தெங்: குவான் எங்-கிற்கு பல இனத் தொகுதியில் போட்டியிடும் துணிச்சல் இல்லை

1limபினாங்கு பிஎன் தலைவர் தெங் சாங் இயாவ் தம்மை ஏமாற்றி விட்டதாக முதலமைச்சர் லிம் குவான் எங்  கூறியிருக்கிறார்.

“13வது பொதுத் தேர்தலில் அது தான் பெரிய நகைச்சுவை,” என உடனடியாக லிம் -முக்குப் பதில் அளித்த தெங் சொன்னார்.

“நான் அவருக்காக வருந்துகிறேன். டிஏபி-க்காக அதை விட வருந்துகிறேன்,” என பினாங்கில் அவர் பிஎன் நடவடிக்கை மய்யத்தில் நிருபர்களிடம் கூறினார்.

லிம் தமக்குச் சவால் விடுப்பதற்கு வழி வகுத்த நிகழ்வுகளை நேற்று தாம் வெளியிட்டுள்ளதாக அவர் சொன்னார்.

“எனக்கு எதிராகப் போட்டியிடுவது லிம்-மைப் பொறுத்தது” என கினிடிவிக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்த பின்னர் லிம்-மின் சவாலைத் தாம் ஏற்றுக் கொண்டதாக தெங் தெரிவித்தார்.

என்றாலும் அதற்கு இரண்டு நிபந்தனைகளை தெங் விதித்தார். தொகுதியை தெங் முடிவு செய்ய வேண்டும் என்பதும் லிம் நாடாளுமன்றத் தொகுதிக்கு போட்டியிடுவதைக் கைவிட்டு விட்டு சட்டமன்றத் தொகுதிக்கு மட்டும் போட்டியிட வேண்டும் என்பதும் அந்த நிபந்தனைகளாகும்.

அதில் ஒரு நிபந்தனையை ஏற்றுக் கொண்ட லிம் பாடாங் கோத்தாவில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் தெங் பல இனத் தொகுதி ஒன்றில் போட்டி இருக்க வேண்டும் எனக் கூறினார்.

தெங் பாடாங் கோத்தா தொகுதியில் மூன்று தவணைக் காலத்திற்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.

தெங் தம்மை ஏமாற்றி விட்டதாக கூறி லிம் இன்று சவால் மீதான ‘சர்க்கஸ்’விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி
வைத்தார்.

பல இனக் கட்சித் தலைவர் என்றும் எல்லா மலேசியர்களையும் பிரதிநிதிப்பதாகவும் கூறிக் கொள்ளும் ஒருவர்  கலப்பு இனத் தொகுதி ஒன்றில் போட்டியிடும் ‘துணிச்சல் ஏன் லிம்-முக்கு இல்லை என தெங் கூறிக் கொண்டார்.

அந்த ‘பல இன வாதத்தை’ தமது எஜமானரான பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கும் தெங் ஏன் பயன்படுத்தி மலாய் பெரும்பான்மை தொகுதியான பெக்கானுக்குப் பதில் பல இனத் தொகுதி ஒன்றில் போட்டியிடுமாறு வலியுறுத்தலாமே என அவரிடம் வினவப்பட்டது. அதற்குப் பதில் அளித்த தெங்,” அவர் அவருக்குச் சவால் விடுக்கலாம்,” என்றார்.

“மலேசியத் தலைவர் என லிம் பேச்சளவில் மட்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் பல இனக் கலப்புத் தொகுதியை எதிர்நோக்கும் துணிச்சல் அவருக்கு இல்லை,” என்றும் தெங் குறிப்பிட்டார்.

“மலேசியத் தலைவர் என அவர் தம்மை எப்படி பிரகடனப்படுத்திக் கொள்ள முடியும் ?” என தெங் வினவினார்.

TAGS: