வேதா தரப்பினர் ‘ஹிண்ட்ராப் கடத்தல்காரர்கள்’ என உதயா சொல்கிறார்

உதயாஹிண்ட்ராப் அமைப்பை உருவாக்கிய இரண்டு சகோதரர்களில் ஒருவரான பி உதயகுமார் தமது இளைய  சகோதரர் பி வேதமூர்த்தி தலைமையில் இயங்கும் ஹிண்ட்ராப் தரப்பு அந்த இயக்கத்தை ‘கடத்தி விட்டதாக’  குற்றம் சாட்டியுள்ளார்.

ஹிண்ட்ராப் பெருந்திட்டம் எனக் கூறப்படும் ஆவணத்தை பிரதமரும் பிஎன் தலைவருமான நஜிப் அப்துல் ரசாக் அங்கீகரிக்கும் சடங்கு நிகழ்வதற்குச் சற்று முன்னர் மலேசியாகினிக்கு அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில் உதயகுமார் அவ்வாறு கூறியுள்ளார்.

இந்திய சமூகம் சம்பந்தப்பட்ட ஆறு முக்கியப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு புதிய கூட்டரசு அரசாங்கம் 100 நாட்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை அந்தப் பெருந்திட்டம் பட்டியலிட்டுள்ளது. அந்தப் பெருந்திட்டத்தை அங்கீகரிக்குமாறு பிஎன்-னும் பக்காத்தான் ராக்யாட்டும் கேட்டுக் கொள்ளப்பட்டன.

நாடு கடந்து வாழ்ந்த வேதமூர்த்தி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மலேசியா திரும்பிய பின்னர் அவரது முகாமை இப்போது தான் முதன் முறையாக உதயகுமார் சாடியுள்ளார்.

அவர் திரும்பிய பின்னர் உதயகுமார் தமது மனித உரிமைக் கட்சியில் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் ஹிண்டராப்புக்கு தாம் தான் தலைவர் என ( ultimately the de facto leader of Hindraf )அவர் கூறி
வந்துள்ளார்.

பெருந்திட்டத்தை அங்கீகரிக்குமாறு யாரையும் கேட்டுக் கொள்வது ஹிண்ட்ராப் போராட்டத்தில் ஒரு பகுதி அல்ல என அவர் வலியுறுத்தினார்.

“பொதுத் தேர்தல் நிகழவிருக்கும் வேளையில் அது ஏற்கக் கூடிய அறிகுறி அல்ல,” என்றார் உதயகுமார்.

“ஹிண்டராப்பின் மூத்த தலைவர் என்ற முறையில் 2007ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதியிடப்பட்ட 12 அம்ச
ஹிண்ட்ராப் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். ஏற்கனவே ஐந்து தசாப்தங்கள்  தாமதமாகி விட்டன. இந்திய ஏழைகளுக்கு அம்னோ அன்பளிப்புக் கூடைகளும் அரிசி பொட்டலங்களும்  மட்டுமே வழங்கப்படுகின்றன.”

2006ம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் ஹிண்ட்ராப் நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அது பிஎன்-னை ஆதரிக்காது என்றும் உதயகுமார் சொன்னார்.

பக்காத்தான் கட்டுக்குள் இருந்த மாநிலங்கள் ஏழை இந்தியர்களுக்கு ‘வழங்காததற்கு’ பக்காத்தான் பொறுப்பேற்க தயாராக இல்லை என்பதால் ஹிண்ட்ராப் பக்காத்தானை ஆதரிக்க முடியாது என்றும் உதயகுமார் சொன்னார்.

“ஏழை இந்தியர்களைப் பொறுத்த வரையில் பிஎன் அதிகமாக ஏமாற்றுகிறது. பக்காத்தான் குறைவாக
ஏமாற்றுகிறது. நாங்கள் மாற்றத்தை விரும்புகிறோம். ஆனால் அம்னோ கோமாளிக்கு பதில் பக்காத்தான் பொறுப்பேற்பதைக் காண நாங்கள் விரும்பவில்லை. அதன் தொடர்பில் நாங்கள் கோத்தா ராஜா ஸ்ரீ அண்டாலாஸ் திகுதிகளில் போடியிடப் போகிறோம்,” என்றார் அவர்.

TAGS: