“நமது நேரம் வந்து விட்டது, மே 5ல் வரலாறு படைப்போம்”

voteஉங்கள் கருத்து : ‘ஊழல், நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உதவுவது, வெறித்தனம், சட்ட நிலை பின்பற்றப்படாதது  ஆகியவற்றை இந்த நாட்டிலிருந்து விரட்டும் நாள் அதுவாகும்’

’13-வது பொதுத் தேர்தல் வேட்பாளர் நியமனம் ஏப்ரல் 20, தேர்தல் மே 5′

சின்ன அரக்கன்: மலேசியர்கள் பெருமை கொள்ளக் கூடிய எடுத்துக்காட்டுத் தலைமைத்துவத்தில் உண்மையில்  நம்பிக்கை வைத்துள்ள, கறை படியாத நடத்தையும் நேர்மையும் கொண்ட தலைவர்களைக் கொண்ட  அரசாங்கத்தை 13 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தெரிவு செய்யும் நாள் ஞாயிற்றுக் கிழமை, மே 5, 2013  ஆகும்.

நாட்டின் அரசமைப்பு, சட்டங்கள் ஆகியவற்றின் புனிதத்தன்மையை மதிக்கின்ற, தனது அடிப்படைப் பண்புகளாகக் கொண்டு கடமையாற்றும் போது வெளிப்படைத் தன்மையையும் பொறுப்புணர்வையும் பின்பற்றும்  அரசாங்கத்தை வாக்காளர்கள் தேர்வு செய்ய வேண்டும்.

ஊழலை அச்சமின்றி எதிர்த்துப் போராடக் கூடிய, ஊழல் தலைவர்களை நீதியின் முன் நிறுத்தும் ஆற்றலைக் கொண்ட தலைவர்கள் வழி நடத்தும் அரசாங்கத்தை தேர்வு செய்ய வேண்டும் என்பதை நாடு முழுவதும் உள்ள  வாக்காளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

அதனை எளிதாகச் சொன்னால் கடந்த ஐந்து தசாப்தங்களாக தங்கள் பதவிகளையும் அதிகாரங்களையும் தவறாகப் பயன்படுத்தியுள்ள பிஎன் தலைவர்கள் ஆட்சியைத் தூக்கி எறிய வாக்காளர்கள் பயப்படக் கூடாது.

சிறந்த மலேசியாவுக்காக கவனத்துடனும் விவேகத்துடனும் வாக்களியுங்கள். 13வது பொதுத் தேர்தல் பொன்னான வாய்ப்பு. அதனை தவற விடக் கூடாது.

பெர்ட் தான்: எல்லா இனங்களையும் சமயங்களையும் சார்ந்த மலேசியர்கள் ஒன்றிணைந்து ஊழல் ஆட்சி என  அழைக்கப்படும் பிஎன் -னை விரட்டுவதற்கான நாள் மே 5 ஆகும்.

நமக்குச் சொந்தமானது என நாம் அனைவரும் பெருமை கொள்ளக் கூடிய அரசாங்கத்தை நாம் தேர்வு செய்ய வேண்டும். நாம் நிமிர்ந்து நின்று உண்மையான மலேசியர்கள் என நம்மை அடையாளம் காட்டிக் கொள்ள வேண்டும்.

சாதாரண ஆன்மா: வாக்களிப்பதற்கு தங்களை ஒரு போதும் பதிந்து கொள்ளாதவர்கள் இசி என்ற தேர்தல் ஆணைய இணையத் தளத்தில் தங்கள் பெயர்களைச் சோதித்துக் கொள்வது நல்லது. தாங்கள் கள்ளத்தனமாக பதிவு செய்யப்பட்டுள்ளனரா என்பதை அவர்கள் அறிந்து கொள்ள அது உதவும்.

இசி இணையத் தளத்தில் தங்கள் பெயர்களும் அடையாளக் கார்டு எண்களும் தங்களுக்குத் தெரியாமல் பட்டியலிடப்பட்டுள்ளதை என் மூன்று நண்பர்கள் கண்டு பிடித்துள்ளனர். நீங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அன்றைய தினம் வாக்களித்து விடுங்கள்.

பேஸ்: நாம் புதிய கால கட்டத்தை வரவேற்போம். மலேசியாவை நன்கு நிர்வகிக்கக் கூடிய ஆற்றலைக் கொண்ட, சாதனைகள் புரிந்துள்ளவர்களுக்கு நாம் வாக்களிப்போம்.

தேர்தலில் நிற்பதற்குத் தெரிவு செய்யப்பட்ட ஆனால் மோசமான பதிவேடுகளைக் கொண்டவர்களை வாக்காளர்கள் ஒதுக்க வேண்டும். நாட்டுக்குச் சிறந்த நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கே பொதுத் தேர்தல் நடத்தப்படுகின்றது. அரசியல் கோமாளிகளைத் தேர்வு செய்ய அல்ல.

ஸ்டிங்ரே: தகுதி பெற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும் ஒரு வேண்டுகோள், மே 5ம் தேதி வாக்களிக்கச் செல்லுங்கள். பயப்பட வேண்டாம். எது சரியோ அதனைச் செய்யுங்கள். துணிச்சலுடன் இருங்கள். வாக்களிக்கச்  செல்லுமாறு உங்கள் நண்பர்களையும் உறவினர்களையும் கேட்டுக் கொள்ளுங்கள். நமது குரல் ஒலிப்பதற்கு  இதுவே நல்ல வாய்ப்பு.

திரு: நாம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. அந்த மாற்றத்தைக் கொண்டு வர நமது பங்கை ஆற்றுவோம். நாம் நமது பங்கைச் செய்யாவிட்டால் நாம் இது வரை பேசியது எல்லாம் ஒன்றுமில்லாமல் போய் விடும்.

வரலாற்றில் பங்கு பெற நம் அனைவருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நமது நாட்டை தோற்றுவித்தவர்களுடைய  கோட்பாடுகளை அந்தக் கோமாளிகள் மாற்றி விட்டனர். நாம் அவற்றைச் சரி செய்ய வேண்டும்.

இறுதியில் மாற்றம்: மே 5 மிக, மிக புனிதமான நாள்- ஊழல், நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உதவுவது,  வெறித்தனம், சட்ட நிலை பின்பற்றப்படாதது ஆகியவற்றை இந்த நாட்டிலிருந்து விரட்டும் நாள் அதுவாகும்.  பிரார்த்தனை செய்து விட்டு உங்கள் மனதில் உண்மை, பாசம், நீதி ஆகியவற்றைப் பதிய வைத்துக் கொண்டு  உங்கள் வாக்கைச் செலுத்துங்கள்.

ஐந்து ஆண்டுகளாக இணைய ஊடகங்களில் முரண்பாடான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. கட்டுரையாளர்கள் வாக்குவாதம் நடத்தியுள்ளனர். வசை பாடியும் உள்ளனர்.

அந்த வேறுபாடுகளை புதைத்து விட்டு துங்கு அப்துல் ரஹ்மானும் ஹுசேன் ஒன் -னும் உருவாக்கிய ஆனால் இப்போது கடத்தப்பட்டு விட்ட அழகிய மலேசியாவை மீண்டும் கொண்டு வர முயலுவோம்.

TAGS: