‘கனி- மலாய் கனவான் தீவிரவாதியானார்’

limஜோகூர் கேலாங் பாத்தாவில் தம்மை எதிர்த்துப் போட்டியிடும் நடப்பு ஜோகூர் மந்திரி புசார் அப்துல் கனி  ஒஸ்மான் குறித்த தமது மதிப்பீட்டை டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் குறைத்துக் கொண்டுள்ளார்.

“மிதமான, நியாயமான கருத்துக்களைக் கொண்ட சிறந்த மலாய் கனவான்,” எனத் தாம் தொடக்கத்தில்  வருணித்த கனி  இப்போது பெர்க்காசா தலைவரைப் போன்ற ஒருவராக மாறி விட்டார் என லிம் சொன்னார்.

“கனி மந்திரி புசாராக இருந்த 18 ஆண்டு காலத்தில் ஜோகூருக்கு முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும்
கொண்டு வந்துள்ளதாக நான் எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் பாராட்டினேன்,” என அவர் இன்று காலை
நிருபர்களிடம் கூறினார்.

“ஆனால் வேட்பாளர் நியமன நாளுக்கு பின்னர் கனி விடுத்த இரண்டு அறிவிப்புக்கள் அவரைக் குறிப்பதாகவே
இல்லை.”

கனி ஜோகூரில் இன ரீதியாக ஒன்று சேரும் போக்கை உருவாக்க பக்காத்தான் ராக்யாட் முயலுகிறது எனக்
கூறியிருப்பதையும் லிம்-முக்கு வாக்களிப்பது, 13வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ராக்யாட் வெற்றி
பெற்றால் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் பிரதமராக நியமிக்கப்படுவதற்கு வழி வகுத்து விடும் என
மலேசிய சீனர்களுக்கு எச்சரித்துள்ளதையும் லிம் குறிப்பிட்டார்.

“கனி பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி, உதவித் தலைவர் சுல்கிப்லி நூர்டின் ஆகியோரைப் போன்ற
தொனியில் பேசுகிறார். அது மிதவாதப் போக்குடைய நியாய சிந்தனையைக் கொண்ட அரசியல் தலைவர்
என்னும் அவரது தோற்றத்திற்கு முற்றிலும் முரண்பாடாக உள்ளது,” என லிம் மேலும் சொன்னார்.

“மிகவும் வலுவான தலைவராக நஜிப் (அம்னோ தலைவர்) இல்லாமல் (முன்னாள் பிரதமர் டாக்டர்) மகாதீர்
(முகமட்) இருக்கும் இன்னாள் அம்னோவில் நிலைத்திருப்பதற்கு மிதவாதத் தலைவர்கள் கொடுக்க வேண்டிய
விலை இதுவா ?”

 

TAGS: