தெற்கு சூடானில் தாக்குதல்: இந்திய வீரர்கள் ஐவர் பலி

south sudan UN peaceதெற்கு சூடான் நாட்டில் அமைதி பணியில் ஈடுபட்டிருந்த, இந்திய ராணுவ வீரர்கள், ஐந்து பேர், அந்நாட்டு பிரிவினைவாதிகள் தாக்கியதில் பலியாயினர்.

ஆப்ரிக்க நாடான சூடான் நாட்டில் நீண்ட காலமாக உள்நாட்டு சண்டையை அடுத்து, 2011ல் தெற்கு சூடான் தனியாக பிரிந்தது. எனினும், கும்ருக் பகுதியில் அதிக வன்முறை காணப்பட்டதால், ஐ.நா., அமைதி படை அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டது. இந்த அமைதி படையில், இந்திய வீரர்கள் 2,200 பேர் இடம் பெற்றுள்ளனர்.

ஜோங்லி என்ற இடத்தில், நேற்று இந்திய வீரர்கள் உட்பட, 32 பேர் சென்ற பாதுகாப்பு வாகனம் மீது, அந்நாட்டு பிரிவினை வாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், இந்திய ராணுவ வீரர்கள் ஐந்து பேர் பலியாயினர். நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள், ஜுபா நகருக்கு ஹெலிகாப்டர் மூலம் அழைத்துவரப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பலியான இரண்டு ராணுவ அதிகாரிகள் உள்பட ஐந்து வீரர்களின் உடல்களை இந்தியாவுக்கு அனுப்பும் பணி நடக்கிறது.

இந்திய அமைதி தூதர்கள் 5 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஐ.நா., பொதுச் செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐ.நா., பாதுகாப்பு மன்றமும் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.