நஜிப்: நாட்டின் கட்டமைப்பு வசதிகள் பிஎன் ஏற்படுத்தியவை

najibஇந்த நாட்டில் அனைத்து பெரிய கட்டமைப்பு வசதிகளும் கடந்த காலத்தில் பிஎன் ஏற்படுத்தியவை என்பதை  பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பொது மக்களுக்கு நினைவுபடுத்தியுள்ளார்.

மே 5ம் தேதி வாக்களிப்பதற்கு முன்னர் மக்கள் அதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

“கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA) இல்லாத, KLCC இல்லாத, புத்ராஜெயா இல்லாத,  டிபிஎஸ் பஸ் நிலையம் இல்லாத ஒரு நாட்டை கற்பனை செய்து பாருங்கள்,” என பண்டார் தாசெக்  செலத்தானில் ஒருங்கிணைக்கப்பட்ட தெற்கு முனையத்தை (TBS) தொடக்கி வைத்துப் பேசிய நஜிப் சொன்னார்.

அந்த மேம்பாடுகளுக்கு தொடக்கத்தில் எதிர்ப்புத் தெரிவித்த ‘சில கட்சிகள்’ இப்போது அவற்றை “சொந்தம்”
கொண்டாட விரும்புகின்றன என்றும் அவர் கூறிக் கொண்டார்.

“அப்போது கூட அந்தத் திட்டங்கள் அனைத்துக்கும் எதிர்ப்புத் தெரிவித்த தரப்புக்களும் இருந்தன. நடப்பு
அரசாங்கம் தயாரித்த அந்த வசதிகளை தாங்கள் சொந்தம் கொண்டாட வேண்டும் என அவை இப்போது
விரும்புகின்றன,” என அந்த பஸ் நிலையத்தில் கூடியிருந்த மக்களிடம் பிரதமர் சொன்னார்.

‘மாற்றம்’ என்னும் வார்த்தை மக்களைக் கவர்ந்துள்ளதாகத் தோன்றுகிறது. ஆனால் ‘மாற்றம்’ பயன் தருமா
என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாங்கள் திறமையான அரசாங்கம் என்பதை மெய்பித்துள்ளோம்  என அவர் மேலும் சொன்னார்.

“எல்லா அரசாங்கங்களும் ஒரே மாதிரியானது தான் என்று சிலர் சொல்கின்றனர். அது உண்மை அல்ல. சில
அரசாங்கங்கள் நல்லதைக் கொண்டு வரும். சில அரசாங்கங்கள் ஏமாற்றத்தைக் கொண்டு வரும்.”என்றார் நஜிப்.

“விமான நிலையத்தைக் காட்டிலும் சிறப்பாக உள்ளது”

அந்த டிபிஎஸ் பஸ் முனையம் அரசாங்கத்தின் உருமாற்றத் திட்டங்கள் வெற்றி அடைந்துள்ளதைக் காட்டுகிறது  என்றும் அவர் சொன்னார்.

மொத்தம் 570 மில்லியன் ரிங்கிட் செலவில் அந்த முனையம் கட்டப்பட்டது.

“அந்த முனையத்துக்கு உள்ளும் புறமும் விமான நிலையங்களுக்கு இணையாக உள்ளது. அந்த முனையத்தை  யாராவது மதிப்பீடு செய்ய விரும்பினால் அதன் வசதிகளுக்கு ஐந்து நட்சத்திரத் தகுதியைக் கொடுக்க வேண்டும்  என்றும் அவர் கூறிக் கொண்டார்.

தமது கண்காணிப்பில் புடுராயா பஸ் முனியம் கூட உருமாற்றம் பெற்றுள்ளதையும் நஜிப் மக்களுக்கு
நினைவுபடுத்தினார்.

 

TAGS: