வேதா அவர்களே இப்போது யார் ‘மண்டோர்’ ?

வேதாவேதா அவர்களே இந்தியர்கள் ஏழைகளாக இருக்கலாம். ஆனால் முட்டாள்கள் அல்ல. உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் கீழறுப்புச் செய்ய சுல்கிப்லி நூர்டின் போன்ற வேட்பாளர்களை நிறுத்தியுள்ள நஜிப்  கெட்டிக்காரர்.

பிஎன் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் திரும்பச் செய்யுங்கள் என வேதா இந்தியர்களிடம்  
சொல்கிறார்

சின்ன அரக்கன்: மலேசிய இந்திய சமூகத்துக்கு இது கறுப்பு தினம். ஆனால் ஹிண்ட்ராப் தலைவர் பி
வேதமூர்த்திக்கு அவரது வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சியான நாளாகும்.

பராமரிப்பு அரசாங்கப் பிரதமரும் பிஎன் தலைவருமான நஜிப் ரசாக் கையெழுத்திட்டுள்ளது வெறும்
புரிந்துணர்வு பத்திரமே.

பிஎன் -உடன் அவர் ‘பேரம்’ பேசியது அது தான் என்றாலும் இந்திய சமூகத்துக்கு ‘பெரிதாக சாதித்து
விட்டதாக’ அவர் கருதினாலும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் அவர் உண்மையான கோமாளி தான்.

மிலோசெவிக்: வேதா அவர்களே பிஎன் உங்களுக்கு நிறையச் செய்ய முடியும் என்றால் பிஎன் வெற்றி அடைய  வேண்டும் என நீங்கள் சொல்வதில் நியாயமிருக்கிறது. ஆனால் நாடாளுமன்றத்தில் அதற்கு மூன்றில் இரண்டு  பங்கு பெரும்பான்மை கிடைக்க வேண்டும் என நீங்கள் ஏன் சொல்ல வேண்டும் ?

உங்களுடைய புதிய எஜமானருடைய விருப்பங்களைப் பிரதிபலிப்பதைத் தவிர இந்தியர்களுக்கு நன்மை தரும்  என்ன அரசமைப்பு மாற்றங்களை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள் ? நஜிப்பிடமிருந்து என்ன உறுதிமொழிகள்  உங்களுக்குக் கிடைத்துள்ளன ?

அரசமைப்பின் கீழ் இந்தியர்களுக்கு சிறப்புச் சலுகைகளை பிஎன் கொடுக்கப் போகிறதா ? ஒரு வேளை
பெர்க்காசா உதவித் தலைவர் சுல்கிப்லி நூர்டின் ஆதரவுடன் இந்து சமயத்தை அதிகாரத்துவ சமயமாக நஜிப்
அங்கீகரிக்கப் போகிறாரா ?

இந்தியர்களுக்காக இல்லை என்றாலும் உங்களுக்கும் உங்களுடன் ஒட்டிக் கொண்டிருக்கிறவர்களுக்கும் பிஎன்
-னிடமிருந்து நல்ல விலையை நீங்கள் பெற்றிருப்பீர்கள் என நான் நம்புகிறேன்.

ஒடிசியஸ்: வேதா அவர்களே பக்காத்தான் ராக்யாட்டிடமிருந்து நீங்கள் கோரிய தொகுதிகள் எங்கே போயின ?
நஜிப் சொன்ன வார்த்தைகளைத் தவிர உருப்படியாக வேறு எதனையும் காட்டுவதற்கு உங்களிடம்
ஒன்றுமில்லை.

நீங்கள் வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை. நீங்கள் அந்த பிசாசிடம் உங்கள் ஆன்மாவை
மட்டுமின்றி இந்த நாட்டில் உள்ள எல்லா இந்தியர்களுடைய வாழ்வாதாரத்தையும் விற்று விட்டீர்கள்.

நீங்கள் செய்த காரியத்திற்காக இந்தியர்கள் உங்களை மன்னிக்கப் போவதில்லை. நீங்கள் செய்துள்ளதை
அவர்கள் உணர்ந்து தங்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் கட்சிக்கு வாக்களிப்ப என நான் நம்புகிறேன்.

குவிக்னோபாண்ட்: உண்மைகள்:

1. ஹிண்ட்ராப்பின் 18 கோரிக்கைகளில் தேச நிந்தனை தொடர்பான அம்சமும் இருந்தது

2. பக்காத்தான் நல்ல காரணத்துக்காக அந்த 18 அம்சங்களைத் தொடவே இல்லை.

3. அந்த 18 அம்சங்களில் 14 சம்பந்தப்பட்ட இந்திய சமூக மேம்பாட்டுத் திட்டத்தை டிஏபி அறிவித்தது

4. டிஏபி நடவடிக்கையை ஹிண்டராப் நிராகரித்து ‘திருடி விட்டதாக’ கூச்சலிட்டது (அது ஏன் தவறு என்பது
எனக்கு இது வரை புரியவில்லை)

5. ஹிண்ட்ராப் பிஎன் -உடன் புரிந்துணர்வுப் பத்திரத்தில் கையெழுத்திடுகின்றது. பிஎன் இந்திய சமூக நலனுக்குப்  பாடுபடுவதாக ஹிண்ட்ராப் பிரகடனம் செய்கின்றது.

6. பிஎன் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டு 2008ம் ஆண்டைக் காட்டிலும் மோசமான அடைவு நிலையை  பெற்றால் நஜிப் பதவி விலக வேண்டியிருக்கும். அவர் கொடுத்த வாக்குறுதிகள் காத்துக் கொண்டிருக்கும்  பிரதமர் முஹைடின் யாசின் வாக்குறுதிகளாக இருக்க முடியாது.

ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் அந்த உண்மைகளை அறிய வேண்டும்.

ஹிண்ட்ராப் இந்திய சமூகத்தை விற்று விட்டதாகவே நான் கருதுகிறேன்.

பெர்ட் தான்: அடுத்து இந்தியர்களையும் இந்துக்களையும் தாக்கும் சுல்கிப்லி நூர்டினுக்காக வேதமூர்த்தி
பிரச்சாரம் செய்யப் போகிறார். இல்லை என்றால் பிஎன் -னுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு
பெரும்பான்மை கிடைக்கும் ?

கிங்பிஷர்: ஹிண்ட்ராப் ‘தங்கள் சார்பில்’ எடுத்த நடவடிக்கைக்காக மில்லியன் கணக்கான மலேசிய இந்தியர்கள்  அவமானத்தில் தங்கள் தலைகளைத் தொங்க விட்டுக் கொள்ள வேண்டும்.

சுல்கிப்லி நூர்டினை வேட்பாளராக அறிவித்த பின்னர், வேட்பாளர் நியமன நாளுக்கு இரண்டு நாள் இருக்கும்
வேளையில் ஹிண்ட்ராப் அங்கீகாரத்தை பெற்றுள்ள நஜிப்புக்கு அது பெரிய வெற்றியாகும்.

வி ஜார்ஜ்மை: வேதா அவர்களே இந்தியர்கள் ஏழைகளாக இருக்கலாம். ஆனால் முட்டாள்கள் அல்ல. இந்த
நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களுடன் ஒப்பிடுகையில் பிஎன் கூட்டணியில் மஇகா கடந்த 50
ஆண்டுகளாக இருந்தும் இந்தியர்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கவில்லை.

உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் கீழறுப்புச் செய்ய சுல்கிப்லி நூர்டின் போன்ற வேட்பாளர்களை
நிறுத்தியுள்ள நஜிப் கெட்டிக்காரர்.

வெறும் மக்கள்: இந்தியர்கள் ஏன் பின் தங்கியிருப்பதற்கான காரணம் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.
அவர்களுடைய சொந்த இனத்தைச் சேர்ந்தவர்களே அவர்களுக்குத் துரோகம் செய்கின்றனர். ஒரு முறை அல்ல  இரு முறை அல்ல ஒவ்வொரு முறையும்.

TAGS: