வேட்பாளர்களுக்கு இரண்டு அங்கீகாரக் கடிதங்களை சரவாக் டிஏபி கொடுத்துள்ளது

dapசரவாக் டிஏபி தனது ஏழு வேட்பாளகளுக்கு இன்று பிற்பகல் டிஏபி, பாஸ் கட்சிகளின் அங்கீகாரக் கடிதங்களை  வழங்கியுள்ளது. அதே வேளையில் பிகேஆர் அங்கீகாரக் கடிதங்களுக்காக அது காத்திருக்கிறது.

டிஏபி கட்சியின் மத்திய செயற்குழுவை அங்கீகரிக்கவில்லை எனக் கூறும் தனது கடிதத்தை சங்கப் பதிவதிகாரி  ரத்துச் செய்ய மறுத்தால் சபா, சரவாக்கில் உள்ள தங்கள் வேட்பாளர்கள் பிகேஆர் சின்னத்தில் போட்டியிட  வேண்டும் என டிஏபி முடிவு செய்துள்ளது.

இன்று காலை மணி 4.30க்கு கோலாலம்பூரில் உள்ள டிஏபி தலைமையகத்துக்கு அங்கீகாரக் கடிதங்களை அனுப்புவதற்கு பாஸ் கட்சி மிகை நேர வேலை செய்துள்ளதாக சரவாக் டிஏபி தலைவர் வோங் ஹோ லெங் கூறினார்.

“இன்று காலை மணி 4.30 வாக்கில் கடிதங்கள் கிடைத்ததாக கட்சி ஊழியர்கள் கூறிய போதிலும் பிகேஆர் நேற்றிரவு மிகை நேர வேலை செய்யவில்லை,” என்றும் அவர் சொன்னார்.dap1

வோங் பின்னர் டிஏபி, பாஸ் அங்கீகாரக் கடிதங்களை கட்சி வேட்பாளர்களிடம் ஒப்படைத்தார்.

டிஏபி தனது சொந்த சின்னத்தில் போட்டியிட வேண்டாம் என இன்று பிற்பகல் மூன்று மணி வாக்கில் டிஏபி  முடிவு செய்தால் சரவாக்கில் உள்ள வேட்பாளர்கள் ஏற்கனவே கட்சித் தலைமைத்துவம் முடிவு செய்ததைப்  போல பிகேஆர் சின்னத்தில் நிற்பார்கள்.

என்றாலும் விமானப் பயணத்தின் மூலம் செல்ல முடியாத உட்புறப்பகுதிகளில் உள்ள வேட்பாளர்கள்-(பயணம்  செய்வது சிரமமாக இருக்கும்) உரிய நேரத்தில் பிகேஆர் கடிதம் கிடைக்கா விட்டால் பாஸ் சின்னத்தின் கீழ்  போட்டியிடலாம்.

டிஏபி-யின் காபிட் வேட்பாளர் ராம்லி மாலாக்காவுக்கு டிஏபி, பாஸ் கட்சிகளின் அங்கீகாரக் கடிதம்
கொடுக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார். அவர் இன்று பிற்பகல் காபிட்டுக்குச் செல்லும் கடைசி படகில் புறப்பட்டுள்ளார்.

இதனிடையே லாவாஸ் வேட்பாளர் பாரு லாங்குப்-பின் புதல்வி தமது தந்தைக்காக அங்கீகாரக் கடிதங்களை பெற்றுக் கொண்டு லாவாஸுக்குப் புறப்பட்டு விட்டார்.

 

TAGS: