கடந்த வாரம் மக்களவை ஏற்றுக் கொண்ட வேலை வாய்ப்புச் சட்டத் திருத்தங்களை எம்டியூசி என்ற மலேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் வன்மையாக ஆட்சேபிக்கிறது.
அந்தத் திருத்தங்களை நிராகரிப்பதற்காக காரணங்களை விளக்கி பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு அது கடிதம் எழுதும் என எம்டியூசி தலைவர் முகமட் அலி அத்தான் கூறினார்.
அந்தத் திருத்தங்களைத் தள்ளி வைக்குமாறு கேட்டுக் கொள்ளும் கடிதம் ஒன்றை அது அக்டோபர் மூன்றாம் தேதி நிகழ்ந்த தேசிய தொழிலாளர் ஆலோசனை மன்றக் கூட்டத்தில் மனித வள அமைச்சர் டாக்டர் எஸ் சுப்ரமணியத்திற்கு அனுப்பியதாகவும் அவர் சொன்னார்.
அந்த உத்தேசத் திருத்தங்களுக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில் நவம்பர் மூன்றாம் தேதி நாடு முழுவதும் எம்டியூசி மறியல் நடத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
பெர்னாமா