நஜிப்: சுல் நோர்டின் இந்தியர் நலனுக்காக பாடுபடுவார்

1 najib 1பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக், பெர்காசா உதவித் தலைவர் சுல்கிப்ளி நோர்டின் இந்துக்கள் குறித்துத் தெரிவித்த கருத்துகளால் ஏற்பட்டுள்ள  ஆத்திரத்தைத் தணிக்கும் முயற்சியில் இன்று  ஈடுபட்டார்.  இந்தியர்கள் இப்போது சுல்கிப்ளியுடன் நட்புடன் இருப்பதாக அவர் கூறினார்.

“இந்தியர்களில் சிலர் அவருக்கு முத்தம்கூட கொடுத்திருக்கிறார்கள்”, என்று குறிப்பிட்ட நஜிப், சுல்கிப்ளி ஷா ஆலம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதைத் தாம் அங்கீகரித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

“அவர் அன்று சொன்னதை மறந்து விடுங்கள்.  அதற்காக அவர் மன்னிப்பு கே ட்டுக்கொண்டார்.  அதை அப்படியே விட்டு விடுவோம்”,  என்று பராமரிப்பு அரசாங்கத்தின் பிரதமரான நஜிப் கூறினார். மேலும், அது சுல்கிப்ளி “ஒழுக்கக்கேடான” கட்சியில்  இருந்தபோது பேசிய பேச்சு .

சுல்கிப்ளி இப்போது தம் தொகுதியில் உள்ள இந்தியர்களின் நலன் காக்கப்போவதாக சூளுரைத்துள்ளார் என நஜிப் கூறினார்.

“இந்தியர்கள்  ஆலயங்கள், பள்ளிக்கூடங்களை விரும்புகிறார்கள். அவற்றைப் பெற்றுதரப்போவதாக அவர் என்னிடம் தெரிவித்தார்”, என நஜிப் மேலும் கூறினார்.

TAGS: