டாக்டர் மகாதீர் லிம்-முக்கு எதிராக தமது உண்மை நிறத்தைக் காட்டுகிறார்

LKSஉங்கள் கருத்து : “இந்த நாட்டைத் தாங்கள் தொடர்ந்து ஆளும் பொருட்டு மலேசியர்கள் தங்களுக்குள் அடித்துக் கொள்வதைக்  காண அம்னோவுடன் மகாதீரும் மிகவும் மகிழ்ச்சி அடைவர்”

மன்னிப்புக் கேளுங்கள் இல்லை என்றால் வழக்கு தொடுக்கப்படும் என கிட் சியாங் மகாதீரிடம் சொல்கிறார்

அபாசலோம்: டாக்டர் மகாதீர் முகமட் அவர்களே, டிஏபி தலைவர் லிம் கிட் சியாங் செய்வதாக நீங்கள் பழி சுமத்தும் அனைத்தையும் நீங்கள் தான் செய்கின்றீர்கள். அதாவது மக்களிடையே கேலாங் பாத்தாவில்  மட்டுமின்றி மலேசியா முழுவதும் இன வெறுப்பைத் தூண்டுகின்றீர்கள்.

மலாய்க்காரர்களுடைய வீரர் எனப் பாசாங்கு செய்யும் நீங்கள் அவர்களை நீங்கள் உண்மையில் மோசடிகள், மோசமான கொள்கைகள், ஊழல் மூலம் ஏமாற்றியுள்ளீர்கள். இப்போது அவற்றைப் பொய்கள் வழி மறைக்கின்றீர்கள்.

பக்காத்தான் ராக்யாட் ஆட்சிக்கு வந்தால் உங்கள் கறைகள் (பில்லியன்கள்) வெளிப்பட்டு விடுமோ என அஞ்சி உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முயலுகின்றீர்கள். இந்த முதிய வயதிலும் நீங்கள் பிஎன் -னுக்குப் பிரச்சாரம் செய்வதும் அதற்குத் தான்.

உங்களிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்றாலும் பொதுத் தேர்தல் யார் வெற்றி பெற்றாலும் உங்களுக்குப்  பிரச்னை இல்லை. ‘சிறந்த மனிதர் வெற்றி பெறுவார்’ என்பதை நீங்கள் கேள்விப்பட்டது இல்லையா ?

அனாக் ஜோகூர்1920: முன்னாள் பிரதமர் என்ற முறையில் டாக்டர் மகாதீர் முகமட் எஞ்சியுள்ள நேர்மை, கௌரவம், மரியாதை ஆகியவற்றையும் இழந்து விட்டார். இனவாதப் போக்குடைய அந்த முன்னாள் பிரதமர் 13வது பொதுத் தேர்தல் நெருங்க நெருங்க பொய்களை அடுக்கிக் கொண்டே போகிறார்.

ஜோகூர் மக்களாகிய எங்களுக்கு எங்கள் மாநிலத்தில் அவர் இன வெறுப்பைத் தூண்ட வேண்டாம். நமக்கு இருந்த மோசமான பிரதமர் என அவர் நினைவு கூறப்படுவார்.

கிங்பிஷர்: தம்முடன் நேரடியாக தேர்தலில் மோதுமாறு லிம் விடுத்த சவாலை மகாதீர் ஏற்றுக் கொண்டிருந்தால்  பலர் அவரை மதித்திருப்பார்கள். ஆனால் அவர் நாகரீகமற்ற நயவஞ்சகமான முறையில் லிம்-முடன்  மோதுகிறார். துணிச்சலான, நியாயமான, நேர்மையான மனிதர் ஒருவர் இப்படிச் செய்ய மாட்டார்.

அடையாளம் இல்லாதவன்#76965586: தாம் இஸ்லாத்துக்குப் போராடுவதாக அவர் சொல்கிறார். தாம் மலாய்க்காரர்களுக்குப் போராடுவதாக அவர் சொல்கிறார். தாம் மலேசியாவுக்குப் போராடுவதாக அவர் சொல்கிறார்.

ஆனால் அவரும் அவரது சேவகர்களும் பெரும் செல்வந்தர்களாக உள்ளனர். ஆனால் சாதாரண
மலாய்க்காரர்கள் பரம ஏழைகளாக உள்ளனர். உண்மையில் அவரும் அவரது சேவகர்களும் தொடர்ந்து பொய்களைச் சொல்லி வருகின்றனர். நாம் பல ஆண்டுகளாக முட்டாளாக இருந்து விட்டோம். இனிமேலும் அவரை நம்பத் தயாராக இல்லை.

நான் சிறந்தவன்: அவர் சொன்னதற்கு பொறுப்பேற்க செய்வது முக்கியமாகும். அவர் தமக்கு முன்பு பாதுகாப்பு  அளித்த நாடாளுமன்றத்தில் பேசவில்லை. லிம் கிட் சியாங் குறித்து மாறுபட்ட எண்ணத்தை வாக்காளர்களிடம்  ஏற்படுத்துவதே அந்த ‘நமக்குத் தெரிந்த பிசாசின்’ நோக்கம்.

மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுமாறு லிம் சொல்வது நியாயமானதாகும். இல்லை என்றால் சட்ட நடவடிக்கைகள்  எடுக்கப்படும் என்பதே அந்த ‘நமக்குத் தெரிந்த பிசாசு’ புரிந்து கொள்ளக் கூடிய வழியாகும்.

ஐபி: இனத்தையும் சமயத்தையும் செக்ஸ் படங்களையும் பயன்படுத்தும் அந்த ஆட்டத்துக்கு மலாய்க்காரர்கள்  இனிமேல் பலியாக மாட்டார்கள். பொய்கள், மோசடிகள் நிறைந்த அந்த ஆட்டத்தை புரிந்து கொள்ளும்  தார்மீகப் பண்புகளை மலாய்க்காரர்கள் பெற்றுள்ளனர்.

சுயநலனுக்காக அரசியல் கட்சிகளில் சேர்ந்தவர்களும் தார்மீகப் பண்புகள் இல்லாதவர்களும் மட்டுமே அந்த ஆட்டத்தைத் தொடருவர்.

மலேசிய மக்கள்: இந்த நாட்டைத் தாங்கள் தொடர்ந்து ஆளும் பொருட்டு மலேசியர்கள் தங்களுக்குள்
அடித்துக் கொள்வதைக் காண அம்னோவுடன் மகாதீரும் மிகவும் மகிழ்ச்சி அடைவர்.

நம் உள்ளங்களிலும் சிந்தனைகளிலும் இனப் பிரிவினை இல்லை என்ற விஷயமே அம்னோவுக்கும் பிஎன்-னுக்கும் பெரும் அச்சத்தைக் கொடுத்துள்ளது. அம்னோ/பிஎன் -னுக்கு எதிரான சிறந்த ஆயுதம் அதுவாகும். நாம் அதனைப் பயன்படுத்துவதில் 13வது பொதுத் தேர்தலில் வெற்றி கண்டால் அம்னோ/பிஎன் கதை ‘முடிந்தது’.

முன்னேற்றம்: 1986ல் பிபிஎஸ் சபா மந்நிலத் தேர்தல்களில் வெற்றி கண்ட போது ஏற்பட்ட சபா
கலவரங்களுக்கு மகாதீர் தான் பொறுப்பு.

இப்போது கேலாங் பாத்தாவில் அதனை பிஎன் செய்ய விரும்புகிறது. மலேசியர்கள் அமைதியாக இருக்க வேண்டும்.

TAGS: