ஆயர்: ஹசான் “மிகவும் கவனக் குறைவாக” இருந்துள்ளார்

சிலாங்கூரில் சமய விவகாரங்களுக்கு பொறுப்பேற்றுள்ள ஆட்சி மன்ற உறுப்பினரான பாஸ் கட்சியின் ஹசான் அலி, “மற்றவர்கள் தவறு செய்வதாக சாடும் போது ஒரு கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர் என்ற முறையில் சந்தேகத்துக்குரிய ஆதாரங்களை நம்பக் கூடாது”, என கத்தோலிக்க ஆயர் பால் தான் சீ இங் நினைவுபடுத்தியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் கிறிஸ்துவ அமைப்பு ஒன்று நடத்திய நிகழ்வு ஒன்றில் முஸ்லிம்கள் கிறிஸ்துவ சமயத்துக்கு மாற்றப்படுவதை சுல்தான் நேற்று விடுத்த அறிக்கை காட்டுவதாக ஹசான் தெரிவித்த கருத்துக்கு ஆயர் தான் பதில் அளித்தார்.

“மற்ற எந்தக் கட்சிகளையும் விட பாஸ் கட்சி, குற்றம் சாட்டுவதற்கு முன்னர் ஆதாரங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்,” என்று மலாக்கா ஜோகூர் தேவாலயத் திருச்சபையின் தலைவருமான அவர் சொன்னார்.

அவர் அதனை மேலும் விளக்கினார்: “அவரது கட்சி, நீதி முறை ஒன்றை- இந்த நாட்டில் குறைந்த பட்சம் ஒரு மாநிலத்திலாவது-அமலாக்க  விரும்புகிறது. தண்டனைகளை விதிப்பதற்கு முன்னர் ஆதாரங்களைப் பெறுவதற்கு அந்த முறை முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை நான் அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.”

டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் மையத்தில் நடைபெற்ற விருந்தில் முஸ்லிம்கள் கிறிஸ்துவ சமயத்துக்கு மாற்றப்படுவதாக கூறப்பட்ட விவகாரத்தில் முடிவுக்கு வருவதற்கு முன்னர் ஹசான் ஆதாரங்களை மதிப்பீடு செய்வதில் மிகவும் கவனக் குறைவாக நடந்து கொண்டுள்ளார்.”

“அவர் தமது கட்சி போராடுகிற நீதி முறைக்கு அவர் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை.”

“அந்த வகையில் தன்மூப்பாக கூறப்பட்ட கருத்தைக் கொண்டு குற்றம் சாட்டும் முடிவுக்கு வந்துள்ளார். ஆகவே சந்தேகத்துக்குரிய ஆதாரங்கள் அடிப்படையில் மிகவும் கடுமையான குற்றச்சாட்டை அனுமதிக்கும் வேளையில் அவரது கட்சி எத்தகைய நீதி முறையை வலியுறுத்துகிறது?” என அவர் வினவினார்.

TAGS: