கேலாங் பாத்தாவில் கனி vs கிட் சியாங்

Ghaniஜோகூர் கேலாங் பாத்தா நாடாளுமன்றத் தொகுதிக்கான பிஎன் வேட்பாளர் அந்த மாநில பிஎன் தலைவரான  அப்துல் கனி ஒஸ்மான் ஆவார்.

அதனால் அவருக்கும் டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்-கிற்கும் இடையிலான பெரிய போராட்டத்துக்கு
மேடை அமைக்கப்பட்டு விட்டது.

ஜோகூர் பாருவில் இன்று காலை மாநில பிஎன் தேர்தல் கொள்கை அறிக்கை வெளியிடப்பட்ட வேளையில்
கேலாங் பாத்தாவில் கனி நிறுத்தப்படும் தகவலும் அறிவிக்கப்பட்டது.

நாடாளுமன்றத் தொகுதிக்குப் போட்டியிடுவதற்காக கனி தமது செரோம் சட்டமன்றத் தொகுதியை
கைவிட்டுள்ளார்.

ஜோகூர் மாநில நாடாளுமன்ற சட்டமன்றத் தொகுதிகளுக்கான மற்ற வேட்பாளர்களையும் மாநில பிஎன்
அறிவித்தது.

பராமரிப்பு அரசாங்க உயர் கல்வி அமைச்சர் காலித் நோர்டின்  பாசிர் கூடாங் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து  பெர்மாஸ் சட்டமன்றத் தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் வெற்றி பெற்றால் கனி-க்கு அடுத்து மந்திரி  புசாராக நியமிக்கப்படக் கூடிய வாய்ப்புக்கள் நிறைய உள்ளன.

மந்திரி புசார் பதவிக்கு இன்னொரு சாத்தியமான வேட்பாளர் என கருதப்பட்ட நுர் ஜஸ்லான் முகமட் தமது பூலாய் நாடாளுமன்றத் தொகுதியை தக்க வைத்துக் கொள்ள அங்கு களமிறங்குகிறார்.

அம்னோ மூத்த உறுப்பினரான ஷாரிர் சாமாட் மீண்டும் ஜோகூர் பாரு நாடாளுமன்றத் தொகுதியிலும்
முன்னாள் அம்னோ புத்ரி தலைவி பெங்கெராங் நாடாளுமன்றத் தொகுதியிலும் நிறுத்தப்படுகின்றனர்.