலு: தெளிந்த அமைதியான நீரோடையில் செல்லும் அம்னோ செல்வதாக நஸ்ரி சித்தரிக்க முயன்றுள்ளார்.    ஆனால் அதற்கு கீழ் அச்ச உணர்வுகள் தென்படுகின்றன.

சரவாக் முதலமைச்சரின் ஊழல், மகாதீரின் வாக்குகளுக்கு குடியுரிமை, ஸ்கார்ப்பின் ஊழல், அல்தான்துயா
கொலை, மாட்டு ஊழல், சபா அம்னோவுக்கு 40 மில்லியன் ரிங்கிட் அரசியல் நன்கொடை, மலாக்கா
முதலமைச்சருடைய புதல்வர் திருமணத்துக்கு 130,000 பேருக்கு அளிக்கப்பட்ட ஆடம்பரமான விருந்து,
அம்பாங் எல்ஆர்டி விரிவுத் திட்ட ஊழல், விளக்கம் தரப்படாத தடுப்புக் காவல் மரணங்கள், நாடற்ற
இந்தியர்கள், மாட்டுத் தலை ஊர்வலம், ‘மலாய் பைபிளை எரிக்குமாறு’ பெர்க்காசா வேண்டுகோள் ஆகியவை
அம்னோவை உலுக்கிக் கொண்டிருக்கின்றன.

நஸ்ரி அவர்களே உங்களையே எடுத்துக் கொள்ளுங்கள். ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய   சபா வணிகருக்குச் சொந்தமான வாகனத்தை உங்கள் புதல்வர் பயன்படுத்துவது ஊழல் நடைமுறைகளில்  உங்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தவில்லையா ?

இப்போது சொல்லுங்கள் யார் பயப்பட வேண்டும் ?

ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்: நஸ்ரி துணிச்சலாக இருப்பதாகக் காட்டிக் கொள்கிறார். அம்னோ பயப்படும் போது   எதிர்க்கட்சிகள் அஞ்சுவதாக அது சொல்லும். அது தவறு செய்யும் போது எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார்   மீது பழி போடும்.

மக்கள் புத்திசாலிகளாகி விட்டனர். புலி வருது புலு வருது என அம்னோ பல முறை சொல்லி விட்டது.

நியாயமானவன்: பிகேஆர் இப்போது அரசாங்கமல்ல. ஆகவே நாடாளுமன்றத்தைக் கலைக்க அதற்கு
அதிகாரமில்லை. ஆகவே யார் பயப்படுவது ?

பல இனம்: பக்காத்தானைக் கண்டு பிஎன் அஞ்சுகிறது. இல்லை என்றால் அது எப்போதோ பொதுத் தேர்தலை
நடத்தியிருக்கும். அது நஜிப், முஹைடின் யாசின், அம்னோ உறுப்பினர்கள் ஆகிய அனைவருக்கும் நன்கு
தெரியும்.

KnockKnock: பிஎன் எண்ணப்பட்டி, எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன, முட்டாள்கள், பலவீனமானவை,
இஸ்லாத்துக்கு விரோதமானவை, உருப்படியான கொள்கைகள் இல்லாதவை, நடைமுறைக்குப் பொருத்தமான   தேர்தல் கொள்கை அறிக்கைகளைக் கொண்டிராதவை.

ஆகவே பிஎன் எதற்காக காத்துக் கொண்டிருக்கிறது. இரும்பு சூடாக இருக்கும் போது வளைக்க வேண்டியது
தானே ? எதிர்க்கட்சிகளைத் தாக்கி அவற்றை ஒழித்து விடுங்கள். இப்போதே பொதுத் தேர்தலை நடத்துங்கள்.

 

TAGS: