பெர்சே: இரண்டு தரப்பும் ‘நேரடியாக’ தேர்தல் கொள்கை அறிக்கைகளை சமர்பிக்க அனுமதிக்கலாம்

bersihதொலைக்காட்சியில் முக்கியமான நேரத்தில் அரசியல் களத்தில் இரு புறமும் உள்ள தரப்புக்கள் தங்கள் தேர்தல்  கொள்கை அறிக்கைகளைச் சமர்பிப்பதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என பெர்சே இணைத் தலைவர்  அம்பிகா ஸ்ரீனிவாசன் கூறுகிறார்.

அந்த நிகழ்ச்சியை சுயேச்சை அனுசரணையாளர் ஒருவர் வழி நடத்தலாம் என அவர் சொன்னார்.

“அது விவாதத்தை போன்றது. அவர்களுக்கு ‘விவாதம்’ என்ற சொல் பிடிக்காததால் ஒவ்வொரு கட்சியும் தனது  தேர்தல் கொள்கை அறிக்கையை வழங்கும் நிகழ்ச்சி மூலம் அதனை வேறு வகையாகச் செய்யலாம்.”

“முதலில் அவர்கள் அதனைச் செய்யத் தொடங்க வேண்டும் என நாங்கள் யோசனை சொல்கிறோம். ஆனால்
உண்மையான ஜனநாயகத்தில் ஊடகங்களில் சமமான வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும்,” என அம்பிகா இன்று
நிருபர்களிடம் கூறினார்.

அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் தேர்தல் கொள்கை அறிக்கையை (அது முன்  கூட்டியே பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்) வழங்க 10 நிமிடங்கள் கொடுக்க முன் வந்தது குறித்து
கருத்துரைத்த அவர் அது ‘அபத்தமானது’ என்றார்.