சிலாங்கூர் செமினியில் போட்டியிட விரும்புவதாக பிஎஸ்எம் என்ற Parti Sosialis Malaysia விருப்பம் தெரிவித்துள்ள போதிலும் அந்தத் தொகுதிக்கு பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் வேட்பாளர் ஒருவரை அறிவித்ததைத் தொடர்ந்து அங்கு மும்முனைப் போட்டி நிகழக் கூடிய சாத்தியம் உருவாகியுள்ளது.
அந்தத் தொகுதிக்கு செர்டாங் தொகுதி பிகேஆர் தலைவர் ஹமிடி ஹசான் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார். அதனால் பிஎன் வேட்பாளருடன் பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ் அருட்செல்வனுடன் அவர் மோதக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
என்றாலும் இப்போது பிஎஸ்எம் தலைவர் நாசிர் ஹஷிம் வசம் உள்ள கோத்தா டமன்சாரா தொகுதிக்கு
அன்வார் யாரையும் பெயர் குறிப்பிடவில்லை. அது குறித்த பேச்சுக்கள் தொடருவதாக அவர் சொன்னார்.
சிலாங்கூரில் உள்ள நாடாளுமன்ற, சட்ட மன்றத் தொகுதிகளுக்கான பக்காத்தான் வேட்பாளர் பட்டியலில் கெளானா ஜெயா, காப்பார் ஆகிய நாடாளுமன்ற இடங்களையும் புக்கிட் மெலாவத்தி சட்ட மன்ற இடத்தியும் தவிர பெரிய மாற்றங்கள் ஏதுமில்லை.
சுபாங் பிகேஆர் செயலாளர் மணிவண்ணப் கோவின் காப்பாரில் போட்டியிடுவார். கெளானா ஜெயாவில் லோ குவா பேர்ன் -க்குப் பதில் வோங் சென் நிறுத்தப்படுகிறார்.
நடப்பு காப்பார் எம்பி பி மாணிக்கவாசகம் புக்கிட் மெலாவத்திக்கு மாற்றப்படுகிறார்.
இதனிடையே பிஎஸ்எம் உடன் தீர்வு காணப்படும் வரையில் செமினி பற்றிய அறிவிப்பைத் தள்ளி வைப்பதாக தாம் அளித்த வாக்குறுதியை அன்வார் இப்ராஹிம் மீறியுள்ளதாக தொடர்பு கொள்ளப்பட்ட போது அருட்செல்வன் கூறினார்.
“அவர்களுக்கு யார் நண்பர்கள் பகைவர்கள் என்பது தெரியவில்லை. பேச்சு நடத்தப்படும் மற்ற இடத்தின் மீது அது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
அஜிஸ் பேரி சபாக் பெர்ணாமில் நிறுத்தப்படுகிறார்
புக்கிட் லஞ்சானில் எலிசபத் வோங்-கும் பெட்டாலிங் ஜெயா செலத்தானிலும் எம்பி, ஹீ லோய் சியான் -னும் தொடர்ந்து நிறுத்தப்படுகின்றனர்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல மந்திரி புசார் காலித் இப்ராஹிம், போர்ட் கிளாங்கிற்கு மாறுகிறார். அதே வேளையில் ஈஜோக் தொகுதியில் இட்ரிஸ் அகமட் என்ற புதுமுகம் போட்டியிடுவார்.
நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு களமிறங்கும் புதியவர்களில் அஜிஸ் பேரியும் ஒருவர். அவர் அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக் கழகத்திலிருந்து சர்ச்சைக்குரிய வகையில் நீக்கப்பட்ட அரசமைப்பு நிபுணர் ஆவார்.
அவர் சபாக் பெர்ணாமில் நிறுத்தப்படுகிறார். பிகேஆர் வியூகவாதி ராபிஸி ராம்லி பண்டானில் போட்டியிடுவார்.
மாநிலச் சட்டமன்றத் தொகுதிகளில் முகமட் யாஹ்யா சாரி-யும் பத்தாங் காலியில் ராமச்சந்திரன் கந்தசாமியும், காஜாங்கில் லீ சின் சே-யும் களமிறங்கும் புதுமுகங்கள்.
பிகேஆர் மொத்தம் 11 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 21 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடும்:
நாடாளுமன்ற இடங்கள்:
Ampang: Zuraida Kamaruddin
Gombak: Azmin Ali
Hulu selangor: Khalid Jaafar
Kapar: G Manivannan
Kelana Jaya: Wong Chen
Kuala Langat: Abdullah Sani
Pandan: Rafizi Ramli
Petaling Jaya Selatan: Hee Loy Sian
Sabak Bernam: Aziz Bari
Selayang: William Leong
Subang: R Sivarasa
சட்டமன்றத் தொகுதிகள்:
Batang Kali: Ramachandran Kandasamy.
Batu Caves: Amirudin Shaari.
Batu Tiga: Rodziah Ismail
Bukit Antarabangsa: Azmin Ali
Bukit Lanjan: Elizabeth Wong
Bukit Melawati: S Manikavasgam
Dengkil: Borhan Aman Shah
Ijok: Idris Ahmad
Kajang: Lee Chin Cheh
Kota Anggerik: Yaakob Sapari
Kuang: Tengku Maraziah Tengku Sulaiman.
Permatang: Yahya Mat Saari
Port Klang: Khalid Ibrahim
Rawang: Gan Pei Nei
Sementa: Daroyah Alwi
Semenyih: Hamidi Haasan
Seri Andalas: Xavier Jeyakumar
Seri Muda: Shuhaimi Shafie
Seri Setia: Nik Nazmi Nik Ahmad
Taman Medan: Haniza Talha