6பி திட்டத்தில் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டார்களா? சுஹாகாம் ஆராயும்

அந்நிய தொழிலாளர்களின் உரிமைக்காக போராடும் என்ஜிஓ-வான தெனாகானிதா, 6பி திட்டத்தின்கீழ் வேலை அனுமதிக்கு விண்ணப்பித்த அந்நிய தொழிலாளர்களின் புகார்களை ஆராயுமாறு மனித உரிமை ஆணைய (சுஹாகாம்) த்தைக் கேட்டுக்கொண்டு மகஜர் ஒன்றைக் கொடுத்துள்ளது. அம்மகஜரில் அந்நிய தொழிலாளர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதையும் தங்கள் உரிமைகள் மீறப்பட்டதையும் விவரித்துள்ளனர். 6பி திட்டம்…

தவறு செய்த போலீஸ்காரர்களை அடையாளம் காண முடியவில்லை என்கிறார் முன்னாள்…

பெர்சே 3.0 பேரணியின் போது தமக்குக் காட்டப்பட்ட 10 வீடியோக்களை பல முறை பார்த்த போதும் அவற்றிலிருந்து போலீசார் முரட்டுத்தனத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒரு போலீஸ் அதிகாரியைக் கூட முன்னாள் டாங் வாங்கி ஒசிபிடி முகமட் சுல்கார்னெயின் அப்துல் ரஹ்மானால் அடையாளம் காட்ட முடியவில்லை. "உதவியாளர்கள் தொடக்கம்…

‘முன் கூட்டிய எச்சரிக்கை, ஒடுக்குமுறை ஏற்கனவே திட்டமிடப்பட்டது என்பதைக் காட்டுகின்றது’

பெர்சே 3.0 பேரணி மீது போலீசார் மேற்கொண்ட ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்ததாக செபுத்தே எம்பி தெரெசா கோக் நம்புகின்றார். அந்த நடவடிக்கைகளுக்கு ஐந்து நிமிடம் முன்னதாக கோலாலம்பூர் மாநகராட்சி மன்ற அமலாக்க அதிகாரி ஒருவரிடமிருந்து தமக்கு எச்சரிக்கை கிடைத்ததே அவ்வாறு நம்புவதற்கான காரணம் என அவர் சொன்னார்.…

சுஹாகாமின் பெர்சே விசாரணையில் ‘போலீஸ் வீடியோ’ காண்பிக்கப்பட்டது

நேற்று மனித உரிமை ஆணையத்தின் (சுஹாகாம்) பொது விசாரணையில் பெர்சே 3.0 பேரணியில் பிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட வீடியோ படமொன்று திரையிடப்பட்டது. விசாரணைக் குழுவின் செயலக உறுப்பினர் ஒருவர், அது போலீஸ் வழங்கிய வீடியோ படம் என்றார். விசாரணைக் குழுத் தலைவர் காவ் லேக் டீ (வலம்) அது போலீசாரின்…

தொல்லை தீர உதவுங்கள்: சுஹாகாமுக்கு சுவாராம் வேண்டுகோள்

அரசாங்கத் துறைகள் விசாரணை என்ற பெயரில் தனக்குத் தொல்லை தருவதாக மனித உரிமைக்குப் போராடும் அமைப்பான சுவாராம், அடிப்படை மனித உரிமை ஆணையத்திடம்(சுஹாகாம்) புகார் செய்துள்ளது. நேற்று சுஹாகாம் தலைமையகத்தில் 14-அம்ச மகஜரை வழங்கிய சுவாராம், தனக்குக் கொடுக்கப்படும் தொல்லைகள் மனித உரிமை மற்றும் சிவில் உரிமை மீறல்கள்…

லாக்-அப்பில் நேர்ந்த இறப்புப் பற்றித் தகவல் தருமாறு போலீசைக் சுஹாகாம்…

சுஹாகாம், தட்டுமுட்டுச் சாமான் பொருள் வியாபாரி ஒருவர் போலீஸ் காவலில் இருந்தபோது இறந்து Read More

முன்னாள் சுஹாக்காம் ஆணையர்கள் சுவாராமுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்

சுஹாக்காம் எனப்படும் மலேசிய மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் ஆணையர்களைக் கொண்ட ஒர் அமைப்பு சுவாராமுக்கு ஆதரவு நல்கியுள்ளது. சுவாராமை அச்சுறுத்துவதை அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அது கேட்டுக் கொண்டது. சுவாராம் குறித்து ஆதாரமற்ற அறிக்கைகளை உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சு வெளியிடக்…

ஒன்று கூடுவதற்கான அரசமைப்பு உரிமை பற்றி போலீஸ்காரருக்குத் தெரியாது

சுதந்திரமாக ஒன்று கூடுவதற்கு கூட்டரசு அரசமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என்பது Read More

சுஹாக்காம்: 114ஏ பிரிவு மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்

2012ம் ஆண்டுக்கான ஆதாரச் சட்டத்தின் 114ஏ பிரிவை அரசாங்கம் மறு ஆய்வு செய்ய வேண்டும், திருத்த வேண்டும் அல்லது ரத்துச் செய்ய வேண்டும் என சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதி என்னும் அடிப்படை சட்டக்…

இசா ‘சித்தரவதைக் குறிப்புக்கள்’ பற்றி விவாதிக்க நாளை சுஹாக்காம் கூடுகிறது

இசா என்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட கைதிகள் சித்தரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் குறிப்புக்கள் மீது அடுத்த கட்ட நடவடிக்கையை நாளை சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையம் விவாதிக்கும். கமுந்திங் முகாமிலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் அந்தக் குறிப்புக்களை மலேசியாகினி அம்பலப்படுத்தியுள்ளது. அந்த விவகாரம் ஆணையத்தின்…

பிகேஆர் தலைவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது சுஹாக்காம் விசாரணையை முறியடிக்கும்…

பெர்சே 3.0 பேரணி தொடர்பில் மூத்த பிகேஆர் தலைவர்கள் மீது அரசாங்கம் வழக்குப் போட்டுள்ளது, சுயேச்சையான விசாரணைகளை முறியடிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. "அந்த முக்கியமான விவகாரம் மீது சுயேச்சையான, பாகுபாடற்ற, முழுமையான விசாரணைகள் மெற்கொள்ளப்படுவதை முன் கூட்டியே தவிர்க்கும்" நோக்கத்தை அந்த சட்ட நடவடிக்கை…

உண்ணா விரதப் போராட்டத்தில் இறங்கியுள்ள இசா கைதிகளை சுஹாக்காம் சந்திக்கும்

பேராக் கமுந்திங் தடுப்புக் காவல் மய்யத்தில் உண்ணா விரதப் போராட்டத்தில் இறங்கியுள்ள உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத் தடுப்புக் காவல் (இசா) கைதிகளைக் காண்பதற்கு சுஹாக்காம் என்னும் தேசிய மனித உரிமை ஆணையம் வெள்ளிக்கிழமை அங்கு செல்லும். அந்தக் கைதிகளின் உடல் நிலையைச் சோதிப்பதற்காக மூவர் கொண்ட குழு ஒன்று…

சுஹாக்காம்: பெர்சே 2.0ன் போது போலீசார் மனித உரிமைகளை மீறினர்

கடந்த ஆண்டு ஜுலை மாதம் பெர்சே 2.0 பேரணி நிகழ்ந்த போது பொதுப் பயனீட்டு வசதிகள் நிறைந்த இடத்திற்கு அருகில் கண்ணீர் புகைக் குண்டுகளை வெடித்ததின் மூலம் போலீசார் மனித உரிமைகளை மீறியுள்ளதாக சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையம் கூறுகிறது. "போலீசார் சில சமயங்களில் குறிப்பாக…

அமைதியாகக் கூடுவதற்கான மசோதாவை நிறுத்த சுஹாக்காம் முயற்சி செய்யும்

நாடாளுமன்றத்தில் இன்று இரண்டாவது வாசிப்புக்குத் தாக்கல் செய்யப்படும் 2011ம் ஆண்டுக்கான அமைதியாகக் கூடுதல் மசோதா இயற்றுவதை நிறுத்துமாறு சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையம் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது. ஆகவே 2011ம் ஆண்டுக்கான அமைதியாகக் கூடுதல் மசோதாவை சட்டமாக இயற்றுவதற்கு முன்னர் அது குறித்து பல்வேறு தரப்புக்கள்…

சுஹாக்காம்: மனித உரிமைகள் மீது நாடாளுமன்ற சிறப்புக் குழுவை அமையுங்கள்

இந்த நாட்டில் காணப்படுகிற பல்வேறு மனித உரிமைப் பிரச்னைகளை ஆய்வு செய்வதற்கு நாடாளுமன்றத் தேர்வுக் குழுவை அமைப்பது பற்றி அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என சுஹாக்காம் என்னும் மலேசிய மனித உரிமை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. அந்த ஆணையத்தின் 12வது ஆண்டு நிறைவை ஒட்டி விடுத்துள்ள செய்தியில் அதன்…