உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூவர் விடுவிக்கப்பட்டிருப்பதை தேசிய மனித உரிமை ஆணையம்(சுஹாகாம்) இன்று உறுதிப்படுத்தியது.
“கடந்த வெள்ளிக்கிழமை அவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடியும்”, என்று சுஹாகாம் ஆணையர் ஜேம்ஸ் நாயகம் கூறினார்.
அக்கைதிகள் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. அதன் தொடர்பிலான விவரங்களை ஆணையம் பெற முயன்று வருவதாக அவர் தெரிவித்தார்.
விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவர் மலேசியரான எஸ்.லோகனாதன், இன்னொருவர் இலங்கையரான பி.வேலண்டைன் ஜெயகுமார், மற்றொருவர் பாகிஸ்தானியரான மாலிக் ரெஹ்மாட் அலி ஷாகிர் என ஐஎஸ்ஏ-எதிர்ப்பு இயக்கம்(ஜிஎம்ஐ) கூறியது.
மனித கடத்தலில் ஈடுபட்ட குற்றத்துக்காக அம்மூவரும் 2010-இல் தடுத்து வைக்கப்பட்டனர்.
பேராக் கமுந்திங் தடுப்புமுகாமில் இன்னமும் 42 பேர் தடுப்புக்காவலில் இருந்துவருகிறார்கள். அவர்களில் பாதிப்பேர் வெளிநாட்டவர்.