ஈரானின் ஒரேயொரு அணு ஆலை அமைந்துள்ள புஷேர் நகருக்கு அருகே ஏற்பட்ட ஒரு பூகம்பத்தில், குறைந்தபட்சம் 30 பேராவது இறந்துபோனதுடன், 800 பேர் காயமடைந்திருக்கிறார்கள்.
அந்த பூகம்பத்தின் மையம் நகருக்கு தென்கிழக்கே 100 மைல் தூரத்தில் நிலைகொண்டிருந்தது என்றும், அதன் வீரியம் 6.3 என்றும் அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.
அணு ஆலை பழுதடையவில்லை என்று இரானிய தொலைக்காட்சியில் தோன்றிய புஷேரின் ஆளுனர் கூறினார்.
அந்தப் பகுதியில் பத்தாயிரம் பேர் வாழ்வதாக இரானிய செம்பிறைச் சங்கம் கூறியுள்ளது. பாதிப்புக்களை கணிப்பிட அவர்கள் குழு ஒன்றை அங்கு அனுப்பியுள்ளனர்.