தேர்தலுக்குமுன் முகைதின் சீனப்பள்ளி ஆசிரியர்களைச் சந்திக்கிறார்

1 muhஜோகூரில் தேர்தல் காய்ச்சல் அதிகமாகவே இருக்கிறது.  அடுத்த வாரம் பராமரிப்பு அரசாங்கத்தின் துணைப் பிரதமர் முகைதின் யாசின் தேசிய வகை சீனப்பள்ளிகளின் ஆசிரியர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “சிறப்புக்கூட்டமே” இதற்குச் சான்றாகும்.

1 muh1வேட்பாளர் நியமன தினத்துக்கு நான்கு நாள் முன்னதாக ஜோகூர் பாரு பூன் இயு தேசிய வகை சீனப்பள்ளியில் நடைபெறும் அக்கூட்டத்தின்வழி பிஎன்னுக்குச் சீனப்பள்ளி ஆசிரியர்களின்  ஆதரவைப் பெற முடியும் என்று பராமரிப்பு அரசாங்கத்தில் கல்வி அமைச்சருமான முகைதின் (படத்தில் வலமிருப்பவர்) நம்புவதாக தெரிகிறது.

அந்தத் தெற்கத்தி மாநிலத்தில் பிஎன் அரசு, டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங், மாநில பிகேஆர் தலைவர் சுவா ஜுய் மெங், பாஸ் உதவித் தலைவர் சலாஹுதின் ஆயுப் ஆகியோரின் தலைமையில் பக்காத்தான் ரக்யாட்டின் முழுமூச்சான தாக்குதலை எதிர்நோக்கியுள்ளது.

கூட்டத்துக்கு ஜோகூருக்கு வெளியில் உள்ள ஆசிரியர்களும் வருவர்

கோலாலும்பூர் கூட்டரசு பிரதேச கல்வித் துறையின் அதிகாரி ஒருவர், 15 பள்ளிகள் அக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு பணிக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தினார். அப்பள்ளிகளின் ஆசிரியர்கள் ஜோகூர் செல்ல பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படும்.

ஜோகூரில் உள்ள ஆசிரியர் ஒருவர் தம் பள்ளிக்கும் எழுத்துப்பூர்வமான உத்தரவு வந்திருப்பதை மலேசியாகியிடம் உறுதிப்படுத்தினார்.

“அக்கூட்டத்தில் குறிப்பிட்ட சில பள்ளிகளுக்கு மான்யங்கள் வழங்கப்படுவதாகக் கேள்விப்பட்டேன். எல்லா ஆசிரியர்களும் பரிசுப்பொருள் அடங்கிய பைகளையும் பெறுவர்”, என்று அந்த ஆசிரியர் தெரிவித்தார். ஆனால், அவர் தம் பெயரைத் தெரிவிக்க விரும்பவில்லை.

“வேலையைப் போட்டுவிட்டு மாணவர்களை விட்டுவிட்டு அரசியல்வாதிகளைச் சந்திக்கப்  போ என்று கட்டாயப்படுத்துவது ஒரு வீண் வேலை. இந்த நேரத்தில் இப்படி ஒரு நிகழ்வு நடத்தப்படுகிறது என்றால்…. அவரின் (முகைதின்) நோக்கம் நமக்குப் புரிகிறது”, என்றாரவர்.

வீ: இதற்கும் தேர்தலுக்கும் சம்பந்தமில்லை

1 muh weeமலேசியாகினி கல்வி துணை அமைச்சர் வீ கா சியோங்கைத் தொடர்புகொண்டபோது அப்படி ஒரு கூட்டம் நடப்பதை அவரும் ஒப்புக்கொண்டார். ஆனால், அதற்கும் பொதுத் தேர்தலுக்கும் சம்பந்தமுண்டு என்று கூறப்படுவதை அவர் மறுத்தார்.

முகைதின் நாடு முழுக்க பயணம் செய்யும்போது பல இடங்களில் இப்படிப்பட்ட கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கமானதுதான் என்றார்.

“இது நீண்ட காலத்துக்குமுன்பே திட்டமிடப்பட்டது. ……..மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் நடத்தலாம் என்றிருந்தோம்”.

அந்நிகழ்வில் பள்ளிகளுக்குச் சிறப்பு நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் சீனப் பள்ளிகளைத் தரமுயர்த்தவும் பராமரிக்கவும் ஒதுக்கப்பட்ட ரிம100 மில்லியன் சிறப்பு கட்டிட நிதியிலிருந்து அவை வழங்கப்படுகின்றன.

 

 

 

TAGS: