‘பொது மக்களுக்குக் காட்டப்படுவதற்கு அந்தத் திரைப்படம் அங்கீகாரம் பெறாததால் அதன் உள்ளடக்கம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட முடியாது என அவர் விளக்கமளிக்கிறார்’
‘நான் தனிப்பட்ட முறையில் தண்டா புத்ராவைத் திரையிடுவேன்’
டெலிஸ்டாய்: ஷுஹாய்மி பாபா, சிறுபான்மை சீன சமூகத்துக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் களங்கத்தை கற்பித்து இன வெறுப்பைத் தூண்டும் திரைப்படம் ஒன்றை பொது நிதிகளைக் கொண்டு தயாரித்தார். என்றாலும் தனது விருப்பம் போல அதனைத் திரையிடுவேன் என அவர் எவ்வளவு துணிச்சலாக சொல்கிறார்.
பிஎன் அரசாங்கத்தின் கீழ் நீங்கள் நிச்சயம் அதனைச் செய்யலாம். ஆனால் அது அதிகாரத்திலிருந்து விரட்டப்பட்டதும் அதற்கு நீங்கள் பதில் சொல்வதை உறுதி செய்யுமாறு நாங்கள் புதிய அரசாங்கத்தைக்
கோருவோம்.
சக மலேசியன்: ஷுஹாய்மி பாபா பொது மக்களுக்கு அல்லது மற்ற தரப்புக்களுக்கு அந்தப் படத்தைக் காட்டக் கூடாது என்ற அமைச்சரவை முடிவை அலட்சியம் செய்து மீறியுள்ளார்.
பெல்டா குடியேற்றக்காரர்களுக்கும் அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழக வளாகங்களிலும் அது திரையிடப்பட்டது தொடர்பில் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அவருக்கு அவ்வளவு துணிச்சல் வந்திருக்க வேண்டும்.
பொது மக்களுக்குக் காட்டப்படுவதற்கு அந்தத் திரைப்படம் அங்கீகாரம் பெறாததால் அதன் உள்ளடக்கம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட முடியாது என அவர் விளக்கமளிக்கிறார். அவர் தம்மை வெளிப்படையாகவே பிஎன் ஆதரவாளர் என காட்டிக் கொண்டிருப்பதை மறக்க வேண்டாம்.
Saintonthego: பிஎன் அரசில் இரண்டு வகையான சட்டங்கள் இருப்பதையே அது உணர்த்துகின்றது. ஒன்று பிஎன் ஆதரவாளர்களுக்கு இன்னொன்று மற்றவர்களுக்கு. அப்படியிருந்தும் கூட சிலர் தாங்கள் சட்டத்துக்கு மேலானவர்கள் என எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
என்ன நடக்கிறது: ஷுஹாய்மி பாபா, குழப்பத்தை ஏற்படுத்தும் வெறுப்புணர்ச்சியை பரப்பும் உங்களுக்கு வெட்கம் ஏற்படவில்லையா ? உங்களுக்குக் கிடைக்கும் பணம் நாகரீகமான நடத்தைக்குப் புறம்பானது இல்லையா ?
பெர்ட் தான்: ஷுஹாய்மி பாபா, மிக ஆணவத்துடன் இருக்க வேண்டாம். பிஎன் அரசின் ஐந்து ஆண்டு தவணைக் காலம் 2013 மார்சி 8-உடன் முடிந்து முடிந்து விட்டது. அதனால் அது இப்போது தொழில்நுட்ப ரீதியில் அரசாங்கமல்ல. இன்னும் ஒரிரு மாதங்களில் புதிய அரசாங்கம்- பக்காத்தான் ராக்யாட் அரசாங்கம் அமையும்.
அப்போது நீங்கள் புதிய வேலையைத் தேடுவதோடு தேர்வு செய்யப்பட்ட மக்களுக்கு அந்தத் திரைப்படத்தை காட்டியதற்காக எடுக்கப்படும் நடவடிக்கையையும் நீங்கள் எதிர்நோக்க வேண்டியிருக்கும்.
இப்போது இந்த நாட்டில் அதிகம் வெறுக்கப்படுகின்ற திரைப்பட இயக்குநர் நீங்களே ?
மசீச இப்போது எங்கே ? எல்லா பிஎன் சீனத் தலைவர்களும் எங்கே ? மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக், பிரச்சாரப் பிரிவுத் தலைவர் லோ செங் கோக் ஆகியோர் எங்கே ?
லோ-வுக்கு டிஏபி-யைத் தாக்கும் துணிச்சல் உண்டு. ஆனால் அம்னோ ஆதரவு பெற்ற சிறிய மீன், ஷுஹாய்மி பாபா-வை எச்சரிக்கும் துணிச்சல் இல்லை.
அவரது திரைப்படம் இந்த நாட்டில் சீன சமூகத்தை இழிவுபடுத்துவதாகச் சொல்லப்படுகின்றது. மசீச சீனர் அடிப்படைக் கட்சியா ? மசீச அம்னோவைக் கண்டு அஞ்சுவது இப்போது தெளிவாகி விட்டது.
முன்னேற்றம்: 1969 மே 13ல் என்ன நிகழ்ந்தது என்பது நமக்கு நன்கு தெரியும். அரசியல் நோக்கங்களுக்காக அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டனர். எந்தத் திரைப்படமும் அந்த வரலாற்றை மாற்ற முடியாது.
தோலு: ‘நீங்கள் பணம் கொடுத்தால் நாம் திரையிடுவேன்’ என ஷுஹாய்மி பாபா சொல்கிறார். பிஎன் வெற்றிகரமாக தனது ஊழல் கலாச்சாரத்தை தனது கைப்பாவைகளுக்கு பரப்பி விட்டது.
அகராதி: யாரும் திரைப்பட இயக்குநராக இருக்க முடியும். ஆனால் உண்மையை வெளிப்படுத்துகின்றவரே கலையைப் படைக்க முடியும். ஷுஹாய்மி பாபா சாதாரணி கூலி வேலையாள். உண்மையான கலைஞனுக்கு விரோதி. வரலாறு அவரை மன்னிக்காது.