ஆர்ஒஎஸ் டிஏபி-யின் மத்திய நிர்வாகக் குழு பட்டியலை அங்கீகரிக்கவில்லை

ROSடிஏபி மத்திய நிர்வாகக் குழுவை ஆர்ஒஎஸ் என்ற சங்கப்பதிவதிகாரி அலுவலகம் அங்கீகரிக்கவில்லை என்று  அந்தக் கட்சிக்குத் தெரிவிக்கும் கடிதம் ஒன்றை அந்த அலுவலகம் அனுப்பியிருப்பதாகச் சொல்லப்படுகின்றது.

வரும் தேர்தலுக்கான வேட்பாளர் நியமன நாளுக்கு இன்னும் இரண்டு நாள் இருக்கும் வேளையில் அந்தக்  கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த ஆர்ஒஎஸ் முடிவினால் ஏற்படக் கூடிய தாக்கத்தை சமாளிப்பதற்கான வழிகளைக் காண டிஏபி இன்று  அவசரக் கூட்டத்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கு பின்னர் நிருபர்கள் சந்திப்பு நடத்தப்படும்.

ஆர்ஒஎஸ் அனுப்பியுள்ளதாகக் கூறப்படும் அந்தக் கடிதம் இணையத்தில் பரவியுள்ளது. என்றாலும் அதன் உண்மை நிலை குறித்து இன்னும் டிஏபி-யோ அல்லது ஆர்ஒஎஸ்-ஸோ இன்னும் உறுதி செய்யவில்லை.

அது உண்மை என்றால் மலேசிய வரலாற்றில் மிக அணுக்கமானதாக இருக்கும் எனக் கருதப்படும் மே 5
தேர்தலுக்கான டிஏபி ஏற்பாடுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்த டிஏபி கட்சித் தேர்தல்களின் போது ஏற்பட்ட ‘தொழில் நுட்பக்
குளறுபடி’ குறித்த ஆய்வை ஆர்ஒஎஸ் மேற்கொண்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கைகளை ஒன்று சேர்க்கும் போது ‘தொழில் நுட்பத் தவறு’ ஏற்பட்டது என அந்தக் கட்சி
கூறிக் கொண்டது. ஆனால் புதிதாக தேர்தலை நடத்துமாறு சில உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதை டிஏபி தலைவர்கள் நிராகரித்து விட்டனர்.

 

TAGS: