இசி: மீட்டுக் கொள்வது அனுமதிக்கப்பட மாட்டாது- பெயர்கள் வாக்குச் சீட்டுக்களில் இருக்கும்

ecவேட்பாளர் நியமனங்கள் இறுதி முடிவு செய்யப்பட்ட வேட்பாளர்கள் 13வது பொதுத் தேர்தலில்  போட்டியிடுவதிலிருந்து விலகிக் கொள்ள முடியாது.

போட்டியிலிருந்து விலகிக் கொள்வதற்கு அனுமதித்த சட்ட விதி ரத்துச் செய்யப்பட்டு விட்டதாக தேர்தல்  ஆணையத் (இசி) வான் அகமட் வான் ஒமார் இன்று கூறினார்.

“1980ம் ஆண்டுக்கான தேர்தல் விதிமுறைகளில் அந்த விதிமுறை இப்போது இல்லை. வேட்பாளர் நியமனங்கள்  ஏற்றுக் கொள்ளப்பட்ட யாருடைய பெயரும் வாக்குச் சீட்டுக்களில் இடம் பெறும். மக்கள் அவர்களுக்கு  வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்,” என அவர் இன்று புத்ராஜெயாவில் நிருபர்களிடம் கூறினார்.

என்றாலும் தாங்கள் மீட்டுக் கொள்வதாக வேட்பாளர்கள் பிரகடனம் செய்து கொள்ளலாம். அது அவர்களுடைய ‘சொந்தத் தேர்வாக’ இருக்கும். ஆனால் வாக்குச் சீட்டுக்களில் மாற்றம் ஏதுமிருக்காது என்றும் வான் அகமட் சொன்னார்.

“அவை உட்கட்சி விவகாரங்கள். சட்டத்தைப் பொறுத்த வரையில் இது தான் இறுதியானது. நாடு முழுவதும் ஏழு  சட்டமன்றத் தொகுதிகளில் பிகேஆர் கட்சியும் பாஸ் கட்சியும் மோதிக் கொள்கின்றன. மற்ற தரப்பை ஆதரிக்குமாறு ஏதாவது ஒரு கட்சி பொது மக்களைக் கேட்டுக் கொள்வது தான் இப்போது அவற்றுக்கு உள்ள ஒரே வழி என்பதை வான் அகமட்டின் அறிவிப்பு உணர்த்துகின்றது.

 

TAGS: