லிபியாவின் முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபியின் குடும்ப உறுப்பினர்கள் சிலருக்கு புகலிடம் வழங்கப்பட்டுள்ளதாக ஒமான் அறிவித்துள்ளது.
சர்வதேச போலிஸாரினால் தேடப்பட்டுவருவோர் பட்டியலிலுள்ள இருவரும் இதில் அடங்கியுள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன. எனினும், அவர்களை நாடு கடத்துவது தொடர்பான கோரிக்கை குறித்த பேச்சுவார்த்தை அவசியமற்றது எனவும் லிபியா கூறியுள்ளது.
கடாபியின் ஆட்சிக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட கிளர்ச்சியாளர்கள் கடந்த 2011 ஆம் ஆண்டு தலைநகர் த்ரிப்போலியைக் கைப்பற்றிய பின்னர், கடாபியின் குடும்ப உறுப்பினர்கள் அல்ஜீரியாவில் அகதி அந்தஸ்து கோரியிருந்தனர்.
இந்நிலையில், கடாபியின் மனைவியும் அவரது மூன்று பிள்ளைகளும் தமது நாட்டில் இருந்து முன்னறிவித்தல் இன்றி நீண்ட நாட்களுக்கு முன்னர் வெளியேறியுள்ளதாக அல்ஜீரியா கடந்த வாரம் அறிவித்திருந்தது.