முதியவரான மகாதீர் தாம் இன்னும் பிரதமர் என நினைத்துக் கொண்டு பேசுகிறார்

maha“அவரது வயதில் ஒருவர் திருந்துவதுடன் தமது பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு தாம் தீங்கிழைத்த  மக்களுடன் சமாதானம் செய்து கொண்டு கௌவரமாக வெளியேற வேண்டும்”

பிஎன் அடைவு நிலை மோசமாக இருந்தால் நஜிப் பதவி விலக வேண்டியிருக்கும்

கைரோஸ்: அந்த முதியவருக்கு இன்னும் ஆதரவாளர்கள் இருப்பதும் அதிகார வர்க்கத்தில் அவருக்கு
இன்னும் செல்வாக்கு இருப்பதும் எனக்கு வியப்பை அளிக்கிறது.

அவர் இனவாதி, மலாய் தீவிரவாதி. அவர் சொல்வது நிறைவேறுகின்றன. பிஎன் வெற்றி பெற்றால் யார்
நாட்டை வழி நடத்த வேண்டும் என முடிவு செய்வதில் அவருக்கு முக்கியப் பங்கு இருக்கும். அது யாராக
இருந்தாலும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டின் கைப்பாவையாக மட்டுமே இருக்க முடியும்.
காரணம் அந்தக் கைப்பாவையை ஆட்டும் கயிறுகள் மகாதீரிடம் இருக்கும்.

அந்த தீய மனிதரை எப்படி நிறுத்துவது ? ஒரே ஒரு வழி தான் உள்ளது. பக்காத்தான் ராக்யாட்டுக்கு
அதிகாரத்திற்கு வர வாக்களிப்பதின் மூலம் நாட்டை வழி நடத்துகின்றவரைத் தேர்வு செய்வதில் அவருக்கு
உள்ள செல்வாக்கை நீர்த்துப் போகச் செய்ய வேண்டும். எந்த வழியிலாவது பிஎன் போக வேண்டும்.

GE13isonMay11: மகாதீர் சொல்கிறார்: “அவர் நல்ல அடைவு நிலை பெறா விட்டால் நிச்சயம் அவரது நிலை
உறுதியற்றதாக இருக்கும் என ஊக அடிப்படையில் சொல்கிறேன்”

பிஎன் வெற்றி பெறும் ஆனால் முழுமையாக தோல்வி காணாது என மறைமுகமாக மற்றவர்களை உளவியல்
ரீதியில் எச்சரிப்பதற்கு சமமாகும்.

புத்ராஜெயாவை பிஎன் இழக்கும் சாத்தியம் இருப்பதாலும் டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்,
ஜோகூருக்குச் செல்வதாலும் அன்வார் தமது தொகுதியை மிகவும் ரகசியமாக வைத்திருப்பதாலும் அவர் பல
இரவுகளில் தூக்கத்தைத் தொலைத்து விட்டார் என்பதே உண்மை.

பதற்றமடைந்துள்ள சுதேசி: வழக்கம் போல மகாதீர் பேசியதும் எதிரொலிகள் வேகமாக கிளம்புகின்றன. அவரது  வயதில் ஒருவர் திருந்துவதுடன் தமது பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு தாம் தீங்கிழைத்த  மக்களுடன் சமாதானம் செய்து கொண்டு கௌவரமாக வெளியேற வேண்டும்.

அதற்குப் பதில் அவர் நஞ்சு கலந்த அறிக்கைகளை விடுத்து இனவாதத்தை தூண்டி விடுகிறார்.
வெறுப்புணர்வுக்கான விதைகளைத் தூவுகிறார். தமது சமயம் வலியுறுத்துகின்ற எல்லா விஷயங்களுக்கும்
முரணானதைச் செய்கிறார்.

அடையாளம் இல்லாதவன்#40538199: பெரிய பங்குதாரர் தலைமை நிர்வாக அதிகாரியை எச்சரிப்பது போல  அது தோன்றுகிறது. கட்சி தமக்குச் சொந்தம் என மகாதீர் எண்ணுவதாகத் தெரிகிறது.

அபாஸிர்: இந்த ஆட்சியின் எல்லாப் பக்கங்களிலும் பரவி விட்ட நச்சு கிளைகளுக்குக் காரணமான மரத்தை
முற்றாக வேரறுத்து அதற்கு எரியூட்ட வேண்டும்.

நஞ்சு கலந்த அந்த மரத்தைச் சாய்ப்பதற்கு அரசாங்க மாற்றமே ஒரே வழியாகும்.

பையுவன்செங்: “என் மனதில் எந்த வேட்பாளரும் இல்லை..” அடக் கடவுளே அவருக்கு உண்மையில்
அதிகாரம் உள்ளது.

அடையாளம் இல்லாதவன்_5fb: மகாதீர் அவர்களே இப்படியும் வைத்துக் கொள்ளலாமே ? அடுத்த கூட்டரசு
அரசாங்கத்தை பக்காத்தான் அமைக்குமானால் அன்வார் அடுத்த பிரதமராகி விடுவார் என ஊகமாகச்
சொல்லலாமே ?

அப்போது அடுத்த பிரதமர் யார் என்ற தலைவலி உங்களுக்கு இருக்காது. அதன் மூலம் மரக்கட்டைகள்
வெட்டப்படுவதோடு பிஎன் என்ற முழு மரமும் போய் விடும்.

அதனைக் காண மக்களாகிய நாங்கள் காத்திருக்கிறோம். பின்னர் நீங்கள் உங்கள் வாயை மூடிக் கொள்ள
வேண்டும்.

என்ன நடக்கிறது: நஜிப் நல்ல பிரதமர் என்றே நான் நினைக்கிறேன். அவர் மக்களுக்கு நல்லதைச் செய்கிறார்.

ஆனால் பெர்க்காசாவில் உள்ளவர்களும் அம்னோவில் உள்ள சிலரும் இனவாதத்தைத் தூண்டுகின்றனர்.
அதனால் மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர். அவர்கள் இனப் பிரச்னைகளை எழுப்ப நஜிப் அனுமதிக்கிறார்
என்றும் அவர்கள் கருதுகின்றனர்.

பெர்ட் தான்: மகாதீர் அவர்களே, நீங்கள் என்ன செய்து வீட்டீர்கள் பார்த்தீர்களா ? நீங்கள் பரிதாபத்துக்குரிய
நமது பிரதமரை அச்சுறுத்தி விட்டீர்கள். அதனால் தேசியத் தேர்தலை நடத்த வேண்டிய நிலைக்கு வந்து விட்ட  போதும் அதனை அறிவிக்கும் துணிச்சல் அவருக்கு இல்லை.

வரும் தேர்தலில் பிஎன் நல்ல அடைவு நிலையைப் பெறா விட்டால் முந்திய பிரதமர் அப்துல்லா அகமட்
படாவியைப் போன்று நஜிப்பும் விலக வேண்டும் என இவ்வளவு அப்பட்டமாக நீங்கள் சொல்ல வேண்டுமா ?

நஜிப் ஏற்கனவே அன்வார் இப்ராஹிம் தலைமையில் இயங்கும் எதிர்த்தரப்பைக் கண்டு மிகவும் பயப்படுகின்றார்.   இப்போது நீங்களும் தேவையில்லாத நெருக்குதலை கொடுத்துள்ளீர்கள்.

Wassupdoc: நமது அடுத்த பிரதமர் யார் எனச் சொல்வதற்கு அவர் யார் எனக்கு யாராவது சொல்லுங்கள்.

 

 

TAGS: