கெபாயாங் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட டிஏபி மூத்த உறுப்பினர் ஒருவர் முடிவு செய்துள்ளார். அதனால் அந்தக் கட்சியில் நெருக்கடி அதிகரித்துள்ளது.
டிஏபி உதவித் தலைவர் எம் குலசேகரனுடைய முன்னாள் உதவியாளரான ஆர்கே முத்து திவாலாகி விட்டதாக கூறப்பட்ட பின்னர் நீக்கப்பட்டார். அவர் தாம் கெப்பாயாங் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடப் போவதாக இப்போது அறிவித்துள்ளார்.
தமக்கும் குலசேகரனுக்கும் உள்ள பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு தேசிய, மாநில நிலையிலான டிஏபி
தலைமைத்தும் முயற்சி செய்யாததால் தாம் அந்த முடிவுக்கு வந்துள்ளதாக முத்து சொன்னார்.
குலசேகரன் தமது சேவையை நிறுத்திய பின்னர் ஒன்றுக்குப் பின் ஒன்றாக குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், டிஏபி உயர் தலைவர்கள் அவை குறித்து மௌனமாக இருப்பதாகக் கூறினார்.
உள்ளூரைச் சேர்ந்த தொழில் நிபுணர் ஒருவர், ஈப்போ பாராட் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக
களமிறங்கக் கூடும் என்ற தகவலையும் முத்து நிருபர்கள் சந்திப்பின் போது வெளியிட்டார்.