“சீனப் பெண்களை விலைமாதர்கள் என்றும் இந்தியர்களைப் பிச்சைக்காரர்கள் என்றும் வருணித்தது எந்தக் கட்சி என்பதையும் முஹைடின் மலேசியர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்”
‘இனவத’ டிஏபி-யை நிராகரிக்குமாறு முஹைடின் கேலாங் பாத்தா வாக்காளர்களிடம் சொல்கிறார்
அல்பர்ட்தான்98: அந்த மனிதர் (அம்னோ துணைத் தலைவர் முஹைடின் யாசின்) சொல்வதை நீங்கள் நம்புகின்றீர்களா ? அவர் தம்மை முதலில் மலாய்க்காரர் என்றும் இரண்டாவதாக மலேசியர் என்றும் அழைத்துக் கொண்டார்.
இனவாதி என நிரூபிக்கப்பட்ட பெர்க்காசா உதவித் தலைவர் சுல்கிப்லி நூர்டின், ஷா அலாமில் நடப்பு பாஸ்
எம்பி காலித் சாமாட்-டை எதிர்த்து நிற்க தேர்வு செய்த கட்சியைச் சேர்ந்தவர் அவர்.
அந்தத் தேர்வு பிஎன் பாணியிலான ‘உருமாற்றம்’ என சிலாங்கூர் பிஎன் ஒருங்கிணைப்பாளர் முகமட் ஜின்
முகமட் பிரகடனம் செய்துள்ளார்.
அவர்களுக்கு இனவாதம் என்றால் என்ன என்பது அவர்களுக்கு புரிகிறதா ? அவர்களுக்கு ஆங்கிலமும்
புரிகிறதா என்பதும் தெரியவில்லை.
ஜிமினி கிரிக்கெட்: ஜோகூர் பாருவில் கூட்டத்தில் கலந்து கொண்ட 6,000 சீனப் பள்ளி ஆசிரியர்களையும்
முஹைடின் முட்டாள்கள் என நினைக்கிறார். மலேசிய அரசியலில் இனவாதத்தை வளர்த்தது அம்னோ ஆகும். அது முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்-டின் கீழ் நிலை பெற்றது.
சீனர்களை ‘பெண்டாத்தாங்’ என்றும் சீனப் பெண்களை விலைமாதர்கள் என்றும் இந்தியர்களைப்
பிச்சைக்காரர்கள் என்றும் வருணித்தது எந்தக் கட்சி என்பதையும் முஹைடின் மலேசியர்களுக்குத் தெரிவிக்க
வேண்டும்.
ஆனால் மகாதீர் எப்போதும் ஒன்றைச் சொல்வது உண்டு. அதாவது ‘Melayu mudah lupa’ என்பதாகும்.
ஆகவே தாம் ‘முதலில் மலாய்க்காரன்’ என்பது உட்பட அவை அனைத்தையும் முஹைடின் நினைவில்
வைத்திருப்பார் என நாம் எதிர்பார்க்க முடியாது.
கேலாங் பாத்தாவில் பிஎன் -னுக்கு முஹைடின் பிரச்சாரம் செய்வது பெரும் தவறாகும். மசீச தலைவர் ஜேசன் தியோவை அங்கு நிறுத்துவது சீனர் வாக்குகளை (54 விழுக்காடு) பிரிப்பதாக அர்த்தம். ஆனால் அந்த ‘முதலில் மலாய்க்காரரான’ முஹைடின் பிஎன் தொடர்ந்து இனவாத அட்டையை பயன்படுத்தி வருவதை சீனர்களுக்கு நினைவுபடுத்தியுள்ளார். என்றாலும் சிறந்த மலேசியாவைக் காண சீனர்கள் இன அடிப்படைச்
சிந்தனையிலிருந்து மாறி விட்டார்கள்.
மலேசியாவில் உள்ள சீனர்களும் மற்ற அனைவரும் குறைந்த பட்சம் அண்மைய எதிர்காலத்தில் பிரதமரும்
துணைப் பிரதமரும் மலாய்க்காரர்களாக இருக்க வேண்டும் என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால் டிஏபி
இனவாதக் கட்சி எனத் தம்மை மேலாண்மைவாதி எனக் காட்டிக் கொண்டுள்ள ஒருவர் குற்றம் சாட்டுவது
மிகவும் மடத்தனமான விஷயமாகும்.
மலாய்க்காரர்கள் கூட அந்த பொய்யை இப்போது நம்புவது இல்லை. கேலாங் பாத்தா சீனர்கள் லிம் கிட்
சியாங்-கை ஆதரிப்பார்கள். அதற்கு டிஏபி சீனர் பிரச்னைகளுக்குப் போராடுவது காரணமல்ல. பக்காத்தான்
ராக்யாட்டில் டிஏபி ஒரு பகுதியாக இருப்பதும் இன வேறுபாடின்றி அனைத்து மலேசியர்களுக்கும் சிறந்த
மலேசியாவை வழங்க உறுதி அளித்துள்ள அன்வார் இப்ராஹிம் பக்காத்தான் ராக்யாட்டுக்குத் தலைமை
தாங்குவதுமே அதற்குக் காரணங்களாகும்.
மலாய்க்காரர்கள் லிம் கிட் சியாங்கிற்கு பின்னால் நிற்பார்கள். காரணம் தங்கள் மனதில் நஞ்சைக் கலக்கவும்
உணர்வுகளைத் தூண்டவும் அம்னோ சொல்லும் பொய்களினால் அவர்கள் வெறுப்படைந்து விட்டனர்.
நியாயமானவன்: ‘தண்டா புத்ராவை’ காட்டுவதும் பெர்க்காசாவை ஆதரிப்பதும் தான் இனவாதங்கள். டிஏபி
அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டதே இல்லை. அதனை எப்படி இனவாதி எனச் சொல்ல முடியும் ?
ஒன்று மட்டும் சரியானது. ஜோகூர் மக்கள் இனவாதிகள் அல்ல. ஜோகூர் மக்களாகிய நாங்கள் எல்லா
இனங்களுக்கும் சகோதரர்கள் எங்களை யாரும் பிரிக்க முடியாது.
Fz2379: லிம் கிட் சியாங் அம்னோவைக் கண்டு அஞ்சுவதாக நான் எண்ணவில்லை. கேலாங் பாத்தாவில் மசீச
வேட்பாளருடன் பலப்பரீட்சையை எதிர்பார்த்த லிம் இப்போது அப்துல் கனி ஒஸ்மானுடன் மோத வேண்டிய
சூழ்நிலை உருவாகியுள்ளது. அதனால் லிம் ‘வருத்தமடைவது’ நிச்சயம்.
மசீச அங்கு வேட்பாளரை நிறுத்தும் என்றும் தாம் வெற்றி பெற முடியும் என்றும் அவர் நம்பியிருந்தார்.
ஆனால் பிஎன் பக்காத்தான் அல்ல. இணக்க அடிப்படையில் இடங்கள் பிஎன் -னில் ஒதுக்கப்படுகின்றன.
ஆனால் டிஏபி, பிகேஆர், பாஸ் ஆகியவை தொகுதிகளுக்குப் போராடுகின்றன. சுயநலன் கூட்டணி நலனுக்கு
மேலாக கருதப்படுகின்றது.
லிம் கனிக்கு எதிராக வெற்றி பெற்றால் அவரை டிஏபி ஆதரவாளர்களும் உறுப்பினர்களும் ஹீரோவாக
கருதுவர். தோல்வி கண்டால் அவரது அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வரும்.
அடையாளம் இல்லாதவன்#76965586: பிஎன் இனப் பிரச்னைகளை எப்படி தில்லுமுல்லு செய்கிறது என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு. அது நம்மை (குறிப்பாக மலாய்க்காரர்களை) தொடர்ந்து முட்டாளாக்க நாம் அனுமதிக்க வேண்டுமா ?
குவிக்னோபாண்ட்: முஹைடின் தாம் சொல்வதையே மறுக்கிறார். கிட் சியாங் இனவாதி, பிரிவினைவாதி என ஜோகூரில் ஒவ்வொருவருக்கும் தெரியும் என்றாலும் ஜேசன் தியோ நல்லவர் என்றாலும் ஜேசனை
நிறுத்துவதில் என்ன பிரச்னை ?
அவர் மசீச சார்பாக பேசுகிறாரா அல்லது அந்த விஷயத்தில் அம்னோ மசீச-வை பணிய வைத்ததை
நியாயப்படுத்துகிறாரா ?