பராமரிப்பு அரசாங்க வழிகாட்டிகளையும் நடத்தை விதிமுறைகளையும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் கூட்டரசு அரசாங்கமும் நிர்ணயம் செய்கின்றன. அவை சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தாது என தேர்தல் ஆணைய (இசி) தலைவர் அப்துல் அஜிஸ் யூசோப் கூறுகிறார்.
‘அதனைச் சட்டத்தின் மூலம் தண்டிக்க முடியாது. வழிகாட்டிகளையும் நடத்தை விதிமுறைகளையும் பின்பற்றுவது அந்தந்த அரசாங்கங்களைப் பொறுத்ததாகும்,” என்றார் அவர்.
பிரச்சார நோக்கங்களுக்கு தகவல் துறை வாகனங்களைப் பயன்படுத்துவது சரியானதே என்று தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ராயிஸ் யாத்திம் நேற்று கூறியிருந்தார்.
ராயிஸ் அறிக்கைக்கு குறித்து நேரடியாகப் பதில் அளிக்க மறுத்து விட்ட அப்துல் அஜிஸ், இன்னும் ‘பிரச்சார
காலம் தொடங்கவில்லை’ என்று மட்டும் வலியுறுத்தினார். ஆகவே பிரச்சாரத்துக்கு அரசாங்க எந்திரம்
பயன்படுத்தப்படுகின்றது என்ற குற்றச்சாட்டுக்கள் மீது இசி எதுவும் செய்ய முடியாது என்றார் அவர்.
வேட்பாளர் நியமன நாள் வரையில் அரசாங்கம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கு அரசாங்கச் சொத்துக்கள்
பயன்படுத்தப்பட முடியுமா என்பதை நிர்ணயம் செய்வது சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடைய விருப்பத்தைப் பொறுத்தது என்றும் அப்துல் அஜிஸ் சொன்னார்.