‘அம்னோ, பெர்க்காசா ஆளுமையின் கீழ் இருப்பது உறுதியாகியுள்ளது’

aliஉங்கள் கருத்து : “என் நினைவுக்கு எட்டிய வரை தேர்வு செய்யப்பட்ட பிஎன் வேட்பாளர் ஒருவர் நியமன நாளன்று வேட்பு  மனுவைத் தாக்கல் செய்யாதது இதுவே முதன் முறை”

பாசிர் மாஸில் பிஎன் விலகிக் கொண்டது, இப்ராஹிம் அலி நேரடிப் போட்டியில்

பெர்ட் தான்: இப்ராஹிம் அலியை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் வெளிப்படையாக அங்கீகரித்த  போதிலும் அவரை பிஎன் தலைவர் நஜிப் ரசாக் வேட்பாளராகக் குறிப்பிடவில்லை. “பிரதமரைப் போல  இயங்கும்” மகாதீர் சொன்னதை நிராகரிக்கும் துணிச்சல் நஜிப்-புக்கு ஒரு முறையாவது வந்தது என என்  மனைவி கூறினார்.

இந்தியர்களையும் இந்து சமயத்தையும் அவமானப்படுத்தும் சொற்களைச் சொல்லிய பெர்க்காசா உதவித் தலைவர் சுல்கிப்லி நூர்டினை நஜிப் ஷா அலாம் வேட்பாளராக பெயர் குறிப்பிட்டார். ஒரு பெர்க்காசா தலைவரை போட்டியிட அனுமதித்ததின் மூலம் மகாதீரை அவர் சமாதானப்படுத்தி விட்டதாக நாங்கள்
கருதினோம்.

நாங்கள் எண்ணியது தவறாகி விட்டது. நஜிப் மிகவும் மோசமானவர். இரண்டு இனவாத, வெறி பிடித்த
பெர்க்காசா தலைவர்கள் பிஎன் தரப்பில் களமிறங்கியுள்ளனர். அம்னோ தேர்வு செய்த வேட்பாளர் விலகிக்
கொண்டதின் மூலம் பிஎன் – நட்பு சுயேச்சையாக இப்ராஹிமுக்குப் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

என் நினைவுக்கு எட்டிய வரை தேர்வு செய்யப்பட்ட பிஎன் (முன்பு கூட்டணி) வேட்பாளர் ஒருவர் நியமன நாளன்று வேட்பு மனுவை எந்தக் காரணத்துக்கும் தாக்கல் செய்யாதது இதுவே முதன் முறை.

ஆகவே ஹிண்ட்ராப்-பையும் அதன் தலைவர் பி வேதமூர்த்தியையும் நம்பும் எல்லா இந்தியர்களையும் நாங்கள்  கேட்டுக் கொள்வது இது தான்: “நீங்கள் இன்னும் நஜிப் வாக்குறுதிகளில் நம்பிக்கை வைத்துள்ளீர்களா ?”

ஒர் இனவாதி என எல்லாருக்கும் தெரிந்த இப்ராஹிம் அலி வெற்றி பெறுவதை உறுதி செய்ய பிஎன் வேட்பாளரை விலகிக் கொள்ளச் செய்து நஜிப் மக்களை எப்படி ஏமாற்றியுள்ளார் பார்த்தீர்களா ?

கோஜெண்ட்: நஜிப்பும் அம்னோவில் உள்ள அவரது கூட்டாளிகளும் நடத்தும் இன்னொரு நாடகம் இதுவாகும்.  அவர் அப்பட்டமாக சுல்கிப்லி நூர்டினைக் கொண்டு வந்தார். மகாதீருடைய தீய எண்ணத்துக்கு இணங் இப்ராஹிம் அலியை கொண்டு வர அவர் தில்லுமுல்லு செய்துள்ளார்.கிறிஸ்துவர்கள், இந்தியர்கள், நல்ல  சிந்தனை கொண்ட மலேசியர்கள் ( அவர்களில் பெரும்பாலோர் பாசத்துக்குரிய மலாய்க்காரர்கள்) ஆகியோருடைய உணர்வுகளுக்கு நஜிப்பும் ஆளும் கட்சியும் மதிப்பளிக்கவே இல்லை.

எனக்கு மலாய் நண்பர்கள் நிறைய உள்ளனர். அவர்கள் சுல்கிப்லி நூர்டின், இப்ராஹிம் அலி, டாக்டர் மகாதீர் ஏன் நஜிப், அவரது கூட்டளிகள் ஆகியோரைப் போன்று சிந்திப்பதே இல்லை. ஆகவே நாம் அவரையும் அம்னோவையும் ஒதுக்க வேண்டும்.

குவிக்னோபாண்ட்: பிஎன் வலியுறுத்தும் ‘உருமாற்றம்’ இது தானா ? எல்லாம் பொய்கள். ஒரே மலேசியா வெறும் கேலிக் கூத்து. இனவாதம், தீவிரவாதம் ஆகியவற்றுக்கு அம்னோ துணை போகிறது.

Up2U: இப்போது கயிறுகளை இழுக்கும் ( பொம்மலாட்டக்காரர் ) உண்மையான பிரதமர் யார் என்பது தெரிந்து
விட்டது.

முஷிரோ: இந்தியர்களையும் சீனர்களையும் ஏமாற்ற அம்னோ நடத்திய நல்ல ‘நாடகம்’ அதுவாகும். அம்னோ
செல்ல வேண்டிய பாதையை வகுப்பது மகாதீர் என்பதும் தெளிவாகி விட்டது. நஜிப் அவர் சொல்லுக்குக்
கீழ்ப்படிகிறார்.

கறுப்பு வீரன்: கொல்லைக் கதவு வழியாக இப்ராஹிம் அலியை நிறுத்துவது தான் பிஎன் நோக்கம். இது போன்ற  தந்திரத்தின் மூலம் மக்களை ஏமாற்ற வேண்டாம். மக்கள் முட்டாள்கள் அல்ல. அது போன்ற தந்திரத்துக்கு  ஹிண்ட்ராப் மட்டுமே பலியாகும்.

பேஸ்: துன் டாக்டர் மகாதீர் தாம் நினைத்ததைச் சாதிக்கிறார். கெடாவில் அவரது புதல்வர் முக்ரிஸ் நிறுத்தப்பட்டுள்ளார். கிளந்தானில் இப்ராஹிம் அலி.

போட்டியிலிருந்து விலகிக் கொள்ள பணம் கொடுப்பது தான் ஒரே வழி. மகாதீரைப் போன்ற செல்வந்தர்களுக்கு அது பெரிதல்ல.

இது சே ஜோஹான், இப்ராஹிம், நஜிப், மகாதீர் ஆகியோருக்கு வெற்றி-வெற்றி சூழ்நிலை. அதனால் தான் சே ஜோஹான் வேட்பாளர் நியமன மய்யத்தில் இருந்தார்.

பாசிர் மாஸ் வாக்காளர்கள் அந்த மோசடியை உணர்ந்து இப்ராஹிம் அலியை தூக்கி எறிய வேண்டும். அதனால் சே ஜோஹான், நஜிப், மகாதீர் ஆகியோர் அவமானப்பட வேண்டும்.

விசுவாசி: உண்மையில் இது அபத்தமானது ! பிஎன் அடுத்தடுத்து தவறுகளைச் செய்து கொண்டிருக்கிறது.
இப்ராஹிம் அலியை ‘நிறுத்திய’ சதி தீவகற்ப மலேசியாவில் மட்டுமின்றி சபா, சரவாக்கில் உள்ள ஒதுக்குப்புறமான பகுதிகளில் கூட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த அரசாங்கத்தை பிஎன் அமைக்கும் சாத்தியம் உள்ளது என நான் இப்போது நம்புகிறேன்.

ஒஎம்ஜி: இப்ராஹிம் அலி, சுல்கிப்லி நூர்டின், பெர்க்காசா ஆகியவை அம்னோ தேர்தல் எந்திரத்தில் ஒரு பகுதி
என்பது தெளிவாகி விட்டது. அம்னோ இனவாதக் கட்சி என்பதும் தெரிந்து விட்டது.

நாட்டின் சமய, இன அமைப்பை கடந்த 55 ஆண்டுகளாக சீரழித்து வந்துள்ள அந்த இனவாதக் கட்சியை சரியான சிந்தனையைக் கொண்ட வாக்காளர்கள் நிராகரிக்க வேண்டும்.

ஜெஸி: நஜிப் பசுத்தோல் போர்த்திய புலி. பக்கம் மலாய்க்காரர் அல்லாதாரைக் கவர ஒரு கையை நீட்டுகிறார். இன்னொரு கையில் கிரிஸ் கத்தியை வைத்துக் கொள்கிறார்.

TAGS: