இரண்டு இடங்களைத் தக்க வைத்துக் கொள்ள பிகேஆர் சின்னத்தில் பிஎஸ்எம் களமிறங்கும்

selvanபல தொகுதிகள் மீது பிஎஸ்எம் என்ற Parti Sosialis Malaysia -வுக்கும் பிகேஆர் கட்சிக்கும் இடையில் நிலவிய தேக்க நிலை முடிவுக்கு வந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.

2008ம் ஆண்டு செய்ததைப் போல பிகேஆர் சின்னத்தில் கோத்தா டமன்சாராவிலும் சுங்கை சிப்புட்டிலும் தனது  நடப்பு உறுப்பினர்களை நிறுத்துவதற்கு பிஎஸ்எம் ஒப்புக் கொண்டுள்ளது.

“பெரிய இலட்சியத்தை” கருத்தில் கொண்டு இருதரப்புக்களுக்கும் இடையில் அந்த முடிவு செய்து  கொள்ளப்பட்டதாக பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ் அருட்செல்வன் கூறினார்.

“முதலில் பிஎஸ்எம் அந்த இடங்களில் தனது சொந்த சின்னத்தைப் பயன்படுத்தி போட்டியிட விரும்பியது. ஆனால் தனது சின்னத்தில் போட்டியிடுமாறு பிஎஸ்எம்-மை பிகேஆர் கேட்டுக் கொண்டது இல்லை என்றால் மும்முனைப் போட்டி ஏற்படும் என்றும் அது கூறியது.”

“பிஎஸ்எம் பெரிய இலட்சியத்தையும் பொது நல்னையும் கருத்தில் கொண்டு பிகேஆர் சின்னத்தைப் பயன்படுத்த  ஒப்புக் கொண்டுள்ளது.”

நடப்பு கோத்தா டமன்சாரா சட்டமன்ற உறுப்பினர் நாசிர் ஹஷிம் ஆவார். நடப்பு சுங்கை சிப்புட் எம்பி
டாக்டர் மைக்கல் ஜெயகுமார் ஆவார்.

TAGS: