பெர்சே 3.0 பேரணியை மோசமாக கையாண்டதாக போலீஸ் மீது குறை கூறப்பட்டது

suhakamகடந்த ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணியை போலீசார் கையாண்ட முறை 2012  அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் உணர்வுகளுக்கு ஏற்ப அமைந்திருக்கவில்லை என சுஹாக்காம் என்ற  மனித உரிமை ஆணையம் கூறியுள்ளது.

அந்தப் பேரணி தொடர்பாக போலீசார் மீது தெரிவிக்கப்பட்ட புகார்களை விசாரித்த பின்னர் அது அந்த  முடிவுக்கு வந்துள்ளது.

போலீசார் பின்பற்றிய கட்டுப்பாடு, கட்டுப்பாடு, கட்டுப்பாடு, எச்சரிக்கை, அமலாக்கம் என்னும் ‘3R 1C 1E  அணுகுமுறை அந்தப் பேரணிக்கு ஐந்து நாட்கள் முன்னதாக அமலுக்கு வந்த அமைதியாக ஒன்று கூடும்  சட்டத்துக்கு இணங்க இல்லை என தனது விசாரணை குறித்து வெளியிட்ட அறிக்கையில் சுஹாக்காம்  தெரிவித்தது.

“கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வது என்பது வசதி செய்து கொடுப்பதாகாது,” என ஆறு மாதங்கள் நீடித்த
விசாரணைக்குப் பின்னர் அந்த ஆணையம் கூறியது.suhakam1

பேரவையின் போது பங்கேற்பாளர்கள் கலைந்து செல்வதற்கு போலீசார் வசதி செய்யவும் இல்லை உதவி  செய்யவும் இல்லை என்றும் அது கருதுகிறது. கோலாலம்பூரில் டாத்தாரான் மெர்தேக்காவில் போலீஸ் தடை  மீறப்பட்ட பின்னர் அந்தப் பேரணியில் குழப்பம் ஏற்பட்டது.

“பங்கேற்பாளர்களுக்கு சீராகவும் பாதுகாப்பாகவும் கலைந்து செல்வதற்குப் போதுமான நியாயமான நேரம்
கொடுக்கப்படவில்லை,” என மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழு 80 பக்க அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.  அந்த அறிக்கையில் 25 பரிந்துரைகளும் இடம் பெற்றுள்ளன.

suhakam2விசாரணையின் போது போலீசார் போதுமான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும் சுஹாக்காம் அந்த  அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த தினத்தன்று கடமையில் இருந்த அதிகாரிகளின் முழுப் பட்டியலை  போலீசார் தரவில்லை என்றும் பேரணியின் போது போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக  கூறப்பட்டதற்குப் பதில் அளிக்க எந்த அதிகாரியையும் அனுப்பவில்லை என்றும் அது கூறியது.

 

TAGS: