மலேசியர்கள் கறை படிந்த இசி-யுடன்(தேர்தல் ஆணையம்) தேர்தலுக்குச் செல்கின்றனர்

voterபிஎன் -னுக்குச் சாதகமாக சந்தேகமான வாக்காளர்களை தேர்தல் வாக்காளர் பட்டியலில் அம்னோவும் இசி-யும்  இணைத்துள்ள  பெரிய மோசடிக்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும் ?

வாக்காளர் பட்டியலில் சந்தேகமான வாக்காளர்கள் இருப்பதை சிலாங்கூர் இசி தலைவர் ஒப்பினார்

வீரா: சந்தேகமான ‘பல’ வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதை சிலாங்கூர் இசி தலைவர் சுல்கிப்லி
அப்துல் ரஹ்மான் ஒப்புக் கொண்டதை கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சண்டியாகோ ‘குரல் பதிவு’ செய்திருப்பார் என
நம்புகிறேன்.

நாளை இசி அதனை மறுத்து அறிக்கை வெளியிடும் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

அடையாளம் இல்லாதவன்_3da6: தேர்தல் புள்ளி விவரக் களஞ்சியத்தில் தவறுகளை நாம் கண்டு பிடித்துக்
சொல்லும் வரை இசி ஏன் காத்திருந்து சுட்டிக்காட்டப்பட்ட பின்னரே அதனைச் சரி செய்ய வேண்டும் ? இது
வைக்கோலில் ஊசியைத் தேடுவதற்கு ஒப்பாகும்.

பிரிட்டனில் வசிக்கும் எஸ் தினேஷை அவருடைய ஒப்புதல் இல்லாமல் கடந்த ஆண்டு உதவிப் பதிவதிகாரி
ஒருவர் வாக்காளராகப் பதிவு செய்துள்ளார். அவர் செய்தது குற்றமாகும். அவர் மீது வழக்குப் போடப்பட
வேண்டும். ஆனால் அவர் பிஎன் ஆள். ஆகவே அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது.

வாக்காளர் பட்டியலில் இது போன்று நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான குளறுபடிகள் இருக்கும்
என மக்கள் அஞ்சுகின்றனர். அவற்றைக் கண்டு பிடிப்பதற்கான வழிகள் நம்மிடம் இல்லை. ஆகவே 13வது
பொதுத் தேர்தல் நிச்சயம் கறை படிந்ததாகத் தான் இருக்கப் போகிறது. பக்காத்தான் ராக்யாட்டுக்கு எதிர் நீச்சல்
தான்.

ஏரியஸ்46: தினேஷ் விவகாரத்தில் சுல்கிப்லி ஒப்புக் கொண்ட பின்னர் பிஎன் -னுக்குச் சாதகமாக சந்தேகமான
வாக்காளர்களை தேர்தல் வாக்காளர் பட்டியலில் அம்னோவும் இசி-யும் இணைத்துள்ளதற்கான பெரிய
மோசடிக்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும் ?

அத்துடன் 13வது பொதுத் தேர்தலில் இடையூறுகள் ஏற்படும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்,
உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் ஆகியோர் உட்பட பலர் எச்சரித்துள்ளனர்.

அதனால் தான் தமது தொகுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள சந்தேகமான பெயர்களை மறு
ஆய்வு செய்ய, சண்டியாகோ செய்து கொண்ட விண்ணப்பத்தை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதா ?

பக்காத்தான் ராக்யாட் அல்லது பெர்சே, சந்தேகமான பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கும் வரை
தேர்தலை தள்ளி வைக்குமாறு கேட்டுக் கொள்ளும் பொருட்டு தடை உத்தரவுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

அடையாளம் இல்லாதவன்#19098644: மோசடிகள் திட்டமிடப்பட்டு அமலாக்கப்படுவதாகத் தோன்றுகிறது.
முதலாவது மோசடி வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களைப் பதிவு செய்வது அல்லது வங்காள தேசிகள்,
பாகிஸ்தானியர்கள் போன்ற அந்நியர்களைப் பதிவு செய்வது.

இரண்டாவது எதிர்க்கட்சி வாக்குகள் அதிகமாக இருக்கும் தொகுதிகளிலிருந்து வாக்காளர்களை மற்ற
மாநிலங்களுக்கு அல்லது தொகுதிகளுக்கு மாற்றுவது. பெட்டாலிங் ஜெயா செலத்தான் தொகுதியில் உள்ள
தாமான் மேடான் வாக்காளர்களுக்கு ஏற்பட்ட நிலையை அதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

மூன்றாவது தரப்புக்கள் வாக்களிப்பு இடையூறு செய்யலாம் என உள்துறை அமைச்சர் எச்சரிக்கிறார்.

நான்காவதாக வாக்காளர்களைப் பாதுகாக்க குண்டர்கள் கடமையில் ஈடுபடுவர் என அம்னோ மகளிர்,
அம்னோ இளைஞர் பிரிவுகளும் பெர்க்காசாவும் அறிவித்துள்ளன.

கடைசியாக அந்த ‘திடீர் வாக்காளர்களை’ தேர்தல் தினத்தன்று பஸ்களில் கொண்டு செல்வது

அடுத்து அம்னோவைச் சேர்ந்த உதவிப் பதிவாளர் ஒருவர் மோசடியாக வாக்காளர்களைப் பதிவு செய்துள்ளார்
என்பதை இசி, நெருக்கப்பட்ட போது ஒப்புக் கொண்டுள்ளது.

இசி, சட்டத்துறைத் தலைவர் அலுவலகம், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், போலீஸ், இதர அரசு
அமைப்புக்கள் ஆகியவை இந்த ஊழல் அம்னோ ஆட்சியால் செயலிழந்து விட்டன.

கேஎஸ்என்: அந்தத் தகவலைத் தொடர்ந்து இசி பதவி துறக்க வேண்டும். தேர்தல் நிகழும் முன்னர் வாக்காளர்
பட்டியலை சுயேச்சைக் குழு ஒன்று ஆய்வு செய்ய வேண்டும்.

அந்த ஆய்வு முடியும் வரை தேர்தலைத் தள்ளி வைக்க சண்டியாகோ தடை உத்தரவு பெற முயல வேண்டும்.
தேர்தல் முடிவுகள் உண்மையில் மக்கள் தேர்வைப் பிரதிபலிக்க வேண்டுமானால் அது அவசியம் செய்யப்பட
வேண்டும்.

979899: பக்காத்தான் கூட்டரசு அரசாங்கத்தை எடுத்துக் கொண்டால் தேர்தல் மோசடிகளுக்கு பின்னணியில்
இருக்கும் குற்றவாளிகளை அடைப்பதற்கு பல சிறைச்சாலைகளைக் கட்ட வேண்டும்.

அடையாளம் இல்லாதவன்#33877536: மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறுவதற்கு நிச்சயம் இது  வழி அல்ல.

 

TAGS: