திரங்கானு அரச குடும்பத்தைச் சேர்ந்த பிரபலமாக கட்டிட கலைஞர் ராஜா கமாருல் பாஹ்ரின் ஷா ராஜா அகமட் ஷா-வை கோலா திரங்கானு நாடாளுமன்றத் தொகுதியில் நிறுத்துகிறது.
1992ம் ஆண்டு தமது இரண்டு பிள்ளைகளை ஆஸ்திரேலியாவிலிருந்து அவர் மீட்டுக் கொண்டு வந்த பின்னர்
பிரபலமடைந்தார். கூரை இடிந்து விழுந்த சுல்தான் மிஸான் ஜைனல் அபிடின் அரங்கத்தின் வரைபடத்தைத்
தயாரித்தவரும் அவர் தான்.
ஆனால் அந்தக் கோளாறுக்கு தாம் பொறுப்பல்ல என ராஜா கமாருல் பாஹ்ரின் கூறியுள்ளார்.
பேராக் லாருட்டில் குற்றப் புலனாய்வுத் துறையின் முன்னாள் தலைவர் பாவ்சி ஷாரி பேராக், லாருட்டில் நிறுத்தப்படுவார் என்றும் பாஸ் அறிவித்துள்ளது.
இதனிடையே பிஎன் கோட்டை எனக் கருதப்படும் புத்ரா ஜெயாவில் பாஸ் உதவித் தலைவர் ஹுசாம் மூசா நிறுத்தப்படுவார் என்ற தகவல் பலருக்கு வியப்பை அளித்துள்ளது.
பாதகமான சூழ்நிலையிலும் பாஸ் கட்சி போட்டியிடத் தயாராக இருப்பதைக் காட்டுவதே அதன் நோக்கம் எனச் சொல்லப்படுகின்றது.
மற்ற உதவித் தலைவர்களான மாஹ்புஸ் ஒமார் கெடா பொக்கோக் செனா-விலும் சலாஹுடின் அயூப் ஜோகூர் பூலாயிலும் களமிறக்கப்படுவர்.
கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங், தமது திரங்கானு மாராங் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைத்துக் கொள்ள அங்கு போட்டியிடுவார். அதே வேளையில் துணைத் தலைவர் முகமட் சாபு கெடாவில் உள்ள பெண்டாங் நாடாளுமன்றத் தொகுதியில் நிறுத்தப்படுவார்.
கோலாலம்பூரில் பாஸ் கட்சித் தலைமையகத்தில் அப்துல் ஹாடி அந்த அறிவிப்புக்களைச் செய்தார். தேசிய
நிலையிலும் மாநில நிலையிலும் தொடர்ந்து வேட்பாளர் பற்றிய அறிவிப்புக்கள் வெளியாகும் என்றார் அவர்.