‘பராமரிப்பு அரசாங்கம் மீது ராயிஸ் சொல்வது, ஆத்திரத்தை மூட்டுகிறது’

Raisஉங்கள் கருத்து : ‘பொது நிதிகளைத் தவறாகப் பயன்படுத்துவதை நீங்கள் எப்படிப் பார்த்தாலும் எப்படி கதை திரித்தாலும் பொது  நிதிகளைத் தவறாகப் பயன்படுத்தியது தான்.’

ராயிஸ்: அரசாங்க எந்திரத்தைப் பயன்படுத்துவது சரியானதே

பெய்ன்ர்ஸ்: தேர்தல் நோக்கத்திற்காக அரசாங்க எந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்திய தார்மீக ரீதியில் பொருத்தமற்ற ஒரு நடவடிக்கையை நியாயப்படுத்த தொழில் ரீதியில் வழக்குரைஞரும் முதுநிலை  அரசியல்வாதியுமான ஒருவர் நுட்பமான அம்சங்களைப் பயன்படுத்தியுள்ளது வருத்தமளிக்கிறது.

பராமரிப்பு அரசாங்கத்தின் தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ராயிஸ் யாத்திம் மீது நான் வைத்திருந்த மதிப்பு பெரிதும் குறைந்து விட்டது.

அவர் கொடுத்துள்ள விளக்கம் பிஎன் மேலும் வாக்குகளை இழக்க வழிகோலியுள்ளது. இத்தகைய ஆணவப் போக்கைக் கொண்டுள்ள யாருக்கும் அல்லது பிஎன் -னுக்கும் நான் வாக்களிக்க மாட்டேன்.

பெர்ட் தான்: ராயிஸ் யாத்திம் நீங்கள் உண்மையானவரா ? நீங்கள் வழக்குரைஞரா ? நீங்கள் எங்கே சட்டம் படித்தீர்கள் ?

பிரச்சார நோக்கங்களுக்கு அரசாங்க எந்திரத்தை எப்படிப் பயன்படுத்த முடியும் ? அது, அதனை அனுமதிக்கும் அம்னோ சட்டமாகத் தான் இருக்க வேண்டும்.

நெகிரி செம்பிலான் பராமரிப்பு அரசாங்கத்துக்கு எழுத்துப்பூர்வமான வழிகாட்டிகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட போது தேர்தல் ஆணையம் அதனைச் செய்ய மறுத்ததில் வியப்பில்லை.

அதற்கான காரணம் இது தான்: தெளிவான எழுத்துப்பூர்வமான உத்தரவுகளும் விதிகளும் இல்லாமல் சட்டத்தில்  சந்தேகம் நிலவ அனுமதிப்பது. தனது விருப்பம் போல் பிஎன் அதற்கு விளக்கமளிக்க இடம் கொடுப்பதே  அதன் நோக்கம். சட்டத் துறையில் டாக்டர் பட்டம் பெற்றுள்ள ராயிஸ் செய்வதைப் போல.

குவினோபாண்ட்: சட்டத் தொழிலில் ஈடுபட்டிருந்த, நிர்வாக அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவது பற்றி  விரிவாக எழுதியுள்ள ஒருவர், பிரச்சாரத்திற்கு அரசாங்க எந்திரம் பயன்படுத்தப்படுவது மீது கொடுத்துள்ள  விளக்கம் வருத்தத்தை அளிக்கிறது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பிஎன் இப்போது பராமரிப்பு அரசாங்கம்  தான் என்பதை ராயிஸ் மறந்து விட்டதாகத் தோன்றுகிறது.

பிஎன் -னுக்கு நிர்வாக அதிகாரங்கள் இல்லை என யாரும் திடீரெனச் சொல்லவில்லை. அந்த நிர்வாக அதிகாரங்கள் அரசாங்கத்தின் அன்றாட நடவடிக்கைகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அடுத்து வரும்
அரசாங்கத்திற்கு அது கடப்பாடுகளை ஏற்படுத்தக் கூடாது.

அரசியல் பிரச்சாரத்திற்கு அரசாங்க எந்திரத்தைப் பயன்படுத்துவது அதில் நிச்சயம் இருக்க முடியாது. பராமரிப்பு அரசாங்கம் என்ற முறையில் அது, தெளிவாக இல்லாத வரிகளைப் பயன்படுத்தி அதிகாரத்துவ நிகழ்வுகள் என்னும் போர்வையில் அரசாங்க நிர்வாகத்தை அரசியல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தக் கூடாது.

ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்: அரசாங்க வேலைகளுக்கு அரசாங்க வாகனங்களை பயன்படுத்தக் கூடாது என யாரும் சொல்லவில்லை. பிஎன் ( அல்லது வேறு எந்த அரசியல் நோக்கங்களுக்கும்) தொடர்பான நோக்கங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று தான் நாங்கள் சொல்கிறோம்.

தகவல் துறை வாகனங்கள் எந்த அடிப்படையில் அரசியல் பிரச்சார நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன  ? அந்த வாகனங்கள் மக்கள் வரிப்பணத்திலிருந்து வாங்கப்பட்டவை. பிஎன் பணத்தில் அல்ல. எதிர்க்கட்சி  ஆதரவாளர்களும் வரி செலுத்துகின்றனர்.

ஜேகேதும்: பொது நிதிகளைத் தவறாகப் பயன்படுத்துவதை நீங்கள் எப்படிப் பார்த்தாலும் எப்படி கதை திரித்தாலும் பொது நிதிகளைத் தவறாகப் பயன்படுத்தியது தான்.

தேஹாசாப்பி: அமைச்சர் சொல்வது அவரது ஆணவத்தையும் அதிகார அத்துமீறலையும் காட்டுகின்றது. எல்லா  மலேசியர்களுக்கும் சேவை செய்யவே அவரது அமைச்சர் பதவி உருவாக்கப்பட்டுள்ளதை அவர் நினைவில்  கொள்ள வேண்டும். அம்னோ/பிஎன் நலனுக்கு மட்டுமல்ல.

ஜியூடைஸ்: ராயிஸ் அந்த அறிக்கையை விடுத்தது எனக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. இன்னும் முடிவு செய்யாதவர்கள் பிஎன் -னுக்கு வாக்களிக்க வேண்டாம் என முடிவு செய்ய அது உதவியுள்ளது. அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதோடு அதனை நியாயப்படுத்தவும் முயலும் யாருக்கும் நல்ல சிந்தனை கொண்ட யாரும் வாக்களிக்க மாட்டார்கள்.

TAGS: