‘ஒளிவுமறைவு வேண்டாம், இண்ட்ராப்-பிஎன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முழுமையாக வெளியிடுவீர்’

1 hindஉங்கள் கருத்து : ‘கணேசன் அவர்களே, இந்தப் எம்ஓயு-வால் (புரிந்துணர்வு ஒப்பந்தம்) நன்மையா, இல்லையா என்ற விவாதத்துக்கு முடிவு கட்டுவோம். எம்ஓயுவை முழுமையாக வெளியிடுங்கள். நாங்களே படித்துத் தெரிந்துகொள்கிறோம்’

கேள்வி-பதில்: இண்ட்ராபின் அண்மைய நிலவரங்கள்

குட்டிஜாம்பவான்: தனது செயல்திட்டத்தை ஏற்றுக்கொள்ளும்படி செய்வதற்காக பக்காத்தானுடன் 24 சந்திப்புகளை நடத்தியதாக இண்ட்ர்பாப் கூறிக்கொள்கிறது. இந்திய சமூகத்தின் முழு ஆதரவைப் பெறுவதற்காக பக்காத்தான் செயல்திட்டத்தை அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கலாம்.

ஆனால், நல்லதற்கோ கெட்டதற்கோ அது அவ்வாறு செய்யவில்லை. பிஎன் சில தடவைகள்தான் இண்ட்ராபைச் சந்தித்துப் பேசியது. தேர்தல் இரண்டு வாரம் இருக்கும் வேளையில் இண்ட்ராபுடன் ஓர் ‘ஏற்பாடு’ செய்துகொண்டது.

இதிலிருந்து பிஎன், இண்ட்ராபின் பலவீனத்தையும் அதன் அவசரத்தையும் கண்டுகொண்டு விட்டது என்பது தெரியவில்லையா? வேறுவழி தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த இண்ட்ராப் அந்த ‘ஏற்பாட்டு’க்கு ஒப்புக்கொண்டு அதை ஒரு தேர்தல் தந்திரமாகப் பயன்படுத்திக்கொள்ள பிஎன்னுக்கு அனுமதி வழங்கிவிட்டது என்று சொல்வது தப்பாகாது.

முஷிரோ: பிஎன்னுக்கும் பக்காத்தானுக்கும் வெவ்வேறு வகை நிபந்தனைகள் விதித்தது ஏன்? பக்காதானுடன் பேசியபோது தனது செயல்திட்டம் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று விரும்பிய இண்ட்ராப், பிஎன்னுடன் 18 கோரிக்கைகளில் 4 மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் ஒப்பந்தம் செய்துகொண்டது ஏன்?

தேர்தலில் போட்டியிட இடங்கள் கேட்டார்களே அதைப் பற்றி கணேசன் எதுவும் சொல்லாதது ஏன்? பக்காத்தானிடம் விடுத்த அக் கோரிக்கையை பிஎன்னிடம் விடுக்காதது ஏன்?

தெமங்கோங்: எப்படியும் இண்ட்ராப் ஆதரவும் இந்தியர்களின் ஆதரவும் தங்களுக்குத்தான் என்று தப்புக்கணக்கு போட்டு விட்டது பக்காத்தான். புத்ரா ஜெயாவை நோக்கிப் பயணப்படுவதற்கு முன்பே  சறுக்கிக்கொண்டார்கள்.

இப்படிப்பட்ட மாற்றரசுக் கட்சி நமக்கு வேண்டாம். பக்காத்தான் தலைவர்கள் அன்வார் இப்ராகிம், லிம் குவான் எங்,, நிக் அசிஸ் நிக் மாட், அப்துல் ஹாடி ஆவாங் ஆகியோர்தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

பெயரிலி: ஒன்று மட்டும் நல்லா தெரிகிறது. மனிதர்களின் பலவீனம்தான். பணத்தின் சபலத்துக்கு அடிமையாகாதவரே இல்லைபோலும் (இது எல்லா இனத்தவருக்கும் பொருந்தும்). ஐயா, உங்கள் விளையாட்டில் ஏழைகளைப் பகடைக்காய்களாக பயன்படுத்தாதீர்கள்.

ரெத்தினம்: இண்ட்ராப்தான் பக்காத்தானின் எதிரி. 13-வது பொதுத் தேர்தலில் இண்ட்ராப் பிஎன்னை ஆதரிக்கப் போகிறது. பக்காத்தானுக்கு இண்ட்ராப் ஆதரவாளர்களின் வாக்கு கிடைக்காது.

இதனால் பக்காத்தானுக்கு நட்டமா? அது, இண்ட்ராபால் எத்தனை வாக்குகளை பிஎன்னுக்குக் கொண்டுவர முடியும் என்பதைப் பொறுத்துள்ளது.

ஜீன் பியர்: இது என்ன வகுப்புவாத போராட்டமா? இண்ட்ராப், பக்காத்தானை மேட்டுக்குடியினருக்கும் தொழில் அதிபர்களுக்கும் நிபுணர்களுக்கும் சேவை செய்யும் கட்சியாகவும் தன்னை பெரும்பாலான ஏழை இந்தியர்களைக் கைதூக்கிவிடப் போராடும் அமைப்பாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறது.

முடிவில், வெற்றி பெறப்போவது பிஎன்தான். இண்ட்ராபோ, பக்காத்தானோ, மக்களோ அல்ல.

கலா: நல்லவர்கள் நிறைய பேர் இருந்ததுண்டு. பிறகு அவர்கள் தங்கள் இலட்சியத்தையும் அரசியல் குறிக்கோளையும் கைவிட்டு அரசுடன் கொஞ்சிக் குலவத் தொடங்கி விட்டார்கள்( எ-டு லீ லாம் தை, சந்த்ரா முஸாபார் போன்றோர்)

மலேசியன்1960: இந்தக் கேள்வி-பதில் விளக்கமெல்லாம் இண்ட்ராப் தலைவர்கள் பற்றிய மக்களின் கருத்தை- அவர்கள் பிஎன்/அம்னோவிடம் விலைபோய்விட்டார்கள் என்ற கருத்தை மாற்றப்போவதில்லை.

சரியான தலைமைத்துவம் இல்லாததுதான் இந்தியர்கள் ஓரங்கட்டப்பட்டவர்களாக இருப்பதற்குக் காரணமாகும். சரவாக் இபான் இனத்தவரின் நிலையும் இதுதான். அதன் தலைவர்களுக்கும் ஏழைகளுக்கு உதவுவதில் அக்கறை இல்லை, தங்களை வளப்படுத்திக்கொள்வதில்தான் குறியாக இருக்கிறார்கள்.

கேஎஸ்டி: இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன தன் கோரிக்கைகள் நிறைவேறினால் போதும் என்று நினைப்பவர் ஓர் உயர்நிலை கபடதாரி.

வேதமூர்த்திக்கு என் வாக்கு இல்லை.

பெயரிலி  #44199885: கணேசன் அவர்களே, இந்தப் எம்ஓயு(புரிந்துணர்வு ஒப்பந்தம்)-வால் நன்மையா, இல்லையா என்ற விவாதத்துக்கு முடிவு கட்டுவோம். எம்ஓயுவை முழுமையாக வெளியிடுங்கள். நாங்களே படித்துத் தெரிந்துகொள்கிறோம்.

இனவாதிகளான சுல்கிப்ளி நோர்டின், டாக்டர் மகாதிர் முகம்மட் இப்ராகிம் அலி போன்றோரை வெளிப்படையாக ஆதரிக்கும் அம்னோ கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் என்று நம்புகிறீர்களா? அம்னோவுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கொடுத்துவிட்டால் தேர்தல் தொகுதி எல்லைகளைத் திருத்தி மலாய்க்காரர்-அல்லாதாரின் வாக்குகளை அர்த்தமற்றவையாக்கி விடும்.

TAGS: