ஜுய் மெங்-கிற்கு சிகாம்புட் டிஏபி-யின் வலுவான ஆதரவு கிடைத்தது

jui mengசிகாமட் நாடாளுமன்றத் தொகுதியில் ஜோகூர் பிகேஆர் தலைவர் சுவா ஜுய் மெங் நிறுத்தப்படுவதற்கு  தொடக்கத்தில் டிஏபி அடித்தட்டு தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும் நேற்று எல்லா மூன்று  பக்காத்தான் ராக்யாட் தோழமைக் கட்சிகளின் உள்ளூர் தலைவர்களும் தங்கள் நடவடிக்கைகள் மூலம்  சுவா-வுக்கு முழு ஆதரவு தெரிவித்துக் கொண்டனர்.

சுவா-வை எதிர்த்து சுயேச்சையாக நிற்கப் போவதாக மருட்டியிருந்த சிகாமட் டிஏபி தலைவர் பாங் ஹோக்
லியோங், நேற்று சுவா சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சார நிகழ்வுகளிலும் மற்ற டிஏபி உறுப்பினர்களுடன்  காணப்பட்டார். அந்த நிகழ்வுகளில் நிருபர்கள் சந்திப்பு, விருந்து, செராமா, பிகேஆர் நடவடிக்கை மய்யத்  திறப்பு விழா ஆகியவையும் அடங்கும்.

செராமா ஒன்றில் பேசிய பாங், எல்லா பக்காத்தான் உறுப்புக் கட்சிகளுக்கும் பொது எதிரி பிஎன் எனக்
கூறினார்.

“நான் 26 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். நான் இந்த நிகழ்வுக்கு வர மாட்டேன் எனப் பலர்
எண்ணியிருக்க வேண்டும். அவர்கள் எண்ணம் தவறாகி விட்டது. நமது பொது எதிரி பிஎன் ஆகும்.
பக்காத்தான் தோழர்களுக்கு இடையே அல்ல.”jui meng1

“வேட்பாளர் பற்றி முடிவு செய்வதற்கு முன்னர் அரசியல்வாதிகள் தொகுதிகளுக்காகப் போராடுவது  இயல்பாகும். இப்போது முடிவு செய்யப்பட்டு விட்டது. நாம் வேறுபாடுகளைக் களைந்து விட்டு பொது  எதிரியுடன் போராட வேண்டும்,” என பாங் மேலும் சொன்னார்.

அவர் 2008ல் அந்தத் தொகுதியில் டிஏபி வேட்பாளராகப் போட்டியிட்டார். வரும் தேர்தலில் தாம்
சுயேச்சையாகப் போட்டியிட்டு வாக்குகளைப் பிரிக்க மாட்டேன் என்றும் அவர் உறுதி அளித்தார். இப்போது
பராமரிப்பு அரசாங்கத்தில் மனித வள அமைச்சராக இருக்கும் டாக்டர் எஸ் சுப்ரமணியத்தின் வசம் உள்ள
சிகாமட் தொகுதியை கைப்பற்ற சுவா-வுக்கு டிஏபி தேர்தல் எந்திரம் உதவி செய்யும் என்றும் பாங் வாக்குறுதி
அளித்தார்.

பக்காத்தானுக்கு மலாய் ஆதரவை பாஸ் கட்சி தேடும்

சிகாமட் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ஜெமெந்தா சட்டமன்றத் தொகுதியில் பாங் நிறுத்தப்படுவார் என
எதிர்பார்க்கப்படுகின்றது. அவர் கடந்த தேர்தலில் சிகாமட்டிலும் ஜெமெந்தேயிலும் போட்டியிட்டார்.

ஒருமைப்பாட்டைக் காட்டியதற்காக பாங்-கிற்கு சுவா பல முறை நன்றி தெரிவித்துக் கொண்டார். பாங்
ஜெமெந்தே-யில் நிறுத்தப்படுவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.jui meng2

“எனக்கு அளிக்கப்பட்ட விருந்தும் தங்கள் ஆதரவைக் காட்ட டிஏபி உறுப்பினர்கள் முழு எண்ணிக்கையில்  கலந்து கொண்ட வரவேற்பு நிகழ்வும் என் மனதைப் பெரிதும் தொட்டு விட்டன.”

“நான் பிஎன் அமைச்சர் ஒருவருடன் மோதுவதற்கு தொடக்கத்திலிருந்து எல்லாவற்றையும் ஆரம்பிக்க  வேண்டும் என எண்ணியிருந்தேன்.”

சுவா பக்காத்தான் ஆதரவாளர்கள் கலந்து கொண்ட விருந்து நிகழ்வு ஒன்றில் அவ்வாறு கூறினார்.

2011ம் ஆண்டு ஜனவரி மாதம் நிகழ்ந்த தெனாங் இடைத்தேர்தலில் பாஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட
நோர்மலா சுடிர்மானும் சுவாவுக்கு ஆதரவு தெரிவிக்க அந்த நிகழ்வில் பங்கு கொண்டிருந்தார்.

“வேட்பாளருடைய இன, சமய வேறுபாடின்றி பக்காத்தானுக்கு ஆதரவு திரட்ட பாஸ் கட்சி முழு மூச்சாக
பாடுபடும்,” என்றார் அவர்.

அந்த நோக்கத்திற்காக ஏப்ரல் 14ம் தேதி செராமா ஒன்றில் கலந்து கொள்ள பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக்
அப்துல் அஜிஸ் நிக் மாட் சிகாமட்டுக்கு வருவார் என்றும் அவர் அறிவித்தார்.

 

TAGS: