பக்காத்தான் புத்ரா ஜெயாவைக் கைப்பற்றினால் சரவாவுக்கு ஒரு புதிய சிஎம்?

1 limவரும் பொதுத் தேர்தலில் பக்காத்தான் ரக்யாட் புத்ரா ஜெயாவைக் கைப்பற்றினால் சரவாவுக்கு ஒரு புதிய முதலமைச்சர் கிடைக்கலாம் என்கிறார் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்.

பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால், மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) அரசாங்கக் கட்டுப்பாடின்றி முதலமைச்சர் அப்துல் தாயிப் மஹ்மூட் பற்றி விசாரிக்க வழி பிறக்கும் என்றாரவர்.

1 lim1“(பக்காத்தான் ஆட்சியில்) சட்டம் தன்போக்கில் செயல்பட அனுமதிக்கப்படும். எம்ஏசிசியும் ஆதாரங்களைத் தேடிப்பெற வசதியாக இருக்கும்”, என்று சரவாக் சிபுவில் பரப்புரை செய்தபோது லிம் கூறினார்.

நீண்டகாலம் முதலமைச்சராக இருந்துவந்துள்ள தாயிப் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளன என்பதால் அவற்றுக்கு “எங்காவது” ஆதாரங்கள் இருக்கத்தான் செய்யும் என்றாரவர்.

“ஆனால், இப்போது அந்த ஆணையம் அவருக்கு எதிராக விசாரணை செய்ய அஞ்சுகிறது”.

இப்போதைய நிலையில் மே 5-க்குப் பிறகும் தாயிப்தான் தொடர்ந்து முதலமைச்சராக இருப்பார். ஏனென்றால் நாட்டில் பொதுத் தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் சரவாக்கில் 2016-இல்தான் சட்டமன்றத் தேர்தல் என்பதால் அவரது தவணைக்காலம் பாதிக்கப்படாது.

 

 

TAGS: