13வது பொதுத் தேர்தலில் குழப்பமா ? அம்னோ குண்டர்கள் பற்றி எச்சரிக்கை தேவை

umno“பஸ்களில் கொண்டு வரப்படும் ‘திடீர்’ அடையாளக் கார்டுகளை வைத்திருக்கின்றவர்கள் எத்தகைய  இடையூறுமின்றி வாக்களிப்பதற்கு ஹிஷாமுடின் அடித்தளம் போடுகிறாரா ?”

13வது பொதுத் தேர்தலில் குழப்பத்தை விளைவிக்கும் முயற்சிகள் குறித்து போலீஸ் விசாரிக்கும்

பெர்ட் தான்: எதிர்த்தரப்பு 13வது பொதுத் தேர்தலின் போது குழப்பத்தை ஏற்படுத்த முயலும் எனத் தெரிவதாக
மலேசிய Seni Silat Gayong அமைப்புத் தலைவர் அடிவிஜயா அப்துல்லா கூறியிருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து அந்த ‘சிலாட்’ மனிதர் வழங்கிய தகவலைப் பாராட்டும் வகையில் சில தரப்புக்கள்
(எதிர்க்கட்சிகள் என வாசிக்கவும்) 13வது பொதுத் தேர்தலைக் கீழறுப்புச் செய்வதற்கு மருட்டல் விடுத்துள்ளதாக  உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் எச்சரித்துள்ளார்.

அமைச்சர் அவர்களே, இந்த நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கும் அந்த ‘சிலாட்’ மனிதருக்கும் என்ன
சம்பந்தம் எனச் சொல்லுங்கள்.

அடிவியாயாவுக்கும் போலீஸுக்கும் இடையில் எத்தகைய உறவுகள் உள்ளன ? போலீஸ் வேவுத் துறையில்
அந்த சிலாட் அமைப்பு ஒர் அங்கமாகி விட்டதா ?

போலீஸ் சிறப்புப் பிரிவு அதிகாரிகள் எங்கே போனார்கள் ? ஹிஷாமுடின், யாருடைய ஆலோசனையை
நீங்கள் கேட்கின்றீர்கள் ?

மஹாஷித்லா: 13வது பொதுத் தேர்தலில் 10 தொகுதிகளில் குழப்பத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள்
திட்டமிட்டுள்ளன என்ற தமது ‘தகவல்’ மூலம் அடிவிஜயா, நமது தேசியப் போலீஸ் படைத் தலைவரையும்
போலீஸ் சிறப்புப் பிரிவையும் முட்டாளாக்கியுள்ளார்.

பக்காத்தான் ராக்யாட் எந்த வேளையிலும் குழப்பத்தை நாடப் போவதில்லை. நியாயமான தூய்மையான
தேர்தல்களையே அது விரும்புகிறது.

“பஸ்களில் கொண்டு வரப்படும் ‘திடீர்’ அடையாளக் கார்டுகளை வைத்திருக்கின்றவர்கள் எத்தகைய
இடையூறுமின்றி வாக்களிப்பதற்கு ஹிஷாமுடின் அடித்தளம் போடுகிறாரா ?”

‘வாக்காளர்களை’ பாதுகாக்க சிறப்புப் பணிப் படையை அம்னோ மகளிர் பிரிவும் அமைத்துள்ளதும் எனக்கு
சந்தேகத்தை அளித்துள்ளது. காரணம் அது போன்ற நடவடிக்கையை அந்தப் பிரிவு எடுத்ததே இல்லை.

ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்: மேலே கூறப்பட்ட 10 தொகுதிகள் மீது பக்காத்தான் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.   ஏதோ நடக்கப் போவதாக நான் சந்தேகிக்கிறேன். தாங்கள் தோல்வி கண்டால் அந்த இடங்களில்
எதிர்க்கட்சிகள் குழப்பதை ஏற்படுத்த முயலும் என எச்சரிப்பதாக பாசாங்கு செய்வதின் மூலம் பிஎன் முன்
கூட்டியே தயாராவதாக தெரிகிறது.

மோசடிகள் குறித்து அறிந்து கொள்ள நாம் பிஎன் சொல்வதை ஆய்வு செய்ய வேண்டும். இந்தோனிசியப்
பெயரைக் கொண்டுள்ள அடிவிஜயா தண்டா புத்ரா 2.0 தொடக்கக் காட்சியை அரங்கேற்றியிருப்பதாக
தெரிகிறது.

ஹாங் பாயூப்: முறைகேடான ‘தரப்புக்களில்’ ஹிஷாமுடினும் அவரது கட்சியும் நிற்கும் இடமும் அடங்கும்.
உங்கள் வீட்டைச் சுத்தம் செய்யாமல் மற்றவர்களைப் பற்றிப் பேச வேண்டாம்.

அந்த அடிவிஜயா பற்றி ஏன் கவனம் செலுத்த வேண்டும் ? பல மாதங்களுக்கு முன்பு அச்சிடப்பட்டதாகக்
கூறப்படும் எதிர்க்கட்சி சின்னம் பதிக்கப்பட்ட துண்டுப் பிரசுரம் ஒன்றை அவர் வைத்துள்ளார்.

அது பெரும்பாலும் போட்டோ பிரதி எடுக்கும் கடை ஒன்றில் அல்லது பல்லூடக ஒளிப்பதிவுக் கூடம் ஒன்றில்
ஜோடிக்கப்பட்டிருக்க வேண்டும்.

அந்த ஜோடனை மீது அக்கறை காட்டும் யாரும் முட்டாள் எனக் கருதப்பட வேண்டும்.

இறைத் தூதன்: ஆளும் கட்சிக்கு ஆதரவான சில தரப்புக்கள் அந்த பிரசுரங்களைத் தயாரித்து விட்டு
எதிர்க்கட்சிகள் மீது பழி போடுகின்றன என்பது நிச்சயம்.

இனவாத பெர்க்காசா கும்பலும் குண்டர்களும் வெளியிட்டுள்ள மருட்டல்கள் மக்களிடையே அச்சத்தை
ஏற்படுத்தியுள்ளன.

இந்த நாட்களில் பிஎன் கொடிகளை மக்கள் பார்த்தாலே குண்டர்கள் பற்றிய அச்சமே ஏற்படுகின்றது.

பேராக்கியன்: அம்னோ ஆட்களைக் கும்பலாக பார்த்தாலே இப்போது எனக்கு அச்சம் ஏற்படுகின்றது.
தேர்தலில் அந்தக் கும்பல் குழப்பம் ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

அபாசாலோம்: நாடு முழுவதும் அம்னோ செராமாக்களில் குழப்பம் விளைவிப்பது அம்னோ/பிஎன்
ஆதரவாளர்களே. யூ டியூப் இணையத் தளத்தில் அதற்கான ஆதாரங்களைக் காணலாம்.

பிஎன் நிகழ்வுகளுக்கு பக்காத்தான் ஆதரவாளர்கள் இடையூறு செய்த ஒரு சம்பவத்தை நீங்கள் சுட்டிக் காட்ட
முடியுமா ?

சிப்முங்: அவர் ஏன் எதிர்க்கட்சிகளைக் குறை சொல்கிறார். நடப்பு அரசாங்கம் தொடர்ந்து அதிகாரத்தில் இருக்க   அவசர காலம் பிரகடனம் செய்யப்படுவதற்கு இன்னொரு மே 13ஐ அவர் எதிர்பார்க்கிறாரா ?

உண்மை: கோம்பாக்கில் பத்து எம்பி தியான் சுவா-வின் தலையை ‘வெட்டப் போவதாக’ அம்னோ கூட்டம்
மருட்டிய போது அந்த உள்துறை அமைச்சர் அமைதியாக இருந்தார். அவர் மீதும் அவரது கும்பல் மீதும்
இருந்த நம்பிக்கை முற்றாக போய் விட்டது.

திடீர் அடையாளக் கார்டுகளை வைத்திருக்கின்றவர்கள் வாக்களிக்காமல் இருப்பதை உறுதி செய்ய பக்காத்தான்  எடுக்கப் போகும் நடவடிக்கைகள் பற்றி அவர்கள் அச்சமடைந்துள்ளனர் என்பதே ஊரறிந்த உண்மை.

டூட்: ஹிஷாமுடின், உங்கள் கொல்லைப் புறத்தை ஒரு முறையாவது பாருங்கள்.

 

TAGS: