இந்தியர்களுக்கு உதவுவதாக வாக்குறுதி அளிப்பது ‘திருட்டு’ அல்ல

உங்கள் கருத்து : ‘இந்தியர்களுடைய இன்னல்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த ஹிண்ட்ராப்புக்கு பாராட்டுக்கள். ஆனால்  அந்த யோசனையை யார் முதலில் தெரிவித்தார்கள் என்பது மீது விவாதம் நடத்த வருமாறு நீங்கள் அழைப்பு  விடுப்பது உங்களுடைய உண்மை நிலையைச் சந்தேகிக்க வைக்கிறது”

இந்தியர்களுடைய இன்னல்கள் மீது விவாதம் நடத்த வருமாறு ஹிண்டரப் லிம் கிட் சியாங்-கிற்குச் சவால்

டாக்டர் சரவணானார்: உண்மையில் ஹிண்ட்ராப்புக்கு என்ன தான் வேண்டும் ? அது தனது நோக்கத்திலிருந்து விலகி விட்டதாகவே நான் எண்ணுகிறேன். கேலாங் பாத்தா பிரகடனத்தைப் பொறுத்த வரையில் டிஏபி ஹிண்டராப் கோரிக்கைகளை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டுள்ளது. அந்தக் கோரிக்கைகள் இப்போது முக்கிய போராட்ட நீரோட்டத்தில் சேர்க்கப்பட்டு விட்டன.

இதில் ஒன்றும் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இது, அவர்கள் செய்தாலும் தப்பு, செய்யா விட்டலும் தப்பு எனச் சொல்வதைப் போன்று உள்ளது.

அரங்கநாதன்: ஹிண்ட்ராப்பின் இந்தியர் பெருந்திட்டத்திலிருந்து டிஏபி எடுத்துள்ளது என்றால் என்ன ? அதில் என்ன பிரச்னை ? ஹிண்ட்ராப் விரும்புவது அந்தக் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பது தானே ?

ஹிண்ட்ராப்-பை பயங்கரவாத அமைப்பு என அழைத்து அதன் தலைவர்களை ஜெயிலில் அடைத்த பிஎன்-உடன் பேச்சு நடத்த ஹிண்ட்ராப் தேசிய ஆலோசகர் என் கணேசன் விரும்பவில்லை. இன்னும் கூட்டரசு அரசாங்கமாகாத டிஏபி-யுடன் விவாதம் நடத்த அவர் விரும்புகிறார்.

லூயிஸ்: கட்டுரையாளர் மரியாம் மொக்தார் சொல்வது முற்றிலும் உண்மை. அம்னோவைத் தவிர மற்ற எல்லாத்  தரப்புக்களையும் ஹிண்ட்ராப் குறை கூறுகிறது. கடந்த கால அம்னோ தவறுகளை மன்னிக்க அது தயாராக  இருக்கிறது. ஆனால் பக்காத்தான் தவறுகள் மீது கடுமையாக நடந்து கொள்கிறது.

இப்போது கணேசன் டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்-உடன் விவாதம் நடத்த விரும்புகிறார். இது உண்மையில் சரியான நகைச்சுவை. இந்தியர்கள் ஒரு போதும் ஒதுக்கப்பட்டதில்லை எனக் கூறிக் கொள்ளும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தான், ஹிண்டராப் விவாதம் நடத்த வேண்டிய சரியான மனிதர்.

உண்மையில் பக்காத்தான் ஹிண்ட்ராப் -உடன் மிகவும் பொறுமயாக நடந்து கொண்டு வருகிறது. அது எந்த நேரத்திலும் ‘தொலைந்து போங்கள்’ என ஹிண்ட்ராப்-பிடம் சொன்னதில்லை.

முன்னேற்றம்: கணேசன் அவர்களே, உங்கள் பெருந்திட்ட அம்சங்களை டிஏபி எடுத்துக் கொண்டதில் என்ன தவறு ? ஏழை இந்தியர்களுக்கு நீங்கள் விரும்புவதும் அது தானே ?

திருட்டு என்றால் என்ன ? அந்தப் பெருந்திட்டம் என்ன உங்களுடைய PhD ஆய்வுக் கட்டுரையா ? ஆகவே நீங்கள் இப்போது பக்காத்தான் ராக்யாட்டைத் தாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். இந்தியர்களை ஒரங்கட்டிய ஊழல் ஆட்சியுடன் இணங்கிப் போக முயற்சி செய்கின்றீர்கள்.

கணேசன், நீங்கள் முயலுடன் ஒடவும் முடியாது, நாய்களுடன் வேட்டையாடவும் முடியாது. நீங்கள் ஒரு நிலையை எடுக்க வேண்டும். இரண்டு தரப்பிலும் விளையாடக் கூடாது.

பக்காத்தான் உங்களுக்கு எட்டு நாடாளுமன்ற 10 சட்டமன்றத் தொகுதிகளைக் கொடுக்கவில்லை. அதனால் நீங்கள் அதன் மீது ஆத்திரப்படுவதை புரிந்து கொள்ள முடிகிறது.

அடையாளம் இல்லாதவன்#31685940: ஹிண்ட்ராப், இந்தியர்களை முட்டாள்களாக எண்ணக் கூடாது. அந்தப்  பெருந்திட்டத்தை அங்கீகரிப்பதற்கு ஏற்றுக் கொள்வதற்கு இடையில் என்ன வேறுபாடு ? அவர்கள் அதனை  அமலாக்குகின்றனரா என்பது தானே முக்கியம் ?

அந்தப் பெருந்திட்டத்தை வரைந்ததின் நோக்கம் என்ன ? இந்தியர்கள் நன்மை அடைய வேண்டும் என்பது தானே ? ஆகவே அதிகமான கட்சிகள் அந்தப் பெருந்திட்டத்தை ஏற்றுக் கொண்டால் இந்தியர்களுக்கு மேலும் நன்மை தானே ?

‘இந்தியர்களுடைய இன்னல்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த ஹிண்ட்ராப்புக்கு பாராட்டுக்கள். ஆனால் அந்த யோசனையை யார் முதலில் தெரிவித்தார்கள் என்பது மீது விவாதம் நடத்த வருமாறு நீங்கள் அழைப்பு விடுப்பது உங்களுடைய உண்மை நிலையைச் சந்தேகிக்க வைக்கிறது.

KitaAkanSiasat: கணேசன், உங்கள் பெருந்திட்டம் மீது பேச்சு நடத்த பக்காத்தான் முயன்றது. ஆனால் நீங்கள் பக்காத்தானிடமிருந்து நினைக்க முடியாத எண்ணிக்கையிலான இடங்களை கேட்ட போது உங்கள் உண்மை நிலை வெளிச்சத்துக்கு வந்து விட்டது.

நியாயமானவன்: டிஏபி இப்போது ஹிண்டராப் திட்டத்தின் சில அம்சங்களை ஏற்றுக் கொண்டுள்ளது. பக்காத்தான் அரசாங்கமானால் அவை அமலாக்கப்படும்.

அப்படி செய்யப்படா விட்டால் ஹிண்ட்ராப் டிஏபி மீது போர் தொடுக்கலாம். இப்போது ஏன் டிஏபி-யைத் தாக்க வேண்டும்.

TAGS: