இசி: பல வாக்காளர்கள் ஒரே பெயரைக் கொண்டிருந்தாலும் அவர்களை அடையாளம் காண முடியும்

1ecவாக்காளர்களின் பெயர்கள் ஒரேமாதிரியாக இருந்தாலும் அவர்களின் அடையாள அட்டை எண்களை வைத்து அவர்களை வேறுபடுத்த முடியும் என்கிறது தேர்தல் ஆணையம்(இசி).

மூன்று அடையாள அட்டைகள் அப் ரபர் ஆவாங் என்ற பெயரைக் கொண்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டிருப்பதற்கு இசி செயலாளர் கமருடின் முகம்மட் பாரியா மறுப்புத் தெரிவித்தார் என இன்றைய பெரித்தா ஹரியான் அறிவித்துள்ளது.

1ec1இதை இசி சரிபார்த்ததாகக் கூறிய கமருடின் (இடம்), அப் பெயரில் மூன்று பேர் இருப்பதாகவும் அவர்களின் கைரேகைகள், முகங்கள் வெவ்வேறானவை என்றும் தெரிவித்தார்.

“வாக்காளர் பட்டியலில் ஒரே மாதிரி பெயர்கள் இருப்பதால் குழப்பம் ஏற்படும் என்பதை இசி அறியும்.  ஆனால், பெயர்கள் ஒரே மாதிரி இருந்தாலும் அடையாள அட்டைகள் வெவ்வேறானவை”.

இஸ்மாயில் இப்ராகிம் என்ற பெயரில் 1,597 பேரும், பாத்திமா அப்துல்லா என்ற பெயரில் 1,401 பேரும், பாத்திமா இஸ்மாயில் என்ற பெயரில் 1,377 பேரும், பாத்திமா அஹ்மட் என்ற பெயரில் 1,377 பேரும், இஸ்மாயில் அஹ்மட் என்ற பெயரில் 1368 பேரும், அசிசா அஹ்மட் என்ற பெயரில் 1,039 பேரும் இருப்பதாக கமருடின் கூறினார்.

“பெயர்கள் ஒரே மாதிரி இருக்கலாம் ஆனால், இசி, சோதித்துப் பார்த்ததில் இவர்கள் வெவ்வேறு அடையாள அட்டைகள் வைத்திருப்பது தெரிய வந்தது”, என கமருடின் தெரிவித்ததாக மலாய் மெயிலும் கூறியுள்ளது.

 

 

TAGS: