ஹிண்ட்ராப் மலேசிய இந்தியர்களின் மேம்பாட்டிற்காக வரைந்துள்ள அதன் ஆறு கூறுகள் அடங்கிய பெருந்திட்டத்தை பாரிசான் ஏற்றுகொண்டுள்ளது. அது குறித்த சில அறிவிப்புகளை பிரதமர் நஜிப் இன்று செய்வார் என்று ஹிண்ட்ராப் தேசிய ஆலோசகர் என். கணேசன் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.
பிரதமர் கலந்துகொண்டு ஹிண்ட்ராப் பெருந்திட்டத்தில் கையொப்பமிடும் நிகழ்ச்சி இன்று கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் மாலை மணி 6.00 க்கு நடைபெறும் என்பதை என். கணேசன் உறுதிபடுத்தினார்.
ஹிண்ட்ராப் தலைவர் பி. வேதமூர்த்தி அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.
பிரதமர் கையொப்பமிடவிருக்கும் ஹிண்ட்ராப் பெருந்திட்டம் குறித்து மேற்கொண்டு எதுவும் கூற கணேசன் மறுத்து விட்டார். “நிகழ்ச்சிக்கு வாருங்கள். நேரில் தெரிந்து கொள்ளுங்கள்”, என்றாரவர்.