ஜோகூர் பாருவில் முன்னாள் இராணுவத் தளபதியின் ‘போஸ்னியா போர் திட்டம்’

1 hashimமுன்னாள் இராணுவத் தளபதி ஹஷிம் உசேன், 1990-இல் போஸ்னியா-ஹெசகோவினாவின் உள்நாட்டுப் போரில் செயல்படுத்தி வெற்றிகண்ட அதே போர் திட்டத்தை ஜோகூர் பாருவில் அம்னோவின் மூத்த தலைவரான ஷாரிர் அப்துல் சமட்டுக்கு எதிராகவும் கடைப்பிடிப்பார்.

“அதை இப்போது விவரிக்கப்போவதில்லை. ஆனால் (போஸ்னியாவில் கடைப்பிடித்த) அதே போன்ற திட்டம்தான். ஜோகூர் பாரு சூழலுக்கு ஏற்ப அமைந்திருக்கும்.

1 hashim 1“போர்முறை பற்றிய கல்வியில் முதுநிலை பட்டம் பெற்றவன் நான். போர்முறைகள் பற்றி ஆய்வு செய்வதுதான் எங்கள் வேலை. கற்றதை இப்போது களத்தில் செயல்படுத்துவேன்”, என்றாரவர். ஹஷிம் நேற்று மாலை ஜோகூர் பாரு செண்டியுரி கார்டனில் நடைப்பயணம் செய்த பின்னர் கினிடிவியிடம் பேசினார்.

ஹஷிம், 1993-இல், போஸ்னியாவில் ஐநா பாதுகாப்புப் படையில் பங்கேற்க அனுப்பப்பட்ட மலேசியப் படைப்பிரிவுக்குத் தலைமை ஏற்றிருந்தார்.

துரோகி என்ற குற்றச்சாட்டு

1 hashim 2நேற்று ஜோகூர் பாருவில், சுமார் 200 முன்னாள் படைவீரர்கள் ஹஷிமுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்து அவரை “இன, சமய துரோகி”என முத்திரை குத்தியிருப்பது பற்றியும் அவரிடம் வினவப்பட்டது. அதை “மலிவான விளம்பரத் தந்திரம்” என்று ஒதுக்கித்தள்ளினார்.

“இப்போது நான் அம்னோவில் சேர்ந்தால் என்ன நடக்கும்? சேர்ந்தவுடனேயே எல்லாரும் ‘பாருங்கள் ஹிரோவை, இவர்தான் anak Malaysia sejati (உண்மையான மலேசிய மகன்) என்று பாராட்டுவார்கள்.

“நான் பிகேஆரில் சேர்ந்ததால் என்னைப் பற்றி என்னவெல்லாமோ கூறுகிறார்கள். சொல்வதைச் சொல்லட்டும். அது அவர்களின் விருப்பம். ஆனால், எனக்குத் தெரியும் நான் செய்தது சரி என்பது”.

இராணுவ, போலீஸ் உயர் அதிகாரிகள் 27 பேர் தமக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்ட ஹஷிம் அவர்கள் தம் கட்சியில் சேர சரியான நேரத்துக்குக் காத்திருக்கிறார்கள் என்றார்.

TAGS: