சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்) கடந்த ஆண்டின் டிஏபி கட்சித் தேர்தல் மீதான விசாரணையை பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தள்ளிவைத்துள்ளது என டிஏபி தேசிய ஏற்பாட்டுக்குழுச் செயலாளர் அந்தோனி லோக் இன்று தெரிவித்தார்.
“நாங்கள்தாம் அவ்வாறு (விசாரணையைப் பொதுத் தேர்தலுக்குப்பின்னர்) வைத்துக்கொள்ளுமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டோம்”, என்று லோக் கூறியதாக சின் சியு சிட் பாவ் அறிவித்துள்ளது.
அந்த வேண்டுகோளை ஆர்ஓஎஸ் ஏற்றுக்கொண்டிருப்பதால் இனி, தேர்தல் காலத்தில் டிஏபி இரத்தாகும் சாத்தியம் இல்லை.
எனவே, டிஏபி மே 5 தேர்தலில் அதன் ராக்கெட் சின்னத்திலேயே போட்டியிடலாம் என்றாரவர்.
ஆர்ஓஎஸ்ஸின் முடிவு இரண்டு நாள்களுக்குமுன் டிஏபிக்குத் தெரிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட லோக், விசாரணைக்கான நாள் இன்னும் நிச்சயிக்கப்படவில்லை என்றார்.