24 மில்லியன் ரிங்கிட் வைர மோதிர தொடர்கதை: கற்பனையைக் காட்டிலும் வினோதமாக இருக்கிறது

jacob“அது ஜேக்கப் அண்ட் கோ-வுக்கு வியாபாரம். ஆனால் அது விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வமும்  அவற்றைப் பொதுச் செலவில் பயன்படுத்தும் ஆர்வமும் கொண்ட பிரமுகர் ஒருவர் சம்பந்தப்பட்டதாகும்’

24 மில்லியன் ரிங்கிட் வைர மோதிரம் ரோஸ்மாவுக்காக அல்ல என்கிறார் அமெரிக்க நகை வியாபாரி

பெர்ட் தான்: அந்த விவகாரம் மூண்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்காவைச் சேர்ந்த ஜேக்கப்
அண்ட் கோ நகை வணிக நிறுவனம் என்ன சொன்னாலும் அந்த மோதிரம் பிரதமருடைய துணைவியார்
ரோஸ்மா மான்சோருக்காக கொண்டு வரப்பட்டது என்னும் குற்றச்சாட்டை போகச் செய்யாது.

இப்போது ஏன் அதற்கு விளக்கமளிக்கப்படுகின்றது என்ற கேள்வி தான் எழுகிறது. தேர்தல் பிரச்சாரத்தின்
போது எதிர்க்கட்சிகள் அதனை ஒர் ஆயுதமாகப் பயன்படுத்தும் என்ற அச்சமா ?

அந்த விவகாரம் முதலில் அம்பலமான போது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவரது மனைவி ரோஸ்மா
மான்சோரும் கொடுத்த விளக்கம் அவ்வளவாக உதவவில்லை. மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலும்
அவை இல்லை.

அந்த 24 மில்லியன் ரிங்கிட் ரோஸ்மாவுக்காக கூறப்படுவதை அவர்கள் மறுத்தனர். அது ரோஸ்மாவின் புதல்வி  நூர்யானா நஜ்வான் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ள டேனியர் நசார்பாயேவ்- வின் தாயார் மைராவுக்காக  அனுப்பப்பட்டது என அவர்கள் சொல்லவே இல்லை.

அது தான் உண்மை என்றால் அவர்கள் அதனை அப்போதே சொல்லியிருக்கலாமே ? ஏன் அவ்வாறு சொல்ல
இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் ? எங்களை முட்டாளாக்க வேண்டாம்.

கதை வேண்டாம்: வாங்கும் நோக்கத்துடன் தொட்டுப் பார்ப்பதற்கு அந்த 24 மில்லியன் ரிங்கிட் வைர
மோதிரம் அனுப்பப்பட்டது என்பதே உண்மை. ஆகவே அவர்கள் என்ன சொன்னாலும் அது இரட்டை வேடம்,
பொறுப்பற்றது. காரணம்:

1) பெரும்பாலான மலேசியக் குடும்பங்கள் மாதம் ஒன்றுக்கு மூவாயிரம் ரிங்கிட்டுக்கும் குறைவாக
வருமானத்தைக் கொண்டுள்ளன,

2) பொருளாதார சூழ்நிலை உறுதியற்றதாக இருப்பதால் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளுமாறு நமது
பிரதமர் நமக்கு அறிவுரை பகர்ந்துள்ளார்.

அந்த வைர மோதிரம் மட்டுமின்றி ரோஸ்மாவிடம் உள்ள பல பிர்க்கின் கைப்பைகள், வைரம் பதிக்கப்பட்ட கை  வளையல்கள், ஆஸ்திரேலியாவில் ஒரே நேரத்தில் வாங்கப்பட்ட 60 பட்டு ஆடைகள் ஆகியவை பற்றியும்  பதில் பெற நாங்கள் விரும்புகிறோம்.

மாற்றம்: ஜேக்கப் அண்ட் கோ நகை வணிகக் கடை இயக்குநர் பிலிப் நாஸிமி அவர்களே நீங்கள் சொல்வதில்
எந்த அர்த்தமும் இல்லை.

கஸக்ஸ்தானில் உள்ள மைரா நஸர்பாயேவ்-வின் முகவரிக்கே அந்த 24 மில்லியன் ரிங்கிட் மோதிரத்தை ஏன்
அனுப்பவில்லை ? அவர் அந்நிய நாட்டில் விடுமுறைக்கு சென்றுள்ள போது அவருக்கு ஏன் அதனை அனுப்ப
வேண்டும் ? அவர் அந்நிய நாடு ஒன்றில் இருக்கும் போது அந்த மோதிரம் அவர் பெயருக்கு அனுப்பப்பட
முடியாது என்பது அந்த ஜேக்கப் அண்ட் கோ-வுக்குத் தெரியாதா ?

நீங்கள் ரோஸ்மாவின் பெயரை ஆவணங்களில் சேர்த்துள்ளதால்- அந்த மோதிரம் அனுப்பப்படும் போது
இடையில் காணாமல் போனால் அல்லது சேதமடைந்தால் அதற்கு யார் மைராவா அல்லது ரோஸ்மாவா
பொறுப்பேற்பார்கள் ?

அடையாளம் இல்லாதவன்#67264383: பிரதமர்களுடைய மனைவிகளுடன் வியாபாரம் செய்யும் நகை
வியாபாரியாக நான் இருந்தால் நான் பிரதமருடைய மனைவி சொல்வதைத் தான் ஆதரிப்பேன். எதிர்க்கட்சிகள்  சொல்வதை அல்ல.

பிரதமருடைய மனைவியைக் காப்பாற்றத் தான் நான் முயலுவேன். நான் அவ்வாறு செய்யா விட்டால்
எதிர்காலத்தில் எந்தப் பிரதமருடைய மனைவியும் என்னிடம் பொருள் வாங்க மாட்டார்கள். உண்மையில்
ஜேக்கப் அண்ட் கோ சொல்வதில் அர்த்தமே இல்லை.

பேஸ்: இதில் புதிய விஷயம் ஒன்றுமில்லை. அந்த விவகாரம் அம்பலமாகியிருக்கா விட்டால் இறுதி முடிவு
வேறு விதமாக இருந்திருக்கும்.

அது ஜேக்கப் அண்ட் கோ-வுக்கு வியாபாரம். ஆனால் அது விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வமும்
அவற்றைப் பொதுச் செலவில் பயன்படுத்தும் ஆர்வமும் கொண்ட பிரமுகர் ஒருவர் சம்பந்தப்பட்டதாகும்

ஜிஎச்கோக்: அந்தத் தொடர் கதை மூலம் நான் அறிந்து கொண்டது இது தான்: அந்த இரண்டு பெண்மணிகளும்
24 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 30.11 காரெட் நீல நிற வைர மோதிரம் உலகத்தின் இன்னொரு பகுதியிலிருந்து கொண்டு வரப்பட வேண்டும் என ஆணையிட்டனர்.

அவர்களில் யாருக்கும் அந்த மோதிரத்தை வாங்கும் நோக்கமில்லை. ஆனால் அந்த மோதிரத்தை ‘பார்க்க’
மட்டுமே விரும்பினர். “தங்கள் பிள்ளைகள் நிச்சயதார்த்தம் காரணமாக” அவர்கள் அந்த மோதிரத்தை ‘பார்க்க’
விரும்பினர்.

அந்த மோதிரத்தை பார்த்த பின்னர் அதனை மீண்டும் நியூயார்க்கிற்கு திருப்பி அனுப்பி விட்டனர். ஆகவே
எல்லோரும்  செய்வது இது தான். வேறு ஒன்றுமில்லை.

 

TAGS: