பினாங்கு பராமரிப்பு அரசாங்கம் நேர்மை வாக்குறுதிக்கு இணங்க தனது அதிகாரத்துவ கார்களின் சாவிகளை மாநிலச் செயலாளர் பேரிசான் டாருஸ்-டம் ஒப்படைத்துள்ளது.
பராமரிப்பு அரசாங்க முதலமைச்சர் லிம் குவான் எங், தமது கார், துணை முதலமைச்சர்களான மான்சோர்
ஒஸ்மான், பி ராமசாமி ஆகியோரது கார்கள் மாநில ஆட்சி மன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திய கார்கள் ஆகியவற்றின் சாவிகளையும் ஒப்படைத்தார்.
“நமது சொந்த அல்லது கட்சித் தேவைக்கு அதிகாரத்துவ கார்களைப் பயன்படுத்தக் கூடாது. அவற்றை மாநில
அரசாங்க நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்,” லிம் இன்று நிருபர்களிடம் கூறினார்.
“நாங்கள் இப்போது பராமரிப்பு அரசாங்கமாக இருந்தாலும் மாநில நிர்வாகம் கடைப்பிடிக்கும் நேர்மையை அது
காட்டுகிறது.”
“எங்கள் ஒட்டுநர்களுக்கும் அது பொருந்தும். அவர்கள் அலுவலக நேரங்களிலும் நாங்கள் அதிகாரத்துவ நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் போதும் மட்டுமே வேலை செய்வார்கள்.”
ஏப்ரல் 5ம் தேதி பினாங்கு மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்டது. ஏப்ரல் 3ம் தேதி நாடாளுமன்றம்
கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.