திட்டமிடப்பட்டிருந்த பக்கத்தான் – ஹிண்ட்ராப் சந்திப்பு கைவிடப்பட்டது, கணேசன்

பக்கத்தான் மற்றும் ஹிண்ட்ராப் தரப்பினர்களுக்கிடையில் கடந்த வாரம் வரையில் நடைபெற்று வந்தhindraf1 பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்பட்டது. ஆனால், அதனைத் தொடர்ந்து நடைபெறவிருந்த கூட்டம் கைவிடப்பட்டது.

கடந்த வாரம், டிஎபி தேர்தல் வியூகர் டாக்டர் ஓங் கியன் மிங் ஹிண்ட்ராப் பெருந்திட்டத்தையும் பக்கத்தான் தேர்தல் கொள்கை அறிக்கையையும் ஒப்பிட்டு தயாரித்திருந்த ஓர் அறிக்கையை பக்கத்தான் தலைவர்கள் விவாதித்தாக தமக்கு தெரியப்படுத்தப்பட்டது என்று ஹிண்ட்ரா தேசிய ஆலோசர் என். கணேசன் கூறினார்.

“இது ஓர் ஆக்ககரமான அணுகுமுறை. டாக்டர் ஜுல்கெப்லி தலைமையிலான பக்கத்தான் தேர்தல் கொள்கை குழு ஹிண்ட்ராபுடனான வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கான வழிவகைகளைக் காணுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. ஆகவே, டாக்டர் ஜுல்கெப்லி இந்த ஆக்ககரமான ஆய்வை எங்களுக்கு அனுப்பி வைத்தார்”, என்றார் கணேசன்.

இதனை நாங்கள் மறுஆய்வு செய்தோம். இது சம்பந்தமாக பக்கத்தானின் மூன்று முக்கிய தலைவர்களுக்கும் (அன்வார், கிட்சியாங் மற்றும் ஹாடி) கடிதம் எழுதினோம். அக்கடிதத்தில் “இந்த முறையான அணுகுமுறை” மீது தங்களுடைய திருப்தியைத் தெரிவித்ததாக கணேசன் மேலும் கூறினார்.

“இது நடந்தது மார்ச் 29 இல். டாக்டர் ஜுல்கிப்லி இவ்வாரத்தில் பக்கத்தான் தேர்தல் கொள்கை குழுவுக்கும் ஹிண்ட்ராப்புக்கும் இடையில் ஒரு கூட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்”, என்று கணேசன் கூறினார்.

இந்தியர்களுக்கான டிஎபியின் திட்டம்

lim kit siangஆனால், மார்ச் 30 இல், லிம் கிட் சியாங் இந்தியர்களுக்கான டிஎபியின் திட்டம் ஒன்று வெளியிடப்படும் என்று அறிக்கை விடுத்திருந்ததைச் சுட்டிக் காட்டிய கணேசன், “நாங்கள் இந்த அறிக்கை மீதான எங்களுடைய வியப்பையும் ஏமாற்றத்தையும் டாக்டர் ஜுல்கிப்லியிடம் தெரிவித்தோம்”, என்றார்.

அதன் பின்னர், பக்கத்தான் மற்றும் ஹிண்ட்ராப் தரப்பினர்களுக்கிடையில் இவ்வாரம் நடத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கூட்டம் கைவிடப்பட்டுள்ளது என்று டாக்டர் ஜுல்கெப்லி தெரிவித்ததாக கணேசன் கூறினார்.

“ஆக, நாங்கள் பழைய நிலைக்கே திரும்பியுள்ளோம்”, என்றாரவர்.

பாரிசானுடன் சந்திப்பு

பாரிசான் – ஹிண்ட்ராப் சந்திப்பு இவ்வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்ப்பதாக கணேசன் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் ஹிண்ட்ராப் பெருந்திட்டம் குறித்து பேசப்படும். “எங்களுடையக் குறிக்கோள் பெருந்திட்டம்தான். இப்பெருந்திட்டத்தை ஏற்றுக்கொண்டு அதனை அமல்படுத்துவதற்கான கடப்பாட்டை உறுதிப்படுத்தும் ஒரு தரப்பினரோடு நாங்கள் இணைந்து செல்வோம்”, என்றார் கணேசன்.

 

 

TAGS: