பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
எஸ்எம்இ-கள், குறைந்தபட்ச சம்பள அமலாக்கத்தை ஓர் ஆண்டு தள்ளிவைக்கலாம்
வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்துள்ள சிறிய நடுத்தரத் தொழில்கள் (எஸ்எம்இ-கள்), குறைந்தபட்ச சம்பளத்தை நடைமுறைப்படுத்துவதில் சிரமத்தை எதிர்நோக்கினால் அதை ஓராண்டுக்குத் தள்ளிவைக்க அனுமதி கேட்டு விண்ணப்பிக்கலாம். இச்செய்தியை சின் சியு டெய்லியும் நன்யாங் சியாங் பாவும் பல வட்டாரங்களை மேற்கோள் காட்டி முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளன. அமைச்சர் ஒருவர்…
எம்டியுசி: புதிய பணி ஓய்வு வயதை உடனே அமல்படுத்துக
சட்டம் நடைமுறைக்கு வரும்வரை காத்திராமல் இப்போதே பணிஓய்வு வயதை 55-இலிருந்து 60-க்கு நீட்டிக்க வேண்டும் என்று மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ்(எம்டியுசி) தனியார் துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. தனியார்துறை ஊழியர்களின் பணிஓய்வு வயதை 60-க்கு நீட்டிக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டு அதற்கான சட்டமுன்வரைவும் கொண்டு வரப்பட்டு அண்மையில் மேலவையிலும் அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது…
வேலைச் சட்டம் 1955 திருத்தம்: தொழிற்சங்கங்களைக் கருவறுக்கும் திட்டம்
ஜீவி காத்தையா, மலேசிய அரசாங்கம் கடந்த அக்டோபர் மாதம் நடப்பிலிருக்கும் வேலைச் சட்டம் 1955 க்கு இருபதுக்கு மேற்பட்ட சட்டத் திருத்தங்களை நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தது. அவை எவ்வித மாற்றமுமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. நாடாளுமன்ற மேலவை அத்திருத்தங்களை டிசம்பர் 22 இல் ஏற்றுக்கொண்டது. இச்சட்டத் திருத்தத்தினால் தொழிலாளர்களின் உரிமைப்…
பக்கத்தானுடன் கூட்டு: அலியாஸ் எம்டியுசியை பிரநிதிக்கவில்லை
தொழிலாளர் சட்டங்களுக்கு முன்மொழியப்பட்டிருக்கும் திருத்தங்களுக்கு எதிராக அரசாங்கத்துடன் "போர் தொடுக்க" தயாராக இருப்பதாகக் கூறப்படுவதை மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (எம்டியுசி) மிகத் தீவிரமாக மறுத்துள்ளது. "இந்த அறிக்கையில் நிச்சயமாக உண்மை இல்லவே இல்லை. அது காங்கிரஸ்சின் அதிகாரப்பூர்வமான கொள்கையைப் பிரதிநிதிக்கவில்லை", என்று அக்காங்கிரஸ்சின் தலைமைச் செயலாளர் அப்துல் ஹாலிம்…
எம்டியூசி பக்காத்தானுடன் உடன்பாடு செய்து கொள்ள முன்வருகிறது
நாடாளுமன்றத்தில் வேலைச் சட்டத் திருத்தங்களை பக்காத்தான் ராக்யாட் நிராகரிக்குமானால் அதற்கு ஈடாக தேர்தல் ஆதரவு வழங்க எம்டியூசி எனப்படும் மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் முன்வந்துள்ளது. ஜோகூர் பூலாயில் நிகழும் பிகேஆர் பொதுப் பேரவையில் நிருபர்களிடம் பேசிய எம்டியூசி பொருளாளர் அலியாஸ் அவாங், அந்தத் தகவலை வெளியிட்டார். ஆதரவு தெரிவிப்பதைக் குறிக்கும்…
எம்டியுசி மறியல் போராட்டம்: பினாங்கில் 1,000 தொழிலாளர்கள் கூடினர்
வேலைச் சட்டம் 1955 க்கு செய்யப்பட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தொழிலாளர்களின் மறியல் போராட்டம் நேற்று பினாங்கு, பட்டர்வொர்த்தில் நடைபெற்றது. கனத்த மழையையும் இடியையும் பொருட்படுத்தாமல் 1,000 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் அப்போராட்டத்தில் பங்கேற்றனர். அப்போராட்ட மறியலை மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸின் (எம்டியுசி) பினாங்கு கிளை முன்னின்று நடத்தியது.…
வேலைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மறியல் போராட்டம்
கடந்த அக்டோபர் மாதத்தில் வேலைச் சட்டம் 1955 க்கு செய்யப்பட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நாடு முழுவதிலும் மறியல் போராட்டம் நடத்தினர். நாட்டில் இருபது இடங்களில் நடந்த தொழிலாளர்களின் மறியல் போராட்டத்தை மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (எம்டியுசி) முன்னின்று நடத்தியது. சட்டத் திருத்தத்தின் பல்வேறு பகுதிகளுக்கு,…
BN-இன் ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும்
அக்டோபர் 6 இல் நாடாளுமன்றம் தொழில் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவர ஏற்றுக்கொண்ட மசோதாவை மீட்டுக்கொள்வதே சிறந்தது என்கிறார் சுவராம் என்ற மனித உரிமை கழகத்தின் தலைவரான கா. ஆறுமுகம். தொழிலாளர்களின் உரிமைகளுக்கு சாவு மணி அடிக்கும் தன்மை கொண்ட இந்த மாற்றங்கள், தொழிலாளர்களை உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் ஜடப்பொருட்களாக மாற்றி,…
எம்டியுசி மறியல் போராட்டம்: என்யுபிடபுள்யு ஆதரிக்காது
அக்டோபர் 7 இல் நாடாளுமன்றம் சட்டமாக்கிய "ஏற்றுக்கொள்ள முடியாத" வேலைச் சட்டத்திற்கான திருத்தங்களுக்கு எதிராக நாளை மறியல் போராட்டத்தில் இறங்குவதற்கு மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (எம்டியுசி) தாயாராக இருக்கிறது. அந்த மறியல் போராட்டத்தில் எம்டியுசியில் அங்கம் பெற்றுள்ள 200க்கு மேற்பட்ட தொழிற்சங்கங்களில் எத்தனை பங்கேற்கும் என்பது உறுதிப்படுத்தப்படாத நிலையில்,…
போலீசார்: மறியலை நடத்த எம்டியூசி அனுமதி பெற வேண்டும்
1955ம் ஆண்டுக்கான வேலை வாய்ப்புச் சட்டங்களை எதிர்த்து நாளை நாடு முழுவதும் மறியல்களை நடத்துவதற்கு எம்டியூசி என்ற மலேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் போலீஸ் அனுமதிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டியது அவசியம் என உள்நாட்டுப் பாதுகாப்பு, பொது ஒழுங்குப் பிரிவின் இயக்குநர் சாலே மாட் ரஷிட் கூறுகிறார். மறியல்கள் நடத்தப்படும் இடங்கள்,…
எம்டியூசி நவம்பர் 3ம் தேதி நாடு முழுவதும் மறியலை நடத்தும்
கடந்த வாரம் மக்களவை ஏற்றுக் கொண்ட வேலை வாய்ப்புச் சட்டத் திருத்தங்களை எம்டியூசி என்ற மலேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் வன்மையாக ஆட்சேபிக்கிறது. அந்தத் திருத்தங்களை நிராகரிப்பதற்காக காரணங்களை விளக்கி பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு அது கடிதம் எழுதும் என எம்டியூசி தலைவர் முகமட் அலி அத்தான் கூறினார்.…
கட்டணத்தைக் குறைப்பீர்: டெல்கோவுக்கு எம்டியுசி கோரிக்கை
மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (எம்டியுசி), தொலைத்தொடர்பு நிறவனங்கள் அவற்றின் சேவையைத் தரத்தை உயர்த்தி கட்டணங்களைக் குறைக்க வேண்டுமே தவிர 6 விழுக்காடு சேவை வரி என்று மக்களின் சுமையை அதிகரிக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டிருக்கிறது. அந்த வரியை அவர்களே ஏற்றுகொண்டு அதன் பின்னரும்கூட மிகப் பெரிய அளவில் ஆதாயம் காண…