‘நஜிப் அந்த நோக்கத்தை மட்டும் தெளிவுபடுத்தியிருந்தால் கடந்த ஐந்து ஆண்டுகளாக நாட்டை தேர்தல் விழிப்பு நிலையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது’
முழுத் தவணைக் காலத்துக்கு பணியாற்றிய நஜிப்பை கிர் தோயோ பாராட்டுகிறார்
கிருஸ்: எப்போது தேர்தல் என்ற ஊகம் நீண்ட காலமாகத் தொடருகின்றது. ஒரே நேரத்தில் கூட்டரசு, சட்டமன்றத் தேர்தல்கள் நிகழ வேண்டும் என தேர்தல் ஆணையம் (இசி) விரும்பினாலும் சில சட்டமன்றங்கள் இயல்பாகவே கலைக்கப்பட்டு விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த உறுதியற்ற சூழ்நிலை நாட்டுக்கு நல்லதல்ல. அரசியல் களத்தில் உள்ள இரு தரப்பும் அதிகாரப்பற்றற்ற
முறையில் ஏற்கனவே பிரச்சாரத்தை நடத்துகின்றன. பல விஷயங்கள் தேக்கமடைந்து விட்டன. அதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒங்: பிஎன் வேட்பாளராக தாம் தெரிவு செய்யப்படுவோமா இல்லையா என்பது அந்த முன்னாள் சிலாங்கூர்
மந்திரி புசார் முகமட் கிர் தோயோவுக்குத் தெரியாது. ஆனால் நஜிப்பிடமிருந்து சில நல்ல மதிப்பெண்களைப்
பெற அவர் முயற்சி செய்துள்ளார்.
முழுத் தவணைக் காலத்துக்கு பணியாற்றப் போகும் நோக்கத்தை மட்டும் நஜிப் முன் கூட்டியே
தெளிவுபடுத்தியிருந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக நாட்டை தேர்தல் விழிப்பு நிலையில் வைத்திருக்கா விட்டால் நஜிப் ரசாக்கைப் பாராட்ட வேண்டும் என கிர் தோயோ சொல்வதை நான் ஒப்புக் கொள்வேன்.
அவாங்: முகமட் கிர், தீய எண்ணம் கொண்ட முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூட தேர்தலுக்கு
நீண்ட காலம் காத்திருப்பதாக புகார் செய்துள்ளார். மக்கள் வெறுப்படைந்து விட்டனர். ஒரு பிரதமர் முடிவு
செய்யும் ஆற்றல் இல்லாதவராக இருக்கக் கூடாது. அவருக்கு முதுகெலும்பு உள்ளதா ?
காஸ்காரா: முகமட் கிர் சொல்வது சரியே. நஜிப்புக்கு மீண்டும் வாய்ப்புக் கிடைக்காது என்பதால் அவர் முழுத்
தவணைக் காலத்துக்கு பணியாற்ற விரும்புவது நியாயமே. பிஎன் வெற்றி பெற்றாலும் அல்லது பக்காத்தான்
வெற்றி பெற்றாலும் அது தான் உண்மை.
திரு கேஜே ஜான்: அந்த ‘முட்டாள்’ தாம் இப்போது சிலாங்கூர் அம்னோ தலைவர் என எண்ணிக் கொண்டு
பேசுகிறார்.
Msiakini4all: இன்னொரு கோமாளி ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு தமது எஜமானருக்கு
ஆதரவாக குப்பைகளை எழுதிக் கொண்டிருக்கிறார்.
சிப்முங்: முகமட் கிர், நீங்கள் யாரைக் கவர முயலுகின்றீர்கள் ?
நிழல்: பிரதமர் ‘biar lambat, asalkan selamat’ என்னும் மலாய்ப் பழமொழியில் நம்பிக்கை வைத்துள்ளார்.
ஆனால் பொதுத் தேர்தல் நிகழும் தேதி தள்ளிப் போகப் போக அதிகமான hantus’, ‘toyols’ (பிசாசுகள்)
வெளியாகும் எனத் தோன்றுகிறது.
தனா55: முகமட் கிர், நீங்கள் பாராட்டினாலும் சரி பாராட்டா விட்டலும் சரி. தயவு செய்து கண்ணாடியில்
உங்கள் முகத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.