இசி: சிம் சுயேச்சையாகவும் போட்டியிடுவது சரியானதே

electionகோத்தா மலாக்கா டிஏபி எம்பி சிம் தொங் ஹிம் -மீது கட்சித் தலைவர்களுடைய நெருக்குதல் அதிகரித்து வரும்  வேளையில் அந்த மூத்த அரசியல்வாதி சட்டமன்றத் தொகுதி ஒன்றுக்கு சுயேச்சையாகப் போட்டியிடுவதும்  சட்டப்பூர்வமாக சரியானதே என்று தேர்தல் ஆணையம் (இசி) கூறியிருக்கிறது.

வேட்பாளர் ஒருவர் இந்தத் தேர்தலில் கட்சி சின்னத்தில் ஒரு தொகுதியிலும் இன்னொரு தொகுதியில்  சுயேச்சையாகவும் போட்டியிடுவது சரியா என வினவப்பட்ட போது இசி தலைவர் அப்துல் அஜிஸ் முகமட்  யூசோப், அது சட்ட ரீதியில் சரியானது எனப் பதில் அளித்தார்.sim

“சட்ட கண்ணோட்டத்தில் பார்த்தால் இசி-க்கு எந்தப் பிரச்னையும் இல்லை,” என அஜிஸ் மலேசியாகினிக்கு  அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில் தெரிவித்தார்.

65 வயதான சிம், தமது கோத்தா மலாக்கா நாடாளுமன்றத் தொகுதியை தக்க வைத்துக் கொள்ளப்  போட்டியிடுவதோடு சுயேச்சையாக கோத்தா லக்ஸ்மாணா சட்டமன்றத் தொகுதியிலும் களமிறங்கியுள்ளார். அந்த  கோத்தா லக்ஸ்மாணா தொகுதியில் அதிகாரத்துவ டிஏபி வேட்பாளர் லாய் குன் பான் ஆவார்.

TAGS: